Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Facebook Password Stealing Apps: முக்கிய ஆவணங்களை உங்களுக்கு தெரியாமல் எடுக்கும் Apps!

Priyanka Hochumin May 18, 2022 & 18:15 [IST]
Facebook Password Stealing Apps: முக்கிய ஆவணங்களை உங்களுக்கு தெரியாமல் எடுக்கும் Apps!Representative Image.

Facebook Password Stealing Apps: உங்களின் மொபைல் போனில் இந்த ஆப் இருக்கா? உடனே டெலீட் பண்ணுங்க. காரணம்? 

சமீபத்தில் play store இல் இருக்கும் நிறைய ஆப்கள் நமது டேட்டாக்களை திருடுவதாக தகவல் வெளியாகி வருகிறது. இது குறித்து மக்கள் அனைவரும் பெரும் பீதியில் இருகின்றனர். ஆண்ட்ராய்டு போனில் voice phishing, ஹாக்கிங் போன்ற பல நூதன முறையில் பணம், பர்சனல் டேட்டா ஆகிய விவரங்களை  திருடி தவறான முறையில் பயன்படுத்துகின்றனர். இது மட்டுமல்லாமல் இப்பொழுது கிடைத்த அதிர்ச்சி தகவல்.

ட்ரெண்ட் மைக்ரோ என்னும் சைபர் செக்யூரிட்டி நிறுவனம், ஆண்ட்ராய்டில் ஸ்பைவேர் வகையான "ஃபேஸ்டீலர் (Face Stealer)கொண்டு இயங்கும் 200க்கும் மேற்பட்ட ஆப்களை (Password Stealing Apps) பிளேஸ்டோரில் பட்டியலிட்டுள்ளது. கூடுதலாக, அதே நிறுவனம் கிட்டத்தட்ட 40 போலி கிரிப்டோகரன்சி மைனர் பயன்பாடுகளை கண்டறிந்துள்ளது. அவை பயனர்களின் அனுமதி இன்றி கிரிப்டோ பணம் மற்றும் பல முக்கிய தகவல்களை திருட முயற்சிப்பதாக தெரிவித்துள்ளனர். இவர்கள் பட்டியலிடும் ஆப்களில், ஒரு சில செயலிகள் சுமார் 1,00,000-க்கும் அதிகமான இன்ஸ்டால்களை பெற்றதாக குறிப்பிட்டுள்ளனர். 

போனுக்கு வந்த மெசேஜ்...யோசிக்காமல் கிளிக் செய்துவுடன்...NIL பேலன்ஸ்!

அவர்கள் வெளியிட்ட தகவல் படி, இந்த ஏழு செயலிகளும் (7 Password Stealing Apps) மேலே குறிப்பிட்ட செயல்களில் ஈடுபட்டுள்ளது. இவற்றை நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருந்தால் உடனே எடுத்துவிடுங்கள். ஏனெனில், அவை இதுவரை என்னென்ன டேட்டாக்களை எடுத்திருக்கலாம் என்று நமக்கு தெரியாது. 

1. Daily Fitness OL - இந்த பெயரை பார்த்தவுடனே உங்களுக்கு தெரிந்திருக்கும். இது யுடிலிட்டிஸ் & டூல்ஸ் பிரிவில் வரும் ஃபிட்னஸ் ஆப் ஆகும்.

2. Panorama Camera - போனில் இருக்கும் இன்-பில்ட் கேமரா மூலம் பனோரமா படங்களை எடுப்பதற்கான ஆப்ஸ்.

3. Enjoy Photo Editor - உங்கள் போட்டோவை அழகாக எடிட் செய்வதற்கான ஆப்.

4. Business Meta Manager - உங்களின் பேஸ்புக் அக்கௌன்ட்டின் வணிக சுயவிவரங்களை நிர்வகிப்பதற்கான ஒரு பயன்பாடு.

5. Photo Gaming Puzzle - இது ஒரு கேம் ஆப்.

6. Swam Photo - ஆண்ட்ராய்டு போன்களில் இருக்கும் எடிட்டர் ஆப். இது போட்டோவில் இருக்கும் பின்னணியை (remove background) அகற்ற மற்றும் photo collages-ஐ உருவாக்க உதவுகிறது. 

7. Cryptomining Farm Your Own Coin - ஒரு கிரிப்டோகரன்சி பயன்பாடு. 

இப்பொழுது இதைப் பற்றி தெரிந்துகொண்டதால், நீங்களோ உங்களுக்குத் தெரிந்தவர்களையோ இன்ஸ்டால் செய்யாதீர்கள். நல்ல வேலை கூகுள் இதைத் தெரிந்துகொண்டு, உடனே அதை அகற்றிவிட்டது. இப்பொழுது அந்த ஆப்களை (Password Stealing Apps) பிலேஸ்டாரில் பார்க்க முடியாது, எனவே எந்த ஆபத்தும் இல்லை. இருப்பினும், அவை மூன்றாம் தரப்பு APK டவுன்லோட் தளத்தில் இயங்கலாம். எனவே கொஞ்சம் கூடுதல் கவனமாக இருங்கள்.

பேஸ்புக்கில் நடக்கும் சர்ச்சைகள்...10 வருட சேலஞ்ச் ஹாஷ்டேக்கால்...ஆபத்தா? முக்கிய தகவல்கள்!

பொதுவாக Face Stealer ஸ்பைவேரால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான பயன்பாடுகள் நெகடிவாக மதிப்பிடுகின்றனர். ஆனால் மேலே குறிப்பிட்ட செயலிகளில் (7 Password Stealing Apps) ஒரு சில பயன்பாடுகள் அப்படி மதிப்பிடவில்லை. போட்டோ கேமிங் புதிர் மற்றும் ஸ்வார்ம் ஃபோட்டோ ஆப்ஸ் போன்றவை 4.1 ஸ்டார் மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. மேலும் Google Play Store, என்ஜாய் போட்டோ எடிட்டரைவெளியேற்றுவதற்கு முன்பு 1,00,000 க்கும் மேற்பட்ட இன்ஸ்டால்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

facebook password stealing apps, password stealing apps, 7 password stealing apps

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்