Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

காசு கொடுத்து வாங்குனா...அப்படியே திருப்பி தரங்களாம்...jio-வின் சூப்பர் தீபாவளி ஆஃபர்!

Priyanka Hochumin October 22, 2022 & 12:00 [IST]
காசு கொடுத்து வாங்குனா...அப்படியே திருப்பி தரங்களாம்...jio-வின் சூப்பர் தீபாவளி ஆஃபர்!Representative Image.

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரிலையன்ஸ் நிறுவனம் தரும் இந்த சலுகை தான் இந்த தீபாவளிக்கு பெஸ்ட் ஆஃபர். Jio Diwali Offer 2022 ஆனது நாம் செலுத்தும் பணம் மொத்தத்தையும் திரும்ப நமக்கே தரும் தள்ளுபடியாகும்.

காசு கொடுத்து வாங்குனா...அப்படியே திருப்பி தரங்களாம்...jio-வின் சூப்பர் தீபாவளி ஆஃபர்!Representative Image

ஃபுல் மணி பேக் ஆஃபர்...

டபுள் பெஸ்டிவல் போனான்ஸா (Double Festival Bonanza) என்னும் நம்ப முடியாத திட்டத்தை தீபாவளிக்கு ஜியோ அறிமுகபப்டுத்தியுள்ளது. நீங்கள் முதல் முறையாக ஜியோ பைபர் வாடிக்கையாளராக இருந்தால் இதன் கீழ் உங்களுக்கு "100% வேல்யூ பேக்' கிடைக்கும். அப்படினா அதுக்கு நாம் தரும் பணம் அப்படியே திரும்ப கிடைக்கும்னானு கேட்ட இல்ல. நாம் செலவழித்த மதிப்பிற்கான வவுச்சர்கள் நமக்கு கொடுக்கப்படும். இந்த ஆஃபர் வரும் அக்டோபர் 28, 2022 ஆம் தேதி வரை மட்டுமே.

காசு கொடுத்து வாங்குனா...அப்படியே திருப்பி தரங்களாம்...jio-வின் சூப்பர் தீபாவளி ஆஃபர்!Representative Image

எந்த பிளானுக்கு கிடைக்கும்!

நீங்கள் ஜியோவின் ரூ.599 மதிப்புள்ள ஃபைபர் திட்டத்தையோ அல்லது ரூ.899 மதிப்புள்ள ஃபைபர் திட்டத்தையோ தேர்வு செய்ய வேண்டும். சரி இப்போதெய்க்கு வாங்குவோம், வவுச்சர் வாங்குன உடனே கேன்சல் பணிடலாம்னு நினைக்காதீங்க. இந்த பிளானை நீங்கள் சுமார் 6 மாத சந்தாவாக வாங்க வேண்டும். அப்ப தான் 100% வேல்யூ பேக் நமக்கு கிடைக்கும்.

காசு கொடுத்து வாங்குனா...அப்படியே திருப்பி தரங்களாம்...jio-வின் சூப்பர் தீபாவளி ஆஃபர்!Representative Image

சரி GST சேர்த்தா இவ்ளோவா.....

இப்போ ரூ. 599/- பிளான் எடுத்துக்கிட்டா, ஜிஎஸ்டி உட்பட இதனின் 6 மாத சந்தாவின் விலை ரூ. 4,241/- மற்றும் ரூ. 899/- இன் மொத்த விலை ரூ. 6,365/- ஆகும்.

ரூ. 599/- பிளான் வாங்கினால் - AJIO-க்கான ரூ.1,000 வவுச்சர், ரிலையன்ஸ் டிஜிட்டலுக்கான ரூ.1,000 வவுச்சர், NetMeds-க்கான ரூ.1,000 வவுச்சர் மற்றும் Ixigo-விற்கான ரூ.1,500 வவுச்சர் என்று மொத்தம் ரூ. 4,500 மதிப்புள்ள வவுச்சர்கள் அணுக கிடைக்கும்.

ரூ. 899/- பிளான் வாங்கினால் - AJIO-க்கு ரூ.2,000 மதிப்புள்ள வவுச்சர், ரிலையன்ஸ் டிஜிட்டலுக்கு ரூ.1,000 வவுச்சர், NetMeds-க்கான ரூ.500 வவுச்சர் மற்றும் Ixigo-விற்கான ரூ.3,000 வவுச்சர் என்று மொத்தம் ரூ. 6,500 மதிப்புள்ள வவுச்சர்கள் அணுக கிடைக்கும்.

இத்துடன் சேர்த்து எல்லா திட்டத்திற்கும் 15 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி தரப்படும். அதே போல் மேற்கூறிய திட்டங்களில் ஏதேனும் ஒன்றை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.6,000 மதிப்புள்ள 4K ஜியோஃபைபர் செட்-டாப் பாக்ஸும் இலவசமாக கிடைக்கும். இதுக்கு மேல தீபாவளிய ஜொலிக்க வைக்க ஏதாச்சும் வேணுமா? சொல்லுங்க.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்