Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Europa இல் ஏலியன்கள்...இருப்பதாக வெளியான...திக் திக் ஆதாரங்கள்!

Priyanka Hochumin April 25, 2022 & 16:30 [IST]
Europa இல் ஏலியன்கள்...இருப்பதாக வெளியான...திக் திக் ஆதாரங்கள்!Representative Image.

இந்த பிரபஞ்சத்தில் வேற்றுகிரகவாசிகள் நிஜமாவே இருக்கிறீங்களா? அப்படி இருந்த அவங்கள நாம்ப பார்த்திருப்போமா? எப்படி இருப்பாங்க போன்ற நிறைய கேள்விகள் மனிதர்களான நமக்கு ஏற்பட்டிருக்கும். நமது சூரிய குடும்பத்தில் வியாழன் கிரகத்தில் ஏலியன்கள் வாழ்கிறார்கள் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

வியாழனுக்கு இருக்கும் நிறைய நிலவுகளில் மிகவும் முக்கியமான் ஒன்று யூரோப்பா (Europa) என்ற நிலவாகும். இந்த யூரோப்பா நிலவு வியாழனை சுற்றி வரும் நான்கு கலிலியன் நிலவுகளில் மிகச்சிறியது. இந்த நிலவில் தான் வேற்றுகிரகவாசிகள் வாழ்ந்துகொண்டிருக்கலாம் என்று கண்டுபிடுப்புகள் தெரிவிக்கிறது. வியாழனுக்கு அருகில் இருக்கும் யூரோப்பா நிலவை தான், 1610 இல் கலிலியோ கலிலி என்பவரால் கண்டறியப்பட்டது என்று கூறப்படுகிறது. 1970-களின் பிற்பகுதியில் NASA மூலம் இரண்டு வாயேஜர் விண்கலங்கள் (spacecraft) யூரோப்பாவுக்கு அனுப்பப்பட்டது. அங்கு பனிக்கட்டி ஓடுக்கு அடியில் இருக்கும் திரவ நீர் கடலுக்கான வலுவான ஆதாரங்களைக் கண்டறியப்பட்டதாக தெரிவித்துள்ளனர். 

                

இருப்பினும் விஞ்ஞானிகளுக்கு பனிக்கட்டி மேலோட்டத்தின் தடிமன் காரணமாக கிடைத்த வாட்டர் சாம்பிளை பரிசோதித்து படிப்பது சற்று கடினமாக இருப்பதாகவும், அது சுமார் 30 கிலோமீட்டர் தடிமனாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். இது போன்ற பெரிய அடர்த்தியான பனிக்கட்டி மேலோட்டத்தை படிப்பதும் பகுப்பாய்வு செய்வதும் சற்று கடினமாக இருக்கிறது. இது எதிர்கால விண்வெளிப் பயணங்களுக்கு எட்டாததாக இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் சமீபத்தில் ஒரு புதிய ஆய்வைப் பற்றி வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால் யூரோபாவின் பனிக்கட்டியின் தடிமன் மற்றும் தெர்மோபிசிக்கல் அமைப்பு மோசமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. 

இதனை பற்றிய நிறைய ஆய்வில் வெளியான தகவல் என்னவென்றால், " யூரோப்பாவில் உயிர் வாழும் தகுதி இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள, அடிப்படையாக புவி இயற்பியல் செயல்முறைகள் மற்றும் வாழக்கூடிய தன்மை இரண்டையும் புரிந்துகொள்வதற்கு விரிவான கட்டமைப்பு மற்றும் இயக்கவியல் மிகவும் முக்கியமானவை" என்று கூறுகின்றனர். மேலும் "யூரோபாவில் இரட்டை முகடுகள் மிகவும் பொதுவான மேற்பரப்பு அம்சமாகும். அவை சந்திரனின் ஒவ்வொரு பகுதியிலும் நிகழ்கின்றன, இருப்பினும் அவற்றின் அவற்றின் உருவாக்கம் சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை. தற்போதைய கருதுகோள்கள் அவற்றின் தனித்துவமான உருவவியல் வளர்ச்சிக்கு போட்டியாகவும், முழுமையற்ற வழிமுறைகளை வழங்குகின்றன எனவும்" கூறுகின்றனர்.

              

இதனை மக்களுக்கு புரிய வைப்பதற்காக, ஐரோப்பாவில் கண்டுபிடிக்கப்பட்ட அதே ஈர்ப்பு-அளவிடப்பட்ட வடிவவியலுடன் (gravity-measured geometry) வடமேற்கு கிரீன்லாந்தில்  இரட்டை முகடுகளின் (double ridges) கண்டுபிடிப்பு மற்றும் பகுப்பாய்வை விஞ்ஞானிகள் வழங்கினர். மேற்பரப்பு உயரம் மற்றும் ரேடார் ஒலி தரவுகளைப் (radar acoustic data) பயன்படுத்தி, பனிக்கட்டிக்குள் ஆழமற்ற நீர் சன்னல் ஒன்றின் தொடர்ச்சியான உறைதல், அழுத்தம் மற்றும் முறிவு போன்றவற்றால் இரட்டை மேடு உருவானது என்று ஆய்வு செய்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 

Also Readவிஞ்ஞானிகள் அதிர்ச்சி...பூமிக்கு அசம்பாவிதத்தை ஏற்படுத்தும்...ராட்சஷ வால் நட்சத்திரம்!

விஞ்ஞானிகள் தெரிவிக்கும் தகவல் என்னவென்றால், யூரோபாவின் இரட்டை முகடுகளுக்கு இதே செயல்முறை காரணமாக இருந்தால் ஆய்வின் கண்டுபிடிப்புகள் ஐரோப்பாவின் பனிக்கட்டி முழுவதும் ஆழமற்ற திரவ நீர் இடஞ்சார்ந்தது என்றும், இவை எங்கும் உள்ளவைதான் என்பது உண்மையானது. இது மேற்பரப்புக்கு நெருக்கமாக இருப்பதால், விண்வெளி, பிற நிலவுகள் மற்றும் அயோவின் எரிமலைகளில் இருந்து சுவாரஸ்யமான இரசாயனங்கள் கிடைக்கும். ஷெல்லில் தண்ணீர் பாக்கெட்டுகள் இருந்தால் அங்கு உயிர் வாழும் வாய்ப்பு உள்ளது. 

                                                  

இதன் அடிப்படையில் பார்க்கும்போது, உயிர்வாழ ஆதாரமான நீர் இருப்பு வியாழனின் நிலவான யுரோபாவில் இருப்பதால், அங்கு வேற்றுகிரகவாசிகள் வாழ்வதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாகவே இருக்கிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்