Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

கூண்டோடு ராஜினாமா.. பீதியில் அலுவலகங்களை இழுத்து மூடிய ட்விட்டர் நிறுவனம்?

Sekar November 18, 2022 & 11:43 [IST]
கூண்டோடு ராஜினாமா.. பீதியில் அலுவலகங்களை இழுத்து மூடிய ட்விட்டர் நிறுவனம்?Representative Image.

ட்விட்டர் நிறுவன ஊழியர்களுக்கு எலோன் மஸ்க் இறுதி எச்சரிக்கை வெளியிட்ட நிலையில், ஊழியர்கள் பெருமளவில் ராஜினாமா கடிதம் சமர்ப்பித்ததால் பீதியடைந்த ட்விட்டர் நிறுவனம், அதன் அனைத்து அலுவலகங்களையும் தற்காலிகமாக மூடியுள்ளது.

அமெரிக்காவின் சிலிக்கான் வேலி குறித்த செய்திகளை மட்டும் வெளியிடும் பிரபல ஊடகமான பிளாட்ஃபார்மரின் நிர்வாக ஆசிரியர் ஜு ஷிபர், "ட்விட்டர் ஊழியர்களை எச்சரித்துள்ளது. அனைத்து ட்விட்டர் அலுவலக கட்டிடங்களும் தற்காலிகமாக மூடப்பட்டு, பேட்ஜ் அணுகல் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இது உடனடியாக நடைமுறைக்கு வரும். ஆனால் இது எதற்காக என்பது பற்றிய விவரங்கள் எதுவும் கொடுக்கப்படவில்லை." என்று ட்வீட் செய்துள்ளார்.

முன்னதாக வியாழன் மாலை 5 மணிக்கு முன்னதாக மஸ்க்கின் புதிய இறுதி எச்சரிக்கைக்குப் பிறகு நூற்றுக்கணக்கான ஊழியர்கள் ட்விட்டர் நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்தனர். எலான் மஸ்க், ஒரு திருப்புமுனை ட்விட்டர் 2.0 ஐ உருவாக்க ஊழியர்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும் என்றும், வெற்றிக்கு அதிக தீவிரத்தில் நீண்ட மணிநேரம் தேவைப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸின் தலைவரான எலான் மஸ்க், ட்விட்டர் மிகவும் பொறியியல் சார்ந்ததாக இருக்கும் என்றும், குழுவின் பெரும்பகுதியை உள்ளடக்கிய சிறந்த கோடிங்கை எழுதும் பணியாளர்கள் இருப்பதாகவும் கூறினார்.

அக்டோபர் பிற்பகுதியில் 44 பில்லியன் டாலர் மதிப்பில் ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்திய எலான் மஸ்க் ஏற்கனவே நிறுவனத்தின் 50 சதவீத ஊழியர்களை வேலையை விட்டு நீக்கி அதிரடி காட்டினார். இந்நிலையில், அவரது தொடர்ச்சியான செயல்பாடுகளால் ட்விட்டர் நிறுவனத்தின் ஊழியர்கள் பலரும் ட்விட்டரை விட்டு வெளியேறி வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்