Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

400 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழக்கூடிய அரிய சூரிய கிரகணம்.. தேதி, நேரம் இதோ.. | Suriya Kiraganam Timing 2023

Nandhinipriya Ganeshan Updated:
400 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழக்கூடிய அரிய சூரிய கிரகணம்.. தேதி, நேரம் இதோ.. | Suriya Kiraganam Timing 2023Representative Image.

பூமி, நிலா, சூரியன் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் நிகழ்வே "சூரிய கிரகணம்" என்று சொல்வார்கள். சூரியனை நிலா மறைப்பதால் இந்த கிரகணம் ஏற்படுகிறது. பொதுவாக ஒவ்வொரு வருடமும் 4 கிரகணம் நிகழும். அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணத்தை 'நிங்கலூ சூரிய கிரணம்' (Ningaloo Eclipse) அல்லது 'கலப்பின சூரிய கிரகணம்' என்று அழைக்கப்படுகிறது. 

அதென்ன 'நிங்கலூ'. நெருப்பு வளைய சூரிய கிரகணமாக தோன்றும் இந்த கிரகணம் முழு வளைய கிரகணம் தோன்றுவதற்கு முன்பாக, நிலா சூரியனை முழுவதுமாக மறைக்கப்பட்டு முழு சூரிய கிரகணமாக தோன்றி அதன்பிறகு வளைய கிரகணமாகத் தோன்றுவதால் இது நிங்கலூ சூரிய கிரகணம் என்று சொல்லப்படுகிறது. சரி வாங்க, கிரகணம் எப்போது, எந்த நேரத்தில் ஏற்படுகிறது என்பதை தெரிந்துக் கொள்வோம்.

சூரிய கிரகணம் 2023 தேதி, நேரம்:

400 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் இந்த அரிய கிரகணம் வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி நிகழ இருக்கிறது. இந்த சூரிய கிரகணம் இந்திய நேரப்படி அதிகாலை 3.34 மணி முதல் 6.32 வரை ஏற்படுகிறது. இந்த கிரகத்தின் உச்ச நிகழ்வாக 4.29 மணி முதல் 4.30 வரையான குறுகிய காலத்திற்கு மட்டுமே அந்த நெருப்பு வளைய சூரிய கிரகணம் தோன்றுகிறது.

இந்த கிரகணம் எங்கெல்லாம் தெரியும்?

தெற்கு ஆசியா, ஆஸ்திரேலியா, கிழக்கு ஆசியா, இந்திய பெருங்கடல், பசிபிக் பெருங்கடல், அண்டார்டிக்கா பகுதிகளில் உள்ளவர்களால் இந்த அரிய கிரகணத்தை பார்க்க முடியும். இருந்தாலும், இந்த தனித்துவமான சூரிய கிரகணத்தை இந்தியாவில் காண முடியாது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்