Sun ,Mar 03, 2024

சென்செக்ஸ் 73,806.15
60.80sensex(0.08%)
நிஃப்டி22,378.40
39.65sensex(0.18%)
USD
81.57
Exclusive

பாத்து பாத்து வாங்கணும்...இல்லைனா இப்படி தான்...தீ பிடித்து எரியும்!

Priyanka Hochumin August 13, 2022 & 14:15 [IST]
பாத்து பாத்து வாங்கணும்...இல்லைனா இப்படி தான்...தீ பிடித்து எரியும்!Representative Image.

ஒரு முறை போனை சார்ஜ் செய்தால் ஒரு நாள் முழுவதும் பயன்படுத்தும் வகையில் இருந்தா பரவாயில்லை. அது எங்க! ஓயாம 24 மணி நேரமும் போனை யூஸ் பண்ணா அப்புறம் எப்படி சார்ஜ் தாங்கும். இந்த மாறி சமயங்களில் தான் நமக்கு Power Bank என்னும் முக்கிய ஆவணம் தேவைப்படுகிறது. ஆனால் இதுலயும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் ஒன்னு இருக்கு. போன் மட்டும் வெடிக்காதுங்க...பவர் பேங்க்கும் வெடிக்கும். அதெல்லாம் எதனால வெடிக்கிது? பவர் பேங்க் வாங்கும் போது எதையெல்லாம் பார்த்து கவனமா வாங்கணும்? மிக முக்கியமாக எதனால் பவர் பேங்க் வெடிக்கும்? போன்ற அனைத்து கேள்விகளுக்கு பதில் இங்கே உள்ளது.

பர்ஸ்ட் (burst) ஆக காரணம் என்ன?

அதாவது இதைப் பற்றி நன்கு தெரிந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுவது என்னவென்றால், ஒரு பவர் பேங்க் வெடிக்க முக்கிய காரணம் இம்பெர்ஃபெக்ட் சர்க்யூட் (Imperfect Circuit). அப்படின்னா பவர் பேங்க் தயாரிக்கும் போது மட்டமான வெல்டிங் அல்லது ஷார்ட் சர்க்யூட்களைத் தடுக்க சரியான முறையில் இன்சுலேட் (Insulate) செய்யவில்லை என்றால் ஒரு சீக்கிரமே வெப்பமடைய ஆரம்பிக்கும். அதுவே நாளடைவில் தீப்பிடிக்கலாம் அல்லது வெடிக்கவும் செய்யலாம்.

சரி இப்ப மேட்டருக்கு வருவோம்! ச்ச் நமக்கெல்லாம் இப்படி நடக்காதுப்பா என்று நினைக்க வேண்டாம். யாருக்கு எப்ப வேண்டுமானாலும் என்ன வேண்ணா நடக்கலாம். அதுனால இது போன்ற முக்கிய பொருட்களை வாங்கும் பொழுது கம்மி விலையில் வாங்கி அப்பாடி செலவு மிச்சம் என்று நினைக்காமல் இந்த விசயங்களை பார்த்து வாங்குங்கள்.

நீங்கள் வாங்கும் பவர் பேங்க்கின் சார்ஜிங் கேபிள் எந்த அளவிற்கு தரமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பாதுகாப்பாக இருக்கும். அந்த மாறியான சார்ஜிங் கேபிள் உங்கள் டிவைஸ்களை மின்னழுத்தம் மற்றும் அதிக வெப்பமடைவதிலிருந்து பாதுகாக்கும்.

உங்களுக்கு "ஆம்பியர் கவுண்ட்" என்பது சார்ஜரிலிருந்து சார்ஜ் செய்யப்படும் டிவைஸூக்கு வழங்கபப்டும் கரண்ட்டாகும். எனவே, சார்ஜரின் ஆம்பியர் எண்ணிக்கையும் சார்ஜ் செய்யப்படும் டிவைஸூம் பொருந்த வேண்டும். இன்னும் சிம்பிளா சொல்லனும்னா சார்ஜரின் ஆம்பியர் கவுண்ட் அதிகமாக இருக்கலாம். ஆனால் குறைவாக மட்டும் இருக்கவே கூடாது, அப்படி இருந்தா சார்ஜ் ஏறாது அல்லது மெதுவா சார்ஜ் ஏறும் அப்புறம் அப்படியே ஹீட் ஆகும்.

எப்போதும் ஹை குவாலிட்டி லித்தியம் மற்றும் பாலிமர் பேட்டரி கொண்ட பவர் பேங்க்கை வாங்கலும். இன்னும் சில பவர் பேங்க்கில் ஷார்ட் சர்க்யூட்டுகள், ஓவர் சார்ஜிங் மற்றும் ஹீட்டிங் போன்றவைக்கு எதிராக இன்-பில்ட் பாதுகாப்புடன் வருகிறது. அதை வாங்கி நீண்ட நாட்கள் பயன் பெறுங்கள்.

டிராபிக் லைட் மட்டும் இல்லைங்க பவர் பேங்க்கில் LED இண்டிகேட்டர் லைட்டும் மிக முக்கியமானது. ஏனெனில் அவை தான் பவர் பேங்க்கின் நிலை என்ன என்று காண்பிக்கிறது. எனவே, அது தரமானதாக பார்த்து வாங்கினால் ஓவர் ஹீட்டிங் ஆவதை நம்மால் தடுக்க முடியும்.

பவர் பேங்க் பேட்டரி உங்களின் ஸ்மார்ட்போன் பேட்டரியை விட இரண்டு மடங்கு அதிகமானதாக வாங்குங்கள். அதாவது உங்களின் போன் பேட்டரி 4000mAh பேட்டரி என்றால் பவர் பேங்க் பேட்டரி 8000mAh அல்லது அதற்கு மேல் இருப்பவையாக பார்த்து வாங்குங்கள்.

ஒரு சார்ஜரின் அவுட்புட் வால்டேஜ் (Output Voltage) டிவைஸை விட குறைவாக இருக்கக்கூடாது. அப்படி பட்ட பவர் பேங்க்கை தேடி வாங்கவும்.

நமக்கு எது நல்ல பவர் பேங்க்கென்று கேட்டால் நீங்க என்ன சொல்லுவீங்க? அதனுடைய செயல்திறன் மட்டும் இல்ல எவ்ளோ சீக்கிரம் சார்ஜ் ஆகிறது என்பதும் தான்.

கடைசியாக லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் "பிராண்ட்" மிக முக்கியம். ஏதோ இப்போதைக்கு வாங்குனா போதும் என்று ஏதோ ஒரு பவர் பேங்க்கை வாங்காதீங்க. அது நீங்க யூஸ் பண்ணும் டிவைஸ்களுக்கு சிக்கல் தான். எனவே, நல்ல பிராண்ட் பவர் பேங்க்கான்னு பாத்து வாங்குங்க! 

How to choose power bank for mobile, How to choose power bank for phone, how to select power bank for smartphones, how to choose a best power bank.

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்