Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விண்வெளியில் 908 நாட்கள்...உலா வந்த ஆளில்லாத விமானம்...தரையிறங்கி சாதனை! முழு விவரமும் இதோ...

Priyanka Hochumin November 14, 2022 & 15:00 [IST]
விண்வெளியில் 908 நாட்கள்...உலா வந்த ஆளில்லாத விமானம்...தரையிறங்கி சாதனை! முழு விவரமும் இதோ... Representative Image.

விண்வெளியில் 908 நாட்கள் அதாவது சுமார் 2.5 ஆண்டுகள் ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஆளில்லாத விமானம் தற்போது அமெரிக்காவில் தரையிறங்கியுள்ளது. இது அறிவியல் உலகிற்கு மிகப்பெரிய சாதனையாக கருதப்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அடுத்து என்ன? என்ற கேள்விக்கு விடை கிடைக்கவே மனித நாகரிகம் வளர்ந்து கொண்டே வருகிறது. அதிலும் மனிதர்களின் விண்வெளி ஆராய்ச்சி பல திகைக்க வைக்கும் விஷயங்களை கண்டுபிடித்து வருகிறது. அதற்கு மட்டும் ஒரு முடிவே இல்லாத வகையில் தான் இன்று வரை ஆராய்ச்சிகள் நடந்து கொண்டு வருகிறது. அதில் முக்கிய பங்கு வகிக்கும் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான NASA பெரும் பங்கு வகித்து வருகிறது.

விண்வெளியில் 908 நாட்கள்...உலா வந்த ஆளில்லாத விமானம்...தரையிறங்கி சாதனை! முழு விவரமும் இதோ... Representative Image

இதில் முக்கியமானது நாசா உருவாக்கிய X-37B என்னும் ஆளில்லாத விண்வெளி விமானம் தான். இந்த விமானம் முதன் முதலில் 2010 ஆம் ஆண்டு விண்வெளியில் ஏவப்பட்டுள்ளது. அதற்கு பின்னர் இதுவரை 6 முறை விண்வெளியில் இந்த விமானம் ஏவப்பட்டுள்ளது. பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு இந்த விமானம் பெரும் உதவிகரமாக இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். முன்னதாக, இது 780 நாட்கள் புவிவட்ட பாதையில் ஆராய்ச்சி பயணத்தை முடித்து பூமிக்கு திரும்பியது.

விண்வெளியில் 908 நாட்கள்...உலா வந்த ஆளில்லாத விமானம்...தரையிறங்கி சாதனை! முழு விவரமும் இதோ... Representative Image

ஆனால் இந்த முறை 908 நாட்கள் (சுமார் 2.5 ஆண்டுகள்) புவியை சுற்றி முடித்து தற்போது அமெரிக்காவின் கென்னடி விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. இதுவரையில் மொத்தமாக 3,774 நாட்களில் 1.3 பில்லியன் மைல்கள் பயணித்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்காவின் கப்பற்படை மற்றும் விமான ஆராய்ச்சி ஆய்வகத்தை கொண்டுள்ளதால் பார்ப்பதற்கு விண்கலம் போலவே இருந்தாலும், இது அளவியில் சிறியதாக இருக்குமாம். இது வெறும்  9 மீட்டர் நீளம் தானம், இருப்பினும் விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல்லாக கருதப்படுகிறது.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்