Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Jio இதுக்கும் வந்துட்டாங்களா...அப்ப இனி இன்ஸ்டா, பேஸ்புக்...எல்லாமே காலி!

Priyanka Hochumin Updated:
Jio இதுக்கும் வந்துட்டாங்களா...அப்ப இனி இன்ஸ்டா, பேஸ்புக்...எல்லாமே காலி!Representative Image.

இந்திய மக்கள் தினந்தோறும் அதிக நேரம் செலவழிக்கும் ரீல்ஸ் அம்சத்தை கையில் எடுக்கிறது ஜியோ நிறுவனம். ரீல்ஸ் என்றாலே நினைவுக்கு வருவது இன்ஸ்டாகிராம், பேஸ்புக் தான். இப்போது அவர்களுக்கு பொடியாக ஜியோ நிறுவனம் ஆரம்பிக்க உள்ளது.

இந்தியாவின் நம்பர் 1 தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ, "பிளாட்ஃபார்ம்" எனப்படும் ஷார்ட் வீடியோ பார்மேட் ஆப்பை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஆப் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாவில் ரீல்ஸ் எப்படி வேலை செய்கிறதோ அதே போலவே செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Rolling stones India பத்திரிகையில் வெளியான தகவல் படி, என்டெர்டைநேர்ஸ்-களை குறிவைக்கும் விதமாக உருவாக்கப்பட்ட இந்த ஷார்ட் வீடியோ ஆப் "பிளாட்ஃபார்ம்" கிரியேட்டிவ்லேண்ட் ஆசியா மற்றும் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் இணைந்து உருவாக்கியுள்ளனர்.

Jio இதுக்கும் வந்துட்டாங்களா...அப்ப இனி இன்ஸ்டா, பேஸ்புக்...எல்லாமே காலி!Representative Image

இந்த செயலி முற்றிலும் படைப்பாளிகள், பாடகர்கள், நடிகர்கள், இசைக்கலைஞர்கள், நடனக் கலைஞர்கள், நகைச்சுவை நடிகர்கள், பேஷன் டிசைனர்கள் மற்றும் கலாச்சார தாக்கத்தை ஏற்படுத்த விரும்பும் அனைவர்க்கும் ஏற்றதாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த செயலியை பயன்படுத்தும் விதம் சற்று புதுமையாக இருக்கிறது. பிளாட்ஃபார்ம்மின் முதல் 100 ஸ்தாபக உறுப்பினர்கள் அழைப்பின் மூலம் சேருவார்கள். அவர்களின் ப்ரொபைல்களில் கோல்டன் டிக்கெட் வெரிஃபிகேஷன் வழங்கப்படும். அடுத்து பரிந்துரை நிகழ்ச்சிகள் மூலம் இந்த அசல் உறுப்பினர்கள் புதிய கலைஞர் உறுப்பினர்களை சைன்-அப் செய்ய அழைப்பார்கள்.

இப்போது புதிதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர்கள் மட்டுமே பிளாட்ஃபார்மில் சேர்க்கப்பட்ட லேட்டஸ்ட் அம்சங்களை ப்ரிவியூ செய்யும் முதல் நபர்களாக இருப்பார்களாம். இது கொஞ்சம் புதுசா இல்ல! மேலும் கிடைத்த அறிக்கை படி, இந்த செயலி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் லைவ் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த செயலியின் பீட்டா வெர்ஸனை ஏற்கனவே சோதிக்கத் தொடங்கியுள்ளது.

Jio இதுக்கும் வந்துட்டாங்களா...அப்ப இனி இன்ஸ்டா, பேஸ்புக்...எல்லாமே காலி!Representative Image

இந்த பிளாட்ஃபார்ம் ஆப்ஸ், தற்போது இருக்கும் மெட்டாவால் பயன்படுத்தப்படும் கட்டண வழிமுறைகளை (paid algorithms) பயன்படுத்தவில்லை. பதிலாக ரேங்கிங் மற்றும் நற்பெயரின் மூலம் இயல்பாக வளர படைப்பாளர்களை அனுமதிக்கும். இதன் மூலம் திறமை உள்ளவர்கள் நல்ல வருவாய் ஈட்டும் வாய்ப்பை இந்த செயலி வழங்குகிறது. கன்டென்ட் கிரீயேடர்ஸ்-களின் வளர்ச்சி படிப்படியாக இருப்பதை உணர - சில்வர், ப்ளூ மற்றும் ரெட் டிக் சரிபார்ப்புகளால் குறிக்கப்படும்.

பணமாக்குதல் பற்றி பேசுகையில், அனைத்து கிரீயேடர்ஸ்-களுக்கும் "Book Now" பட்டன் வழங்கப்படும். இதன் மூலம் இதன் மூலம் படைப்பாளர்கள் மற்றும் மக்கள் ஏதேனும் ஸ்பெஷல் ஈவென்ட், ஒத்துழைப்புகள் போன்றவற்றிற்கு எளிதாக அவர்களை முன்பதிவு செய்யவும் அனுமதிக்கும்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்