Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Xiaomi Battery Replacement Program India: பேட்டரி மாற்றத்திற்கான திட்டம்...Xiaomi அறிமுகப்படுத்தியது! இதற்கான விலை வெறும் ரூ. 499/- மட்டுமே!

Priyanka Hochumin June 14, 2022 & 17:00 [IST]
Xiaomi Battery Replacement Program India: பேட்டரி மாற்றத்திற்கான திட்டம்...Xiaomi அறிமுகப்படுத்தியது! இதற்கான விலை வெறும் ரூ. 499/- மட்டுமே!Representative Image.

Xiaomi Battery Replacement Program India: உங்களுது Xiaomi ஸ்மார்ட்போனா, பேட்டரி கெப்பாசிட்டி காமியாகி அத மாத்தணுமா இதோ உங்களுக்காக ஒரு சூப்பர் ஆஃபர். என்ன தெரியுமா?

சமீபத்தில் Xiaomi நிறுவனம் பயனர்களுக்காக "பேட்டரி மாற்று திட்டம்" ஒன்றை புதிதாக இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த புதுமையான திட்டத்தின் தொடக்கத்தால், பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரிகளை மாற்றிக்கொள்ளலாம். இதற்கான fixed price என்னவென்றால், வெறும் ரூ. 499/- மட்டுமே.

போன் பேட்டரி

நாம் புதிதாக ஒரு மொபைல் போன் வாங்கும் பொழுது பேட்டரி நீண்ட நாட்கள் வரை தாங்கும் என்று சொல்வார்கள். பிறகு அதனின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கிய பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக அதனின் கெபாசிட்டி குறையத் தொடங்குகிறது. பின்பு நாம் சார்ஜ் போட வேண்டும் என்றால், சுமார் ஒரு மணி நேரமாகிவிடும். இப்படி இவ்ளோ பிரச்சனை உள்ளது இந்த பேட்டரியின் கெபாசிட்டி குறைந்து விட்டால். ஒரு சில நேரம் நாம் பேட்டரியை மட்டும் மாற்றிக்கொள்ளலாம். ஆனால் அந்தந்த பிராண்ட் ஸ்மார்ட்போன்களுக்கு ஏற்ற பேட்டரி கடைகளில் கிடைக்குமா என்று கேட்டால், கொஞ்சம் கஷ்டம் தான்.

Xiaomi-யின் திட்டம்

இந்த சிக்கலை புரிந்து கொண்ட Xiaomi தங்களின் பிராண்ட் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பயனர்களுக்கு உதவும் வகையில் இந்தியாவில் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். Xiaomi இந்தியா, COO முரளி கிருஷ்ணன் தெரிவித்ததை தொடர்ந்து, தற்போது ஸ்மார்ட்போன் பேட்டரியை ரூ. 499/-க்கு பெற முடியும் என்று கூறியுள்ளார். இது Xiamoi மற்றும் Redmi ஆகிய இரண்டு பிராண்டிற்கும் பொருந்தும் என்றும் கூறியுள்ளார். இது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் இரண்டிலையும் வாங்கும் அம்சம் உள்ளது.

ஆஃப்லைனைப் பொறுத்தவரை உங்களுக்கு அருகில் இருக்கும் xiaomi அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்களில் பெற்றுக்கொள்ளலாம். அது பேட்டரி பிரச்சனை அல்லது வேற எந்த கோளாறாக இருந்தாலும் சரி அங்கு சென்று மாற்றிக்கொள்ளலாம். ஆன்லைனைப் பொறுத்தவரை Xiaomi Service+ ஆப்பில் மூலம் முன்னதாக நியமனம் செய்து உங்களுடைய பேட்டரியை மாற்றிக்கொல்லாம். மிக குறைந்த விலையில் இப்படி ஒரு சலுகை எங்கையும் கிடைக்காது. எனவே, உங்களின் ஸ்மார்ட்போனை புதிதாக மாற்ற உங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.  

Xiaomi-யின் அடுத்த வெளியீடு

அடுத்தபடியாக, இந்த வருடத்தின் இறுதியில் Redmi Note 12 வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது ரெட்மி நோட் 12 சீரிஸ், 50MP மெயின் கேமரா மற்றும் ரெட்மி நோட் 11-ஐ போன்ற வடிவமைப்பை கொண்டுள்ளதாக இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அடுத்து வரவிருக்கும் ஸ்மார்ட்போனில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு, பிளாட் டிஸ்ப்ளே மற்றும் செல்ஃபி ஸ்னாப்பருக்கு மையமாக சீரமைக்கப்பட்ட ஹோல் -பஞ்ச் கட் அவுட் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

Xiaomi Battery Replacement Program India, Xiaomi Battery Replacement Program India price, Xiaomi Battery Replacement Program India online, Xiaomi Battery Replacement Program India 2022, Xiaomi Battery Replacement Program India in tamil, Xiaomi Battery Replacement Program India xiaomi, 

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்