Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

மெசேஜ் தப்பா பண்ணா டெலிட் பண்ண வேணாம்.. இனி எடிட் பண்ணலாம்..! | WhatsApp Edit Features

Gowthami Subramani Updated:
மெசேஜ் தப்பா பண்ணா டெலிட் பண்ண வேணாம்.. இனி எடிட் பண்ணலாம்..! | WhatsApp Edit FeaturesRepresentative Image.

வாட்ஸ் அப்-ல் அனைவரும் எதிர்பார்த்த அம்சமாக எடிட் செய்யும் வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது வாட்ஸ்அப் பயனர்களுக்கு மிகவும் பயனுள்ள அம்சமாகும். ஏனெனில், மற்ற பிற அப்ளிகேஷன்களும் இந்த எடிட் ஆப்ஷனைக் கொண்டுள்ளது. ஆனால், இதற்கு ஒரு விதிமுறை உள்ளது அவை என்னவென்று பார்க்கலாம்.

தற்போது, WhatsApp வெளியிட்டுள்ள இந்த அம்சமானது, வாட்ஸ் அப் பயனர்களுக்கு மிகவும் பயன்படும் வகையில் அமைய உள்ளது. இந்த அம்சம் வருவதற்கு முன், வாட்ஸ்அப் பயனர்கள் ஏதேனும் செய்தியை தவறாக அனுப்பி விட்டால், அந்த செய்தியை அழித்தோ அல்லது அதை விட்டு விட்டு, அடுத்த செய்தியாகவோ சரியானதை அனுப்ப வேண்டும். இதனால், பெரும்பாலும் குழப்பம் ஏற்படவும் வாய்ப்புண்டு.

இந்த பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில், வாட்ஸ்அப் பயனர்கள் அனுப்பிய தவறான செய்திகளில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் செய்ய Edit Message Feature-ஐ வழங்கியுள்ளது. அதே சமயம், இவற்றை 15 நிமிடத்திற்குள்ளாகவே செய்து முடிக்க வேண்டும். செய்தி அனுப்பும் போது, ஏதேனும் சிறிது தவறாக இருந்தால், முழு செய்தியையும் அழிக்க வேண்டும். இதனைத் தவிர்க்கவே, வாட்ஸ்அப் இந்தப் புதிய பயனுள்ள அம்சத்தை வெளியிட்டுள்ளது.

மெட்டாவிற்குச் சொந்தமான நிறுவனம் பயனர்களுக்குப் புதிய புதுப்பிப்பை வெளியிடத் தொடங்கி உள்ளது. அதே சமயம், இது தற்போது அனைவருக்கும் கிடைக்காது என்று கூறியுள்ளது. ஏனெனில், வாட்ஸ் அப் செயலி தற்போது பில்லியன்களால் பயன்படுத்தப்படுகிறது. இந்த செயலி அனைவரையும் சென்றடைய இன்னும் சில நாள்கள் ஆகலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப் எடிட் அம்சம்

வாட்ஸ் அப்பில் எவ்வாறு தவறுதலாக அனுப்பப்படும் செய்திகளைத் திருத்துவது என்பதைப் பார்க்கலாம்.

முதலில் வாட்ஸ் அப் பயன்பாட்டைத் திறக்க வேண்டும். அதில் நீங்கள் எந்த Chat-ற்குச் செல்ல வேண்டுமோ அதற்கு செல்லலாம்.

பின், நீங்கள் தவறுதலாக அனுப்பிய செய்தியை Long Press செய்ய வேண்டும்.

இப்போது, Edit Message Option-ஐப் பெறுவீர்கள். அதைக் க்ளிக் செய்து, செய்தியைத் திருத்தி மீண்டும் அனுப்பலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்