Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nothing Phone 1 Launch Date in India: காத்திருந்தது போதும்...இன்னைக்கு வேற லெவல் ரிலீஸ்...நத்திங் போன் 1!

Priyanka Hochumin July 12, 2022 & 10:30 [IST]
Nothing Phone 1 Launch Date in India: காத்திருந்தது போதும்...இன்னைக்கு வேற லெவல் ரிலீஸ்...நத்திங் போன் 1!Representative Image.

Nothing Phone 1 Launch Date in India: நாம் எதிர்பார்த்திருந்த அந்த நாள் வந்துவிட்டது மக்களே. இன்று உலகளவில் அறிமுகமாகிறது நத்திங் போன் 1. எங்க, எப்படி, எப்பொழுது ரிலீஸ் போன்ற அனைத்து விவரங்களும் இதோ உங்களுக்காக இந்த பாதியில் பார்க்கலாம்.

லைவ் ஸ்ட்ரீம்ல பாக்கலாமா?

இதுபோன்று நிறுவனங்கள் அறிமுகப்படுத்தும் புது டிவைஸ்களின் நிகழ்ச்சி உலக மக்கள் பார்க்க வேண்டும் என்பதால் லைவ் ஸ்ட்ரீமில் வெளியிடுகின்றனர். மேலும் Return to Instinct என்ற டைட்டிலில் இந்த நத்திங் போன் 1 உலகளவில் இன்று அறிமுகப்படுத்த உள்ளது. இந்த நிகழ்ச்சி சரியாக இரவு 8.30 மணிக்கு நடைபெறுகிறது, இதனை நத்திங் நிறுவனனத்தின் அதிகாரபூர்வ யூடியூப் சேனலில் வெளியாகிறது. இல்லையென்றால் கீழே உள்ள வீடியோ மூலம் நீங்கள் நேரலையில் பார்க்க முடியும்.

சரி ரேட் பாத்து பேசுவோமா..

இந்த மாரியான அளப்பறைகளுடன் வெளியாகப்போகும் ஸ்மார்ட்போன்கள் பயங்கர காஸ்ட்லியாக இருக்கும் என்ற எண்ணம் தான் வரும். ஆனால் இந்த நத்திங் போன் 1 இந்திய சந்தையில் ரூ. 30,000/- முதல் ரூ. 40,000/-க்குள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கார்ல் பெய் தலைமையிலான இங்கிலாந்தை தளமாகக் கொண்ட நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போனான நத்திங் போன் 1, அமேசான் ஜெர்மன் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டதாக கூறப்படுகிறது.

  • 8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் - விலை EUR 469.99 (அதாவது ரூ. 37,900/-) ஆக இருக்கும்.
  • 12GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் வேரியண்ட் - விலை EUR 549.99 (அதாவது ரூ. 44,300/-) என்று விற்கப்படலாம்.
  • 8GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் வேரியண்ட் - விலை EUR 499.99 (அதாவது ரூ. 40,300/-) என்ற விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேமரா சும்மா தெறிக்க விடலாமா?

இதுவரை கிடைத்துள்ள தகவல்களின் படி, நத்திங் போன் 1 குவால்கம் ஸ்னாப்டிராகன் 778ஜி பிளஸ் எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. பின்புறத்தில் அல்ட்ரா கிளாரிட்டியுடன் 50 மெகாபிக்சல் ரியர் கேமரா செட்டப்புடன் வரலாம். தெளிவாக பார்க்க 6.55 இன்ச் OLED டிஸ்ப்ளே மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதத்தும் போன்றவற்றைக் கொண்டுள்ளது. மிக முக்கியமாக போனின் முன் மற்றும் பின் பேனல் கொரில்லா கிளாஸால் பாதுகாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 12 அவுட்-ஆஃப்-தி-பாக்ஸையும் இயக்க முடியும்.

இது தான் மெயின் அம்சம்...

இந்த போனுக்கான அழகே பின்புறத்தில் இருக்கும் அந்த LED தான். இந்த LED நோட்டிபிகேஷன் சிஸ்டம் நிறுவனத்தின் கிளைஃப்  இன்டர்பேசால் இயக்கப்படுகிறது. இது எதற்காக பயன்படுகிறது என்றால், பயனருக்கு ஏதேனும் நோட்டிபிகேஷன் அல்லது கால் வந்தால் அலெர்ட் செய்ய பல்வேறு வண்ணங்களில் ஒளிரும். உங்களுக்கு வேண்டும் என்றால் ஒவ்வொரு நபருக்கு ஒவ்வொரு வண்ணங்களை செட் செய்து கொள்ளலாம். நீங்கள் சார்ஜ் செய்யும் பொழுது போனின் சார்ஜ் எவ்ளோ இருக்கிறது என்று பேட்டரியின் சதவீதத்தையும் பிரதிபலிக்கும்.

அடுத்து என்னவென்றால், நத்திங் போன் 1 இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனருடன் வரும் என்று சமீபத்தில் டிக்டோக் மூலம் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இன்னொரு முக்கிய தகவல், இது இந்நேரம் உங்களுக்கு தெரிந்திருக்கும் இந்த ஸ்மார்ட்போன் சார்ஜர் இல்லாமல் தான் தருவாங்கலாம் பாத்துக்கோங்க. அதுக்கு வேற ஏதாவது மாற்று இருக்கா? போன்ற கேள்விகளை மக்கள் கேட்டு வருகின்றனர். 

Nothing Phone 1 Launch Date in India, Nothing Phone 1 price in india, Nothing Phone 1 price in india flipkart, Nothing Phone 1 launch date in india, Nothing Phone 1 specs, Nothing Phone 1 specifications, Nothing Phone 1 camera, Nothing Phone 1 price, Nothing Phone 1 launch date, Nothing Phone 1 flipkart,

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்