Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ட்விட்டரில் எடிட் பட்டன்… ஆனா இவங்களுக்கு மட்டும் தான்… எப்போது இருந்து தெரியுமா..?

Gowthami Subramani September 02, 2022 & 19:15 [IST]
ட்விட்டரில் எடிட் பட்டன்… ஆனா இவங்களுக்கு மட்டும் தான்… எப்போது இருந்து தெரியுமா..?Representative Image.

கடந்த சில மாதங்களாகவே, டிவிட்டர் குறித்த பல்வேறு விமர்சனங்களைப் பார்த்தோம். டிவிட்டருக்கும், எலான் மஸ்க்கிற்கும் இடையில் பெரும் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் இந்த சமயத்தில் டிவிட்டரில் சில முக்கிய மாற்றங்களைக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எலான் மஸ்க் வார்த்தைக்கு ஒப்புதல்

தொடர்ந்து நடந்து முடிந்த பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் டிவிட்டர் ஊழியர்களுக்கு எலான் மஸ்க் மீது கோபம் இருப்பினும், அவர் கூறிய சில முக்கியமான மாற்றத்தை டிவிட்டர் நிர்வாகம் ஏற்றுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையிலேயே, டிவிட்டர் நிர்வாகம் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

டிவிட்டரில் Edit ஆப்ஷன்

பொதுவாக, பெரும்பாலான சமூக வலைதளங்கள் Edit சேவையைக் கொண்டு செயல்படுகின்றன. அந்த வகையில், டிவிட்டரில் Edit சேவையை இந்த மாத இறுதிக்குள் அறிமுகம் செய்யப் போவதாகத் தெரிவித்துள்ளது. அதாவது, டிவிட்டரை எலான் மஸ்க் வாங்குவதாக பேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், மஸ்க் தான் டிவிட்டரை வாங்கினால், முதலில் எடிட் பட்டனை அனைத்துப் பதிவுகளுக்கும் கொண்டு வருவதாக அறிவித்திருந்தார்.

டிவிட்டர் பதிவு

டிவிட்டரை எலான் மஸ்க் வாங்க முடியாது என கூறியிருப்பினும், மஸ்க் கூறிய ஐடியாவை ட்விட்டர் செயல்படுத்த முடிவு செய்துள்ளது. அதன் படி, இந்த புதிய சேவையை இந்த மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வர உள்ளதாக டிவிட்டர் தனது அதிகாரப் பூர்வ கணக்கில் அறிவித்துள்ளது.

யார் யாருக்கு இந்த ஆப்ஷன்

இந்த எடிட் பட்டனை வைப்பதன் மூலம், டிவிட்டர் பயனர்கள் தங்களது தவறான பதிவுகளைத் திருத்திக் கொள்ள முடியும். மேலும், இந்தப் புதிய சேவை டிவிட்டரின் புளூ யூசர்களுக்கு மட்டுமே கிடைக்கும் எனவும் அறிவித்துள்ளது. அதாவது, ப்ளூ யூசர் என்றால், டிவிட்டரின் பிரத்தியேக சேவைகளைக் கட்டணம் செலுத்தி வாங்கும் டிவிட்டர் வாடிக்கையாளர்கள் ஆவார்.

இந்த புளூ யூசர்களுக்கு எடிட் ஆப்ஷன் இந்த மாத இறுதி நேரத்திலும், இன்னும் பிற பயனர்களுக்கு வரவிருக்கும் நாளில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Twitter Edit Button Subscribers | Twitter Edit Button Paying | Twitter Edit Button Paying Subscribers | Twitter Edit Button Poll | Twitter Blue | Twitter Launches Edit Button | Twitter Launches Edit Button Paying | Twitter Launches Edit Button Subscribers | Twitter Blue Edit Button | Twitter Needs an Edit Button | Twitter to Add Edit Button | Twitter Adding Edit Button | Twitter Gets Edit Button


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்