Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அக்டோபர் முதல் இந்த போன்களுக்கு வாட்ஸ் அப் சேவை நிறுத்தம்…! ஆனா இதுக்கு ஒரு வழி இருக்கு... என்ன தெரியுமா..?

Gowthami Subramani September 02, 2022 & 18:00 [IST]
அக்டோபர் முதல் இந்த போன்களுக்கு வாட்ஸ் அப் சேவை நிறுத்தம்…! ஆனா இதுக்கு ஒரு வழி இருக்கு... என்ன தெரியுமா..?Representative Image.

அக்டோபர் மாதம் முதல் ஐபோன்களான, iPhone 5 மற்றும் iPhone 5c-ல் வாட்ஸ் அப் செயல்படுவது நிறுத்தப்படும் என அறிக்கை வந்துள்ளது.

முந்தைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ள படி, iOS 10 அல்லது iOS 11 பதிப்புகளில் உள்ள iPhone மாடல்களில் வாட்ஸ் அப் விரைவில் நிறுத்தப்படும் எனக் கூறப்பட்டது. இந்த மாற்றங்கள் வரும் அக்டோபர் மாதம் 24 ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வரும் எனக் கூறப்படுகிறது.

தொடர்ந்து பயன்படுத்த

ஐபோன் பயனர்கள், தொடர்ந்து தங்களது ஐபோன்களில் வாட்ஸ் அப்-ஐப் பயன்படுத்துவதற்கு, iOS 12 அல்லது புதிய வெர்சன்களுக்கு தங்கள் கைபேசிகளை அப்டேட் செய்ய வேண்டும். இதே போல iPhone 5 மற்றும் iPhone 5c பயனர்களும் இந்த iOS 12 அல்லது புதிய வெர்சனுக்கு கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஆனால், இந்த ஐபோன் மாடல்களில் புதிதாக iOS Build-ஐ அப்டேட் செய்வது என்பது நடைமுறையில் இல்லை எனவும் அறிக்கை ஒன்று வந்துள்ளது.

அறிக்கையில் கூறியபடி,

அதன் படி, WABetaInfo மே மாதம் வெளியிட்ட அறிவிப்பின் படி, Apple iPhone 5 மற்றும் iPhone 5C-ல் வாட்ஸ் அப் ஆதரிப்பதை விரைவில் நிறுத்தும் எனக் கூறியுள்ளது. அறிக்கையில் குறிப்பிட்டுள்ள படி, அக்டோபர் மாதம் 24 ஆம் தேதிக்குள் iOS 10 மற்றும் iOS 11 –க்கான ஆதரவு உள்ள ஐபோன்களும் வாட்ஸ் அப் செயல்படுத்துவதை நிறுத்தக் கூடும் எனக் கூறியுள்ளது.

எதிர்ப்புகள்

வாட்ஸ் அப் பயன்படுத்துவதற்காக மேம்படுத்தப்படும் ஆதரவு இல்லாததால், ஐபோன் 5 பயனர்கள் இதனை எதிர் கொள்கின்றனர். இருந்தபோதிலும், iPhone 5S அல்லது அதற்குப் பின்னால் வந்த மாடல்களைக் கொண்ட ஐபோன்களில் iOS 12-க்கு அப்டேட் செய்து வாட்ஸ் அப் சேவையைத் தொடர்ந்து பெற முடியும்.

புதுப்பிக்கப்பட்ட FAQ

இந்த மாற்றங்களைப் பிரதிபலிக்கும் வகையிலேயே, வாட்ஸ் அப் தனது FAQ பக்கத்தில் அதற்கான தேவைகளைப் பிரதிபலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேற்கூறியவாறு, வாட்ஸ் அப் செயலியைப் பெறுவதற்கு, பயனர்கள் தங்களது ஐபோன்களைப் புதுப்பிக்க வேண்டும். பெரும்பாலானா ஆப்பிள் பயனர்களுக்கு அப்டேட் செய்வது ஒரு பிரச்சனையாக இருக்காது. இதில் 4% பயனாளர்கள், iOS 13 அல்லது அதற்குப் பிறகு வந்த பதிப்புகளை நிறுவியுள்ளனர். ஆனால், iOS 15-க்கு இது வரை ஐபோன் பயனர்களில் 89% புதுப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Whatsapp iphone 5 5C Stop Working October 24 report Whatsapp | Whatsapp for iOS | iphone 5 | iphone 5C | Whats app Not Working On this iPhones | Tech News | Whats app Latest News


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்