Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nothing Phone Price: நத்திங் போன் 1 பஸ்ட் லுக் ரிலீஸ்...பாத்தாலே செம்ம வெயிட் மற்றும் லைட் தான் போங்க!

Priyanka Hochumin June 19, 2022 & 11:50 [IST]
Nothing Phone Price: நத்திங் போன் 1 பஸ்ட் லுக் ரிலீஸ்...பாத்தாலே செம்ம வெயிட் மற்றும் லைட் தான் போங்க!Representative Image.

Nothing Phone Price: ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் இடையில் நடக்கும் மறைமுக யுத்தத்தின் வெளிப்பாடு தான் ஒவ்வொரு கண்டுபிடிப்பும். ஏனெனில் நாம் தனித்துவமாக இருக்க வேண்டும், பயனர்களுக்கு புதிது புதிதாக தந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற தேடல் தான் அவர்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்கிறது. அது போலவே சமீபத்தில் உலக மக்கள் அனைவரும் பேசப்படும் ஒரு புது ஸ்மார்ட்போன், நத்திங்க (Nothing). இது மற்ற பிராண்ட் ஸ்மார்ட்போன்களை விட சற்று வித்தியாசமாக காட்சியளிக்கிறது.

நத்திங் இயர் 1 இயர்பட்கள் மிகவும் டிரான்ஸ்பிரென்ட் டிசைனில் வெளியானது. இது உலக மக்கள் அனைவராலும் கவனிக்கப்பட்டு, பரபரப்பாக பேசப்பட்டது. ஏனென்றால் அது கண்ணாடி போன்ற தோற்றத்தைக் கொண்டு உள்ளே என்ன இருக்கிறது என்பதை மிக தெளிவாக காண்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இதே போன்று தான் நத்திங் போன் 1 அறிமுகமாகும் என்று அனைவரும் நக்ம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் நத்திங் நிறுவனம் நத்திங் போன் 1 (Nothing Phone 1 Specs) உடைய ஃபஸ்ட் லுக் போட்டோவை வெளியிட்டுள்ளது. அதில் டிரான்ஸ்பிரென்ட் டிசைன் இல்லாமல், திடமான ஒயிட் பினிஷ் பேக் பேனல் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் யூடியூபில் பத்திரிகையாளர் ஒருவர் நத்திங் போன் 1 ஸ்மார்ட்போனின் ஃபஸ்ட் லுக் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதன் படி, இந்த ஸ்மார்ட்போன் மிகவும் தடிமையான பேக் பேனல் மற்றும் அதில் பேன்ஸியான லைட்கள் இடம் பெற்றுள்ளதை காண முடிகிறது. உங்களுக்கு மெசேஜ் அல்லது கால் நோட்டிபிகேஷன் வரும் பொழுது குறிப்பிட்ட லைட் ஒளிரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி பேக் பேனலில் இப்படி லைட் ஒளிரும் வகையில் உருவாக்கப்பட்டதில் என்ன அர்த்தம் இன்னும் தெரியவில்லை. ஆனால் இதன் மூலம் அவர்களின் தனித்துவத்தை மீண்டும் மக்களுக்கு காண்பித்துள்ளனர்.

அந்த போனைப் பற்றி கிடைத்த அறிகுறிகள், நத்திங் போனே 1 (Nothing Smartphone Price) பேக் பேனலில் வட்டமான மூலைகள் மற்றும் திடமான வைட் பினிஷை கொண்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஷ் உடன் டூயல் ரியர் கேமரா இணைக்கப்பட்டுள்ளது. போனின் இடது பக்கத்தில் பவர் பட்டன் மற்றும் வலது பக்கத்தில் வால்யூம் ராக்கர்ஸ் பட்டன் உள்ளது. சார்ஜிங் செய்ய யூஎஸ்பி டைப் சி போர்டுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த ஸ்மார்ட்போனில் 3.5mm ஆடியோ ஜாக் இல்லை என்று தெறிகிறது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் இந்த பிராண்ட் ஸ்மார்ட்போன் உள்ளநாட்டிலையே தயாரிக்கப்படும் என்று கூறப்படுகிறது, என்ன தான் இது ஒரு வதந்தியாக சில காலம் பேசப்பட்டாலும், நத்திங் இந்தியா துணை இயக்குனர் மற்றும் பொது மேலாளர் மனு சர்மா இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

Nothing phone price, nothing phone 1 specs, nothing smartphone price

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்