Wed ,Apr 17, 2024

சென்செக்ஸ் 72,943.68
-456.10sensex(-0.62%)
நிஃப்டி22,147.90
-124.60sensex(-0.56%)
USD
81.57
Exclusive

மார்ஸில் ஓட்டை போட்டு...நம்ப முடியாத தகவலை...வெளியிட்ட NASA!

Priyanka Hochumin September 17, 2022 & 12:45 [IST]
மார்ஸில் ஓட்டை போட்டு...நம்ப முடியாத தகவலை...வெளியிட்ட NASA!Representative Image.

விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்காவின் NASA நிறுவனத்தை அடிச்சிக்க யாராலயும் முடியாது என்பதற்கான அடுத்த ஆதாரத்தை நாசா வெளியிட்டுள்ளது. இது சற்று சுவாரஸ்யமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, ஏன்னா கிடைச்ச மேட்டர் அப்படி.

ஒன்னு இல்ல இதுவர 5 அனுப்பியாச்சு....

சமீபத்தில் செவ்வாய் கிரகத்தில் உலா வந்துகொண்டிருக்கும் க்யூரியாசிட்டி (Curiosity) மற்றும் பெர்சவரென்ஸ் (Perseverance) ரோவர்களைப் பற்றி நமக்கு தெரிந்திருக்கும். ஆனால் இடஜாற்கு முன்னர் இதுவரை 3 ரோவர்கள் மார்ஸ் கிரகத்திற்கு நாசா அனுப்பியுள்ளது.

சோஜர்னர் (Sojourner) - 1997

ஆப்பர்ச்சுயுனிட்டி (Opportunity) - 2004 - 2018

ஸ்பிரிட் (Spirit) - 2004 - 2010.

இந்த மூன்று ரோவர்களும் தொழிநுட்ப கோளாறு காரணமாக செயலிழந்து விட்டதாக நாசா தெரிவித்துள்ளது. தற்போது ஆக்டிவாக இருப்பது க்யூரியாசிட்டி மற்றும் பெர்சவரென்ஸ் ரோவர்கள் மட்டுமே.

இது செஞ்ச காரியத்த பாருங்க!

செவ்வாய் கிரகத்தில் முன்னொரு காலத்தில் ஒரு ஏறி இருந்ததாகவும், பிறகு எரிமலை வெடிப்பு நடந்ததாகவும் நம்பப்படும் ஒரு பள்ளத்தில் சுமார் 1 வருடமாக ஆராய்ந்து வருகிறது பெர்சவரென்ஸ் ரோவர். அதனுள் பல பில்லியன் ஆண்டுகளாக இருக்கும் ஒரு பாறையில் பெர்சவரென்ஸ் ரோவர் ஓட்டை போட்டு பல அதிசய தகவலை வெளியிட்டுள்ளது. அதுல என்ன இருக்குன்னா? அந்த பாறைக்குள் ஆர்கானிக்-ரிச் மெட்டீரியல் (organic-rich material) கிடைத்துள்ளதாக நாசா தெரிவித்தது. அதாவது கரிம வளம்  பொருட்கள் இங்கு கிடைத்ததால் செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கான அறிகுறியாக இந்த கண்டுபிடிப்பு இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அதுக்கு பேரு கூட இருக்கு!

பெர்சவரென்ஸ் ரோவர் துளையிட்ட பாறையின் பெயர் வைல்ட்கேட் ரிட்ஜ் (Wildcat Ridge) என்னும் மார்ஸ் பாறையாகும். அந்த பாறை பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், ஆவியாகிப்போன உப்புநீர் ஏரியில் குடியேறிய சேர் மற்றும் மெல்லிய மணலால் உருவாக்கப்பட்ட பாறையாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். பெர்சவரென்ஸ் ரோவர் கண்டுபிடித்த இந்த ராக் சாம்பிள் பூமிக்கு கொண்டுவரப்பட்டு ஆராய்ச்சி செய்யும் பொழுது கற்பனைக்கு எட்டாத நிறைய தகவல்கள் வெளியாகும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இனி அடுத்து மார்ஸ்-க்கு மனிதர்கள் பார்சல்....

இயந்திரங்களைக் கொண்டு ஆராய்ச்சி செய்ததெல்லாம் போதும், இனி அடுத்து செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப முடிவு செய்த நாசா. அப்படியாக துல்லியமான டெக்னாலஜி மற்றும் நிதி கிடைத்த உடன் இந்த ஏற்பாடுகளை தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர். அப்படி பார்த்தால் 2030 - 2040-க்குள் இது நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

குறிப்பு - பூமியில் இருந்து மார்ஸ் செல்ல 130.94 மில்லியன் கிலோ மீட்டர்கள் தூரத்தை கடக்க வேண்டும். எனவே, மார்ஸ்-க்கு பயணம் செய்ய வேண்டும் என்றால் கிட்டத்தட்ட 7 மாதங்கள் ஆகலாம். இது மிகவும் சவாலானதாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்