Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

New Instagram Update Today 2022: முழுசா ரீல்ஸ்-க்கு மாற்றப்படும் இன்ஸ்டாகிராம்!

Priyanka Hochumin July 26, 2022 & 12:45 [IST]
New Instagram Update Today 2022: முழுசா ரீல்ஸ்-க்கு மாற்றப்படும் இன்ஸ்டாகிராம்!Representative Image.

New Instagram Update Today 2022: இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடாமல் பயித்தியம் பிடிக்குது என்ற அளவுக்கு மக்கள் இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்துகின்றனர். அப்படிப்பட்ட வெறித்தனமான இன்ஸ்டாகிராம் பயனர்களின் மனதை குளிர வைக்கும் வகையில் ஒரு அப்டேட் வரப்போகிறது. அது என்ன, எப்படி செயல்படும் போன்ற விவரங்களை பார்ப்போம்.

இன்ஸ்டா ஏன் இப்படி பண்ணிட்டாங்க?

அதாவது தங்களின் தளத்தை புதுப்பிக்கும் விதமாக ஒரு சில  முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இது இன்ஸ்டா பயன்படுத்தும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்குமா என்று பார்க்கலாம். இன்ஸ்டாகிராமின் இணை உரிமையாளரான மெட்டா அறிவித்தது என்னவென்றால், இனி எந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் அப்லோட் செய்தாலும் அது ரீல்ஸ் இல் விர்சுவலாக காண்பிக்கப்படும் என்று கூறியுள்ளது. இந்த அம்சம் பயனர்களுக்கு பிடித்தாலும் சரி அல்லது பிடிக்காமல் போனாலும் சரி, இது முற்றிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும் ஷார்ட் வீடியோக்களின் அளவை இரட்டிப்பாக்கவோ அல்லது மூன்று மடங்காகவோ செய்யும் புதிய ஆக்கப்பூர்வமான அம்சங்களை (new creative features) ரீல்கள் பெறுவதாகவும் அறிவித்தனர்.

இதுக்கு என்ன அர்த்தம்!

சமீப காலமாக ரீல்ஸ் மக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் ரீல்ஸ் என்றாலே டிக்டாக் மட்டும் தான் அனைவரின் நினைவுக்கு வரும். எனவே, அவர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் இன்ஸ்டாகிராம் இந்த இந்த முடிவுக்கு வந்திருக்கலாம். நீங்கள் அப்லோட் செய்யும் வீடியோ 15 நிமிடங்களுக்கு குறைவாக இருந்தால் அது ரீல்களாக மாற்றப்படும். இந்த முயற்சி மக்களின் ஏற்றதாகவும், அவர்களை மகிழ்விக்கும் முறையிலும் இருக்கும் என்று கருதப்படுகிறது. எனவே, இனிமே அனைத்து ஷார்ட் வீடியோகளையும் நாம் ரீல் ஸ்ட்ரீமில் காணலாம்.

இது சரி வருமா?

இந்த தகவல் வெளியானதும் எப்படியும் போல ஒரு கூட்டம் இதெல்லாம் சரி வராது என்று கூச்சல் போடத் தொடங்கியது. ஏனெனில் போட்டோ பகிர்வை பிரதானமாகக் கொண்ட இந்த தளத்திற்கு இந்த முடிவு சரியாக இருக்காது என்று கருதுகின்றனர். இதுவும் வாஸ்தவம் தான், இருப்பினும் ரீல்ஸ் பார்க்கும் ஆடியன்ஸ் தற்போது அதிகரித்து வருகின்றனர்.

அதே போல் போட்டோ ரீல்ஸ்

இது மட்டுமின்றி இன்ஸ்டாகிராம் ஒரு பிரபல போட்டோ தளமாக இருப்பதால் நாம் ஏன் இப்படி செய்யக்கூடாது என்று முடிவெடுத்து இதனை அறிவித்துள்ளனர். அதாவது இன்ஸ்டாவில் நீங்கள் புகைப்படங்களை எடிட் செய்து அதற்கு பின்னணியில் உங்களுக்கு பிடித்த பாடல்களை ஒலிக்கவிட்டு ரீல்ஸாக அப்லோட் செய்யலாம் என்று மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

போச்சு இதுவரைக்கும் வீடியோ எடுத்து ரீல்ஸ் போட்டு அட்டூழியம் பண்ணாங்க, இனிமே போட்டோ. அடுத்து என்னெல்லாம் வருமோ பொருத்திருந்து பார்ப்போம்.

New Instagram Update Today 2022, New Instagram Update Today reddit, New Instagram Update active now, New Instagram Update feed, New Instagram Update messages.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்