Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Redmi K50 Extreme Edition Price in India: போங்க எல்லாம் ஓரம் போங்க...அதான் Redmi புது போன் வருதுல்ல!

Priyanka Hochumin August 10, 2022 & 12:30 [IST]
Redmi K50 Extreme Edition Price in India: போங்க எல்லாம் ஓரம் போங்க...அதான் Redmi புது போன் வருதுல்ல!Representative Image.

Redmi K50 Extreme Edition Price in India: தங்களின் தாய் நாடு சீனாவில் Xiaomi நிறுவனத்தின் புது மாடல் ஸ்மார்ட்போனான Redmi K50 Extreme Edition ஆகஸ்ட் 11, 2022 அதாவது நாளை அறிமுகப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் ரிலீஸ்-க்கு முன்னரே அதனின் டிசைன் மற்றும் அம்சங்களை டீஸ் செய்யும் வகையில் நிறைய சீன மைக்ரோ பிளாக்கிங் பிளாட்ஃபார்ம்கள் கண்டறியப்பட்டது. Weibo-வில் Xiaomi நிறுவனம் வெளியிட்டுள்ள டீசர் போஸ்டரில் இந்த லான்ச் ஈவென்ட் சீனாவில் 7 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 4 IST) நடைபெறும்.

ரெட்மி கே 50 எக்ஸ்ட்ரீம் எடிஷன் அம்சங்கள்

இந்த புது ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே அளவைப் பற்றிய தகவல் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் ஆது முற்றிலும் OLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. அதே போல் அந்த டிஸ்பிளே ஆனது 120Hz ரெப்பிரேஷ் ரேட் கொண்டுள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் டிஸ்பிளேவில் செல்ஃபி கேமரா பொருத்துவதற்கு ஹோல்-பஞ்ச் கட்அவுட் உள்ளது. 

இந்த ஸ்மார்ட்போன் அதிநவீன தொழில்நுற்பமான குவால்கம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. வேற லெவெல் போட்டோ எடுக்க பின்புறத்தில் 108 மெகாபிக்சல் மெயின் சென்சார், 8 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் சென்சார் கொண்ட ட்ரிபிள் ரியல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. வீடியோ கால் மற்றும் செல்பீ பயன்பாட்டிற்கு முன் பக்கத்தில் 20 மெகாபிக்சல் front facing கேமரா இடம் பெற்றுள்ளது.

நீண்ட நேரம் தடங்கல் இன்றி பயன்படுத்த 120W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை ஆதரிக்கும் வகையில் 5000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. புளூடூத் v5.2, NFC மற்றும் Wi-Fi 6E போன்ற கூடுதல் இணைப்பு விருப்பங்களும் இதில் அடங்கும். இவ்ளோ விஷயங்கள் வெளிவந்தாலும் இன்னும் இந்த பிராண்ட் நியூ போனின் விலை பற்றி எந்த தகவலும் வெளியாக வில்லை.

இது தெரியுமா?

Xiaomi நிறுவனத்தின் பிளாக்ஷிப் போனான Redmi K50 சீரிஸின் மேம்படுத்தப்பட்ட வெர்சனாக இந்த Redmi K50 Extreme Edition ஸ்மார்ட்போன் திகழ்கிறது. Redmi K50 Pro மற்றும் Redmi K50 மார்ச் மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இவை MediaTek Dimensity 9000 SoC ஆல் இயக்கப்படுகிறது, அதே சமயம் வெண்ணிலா மாடலில் MediaTek Dimensity 8100 SoC உள்ளது. இரண்டு மாடல்களும் லீகுய்ட் கூலிங்க் டெக்னாலஜி மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் டால்பி விஷன் திறன் கொண்ட 2K தெளிவுத்திறன் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. 

Redmi K50 Extreme Edition Price in India, Redmi K50 Extreme Edition launch date in India, Redmi K50 Extreme Edition price, Redmi K50 Extreme Edition price in Bangladesh.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்