Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

New Upcoming Video Games: இந்த சம்மர் லீவ்ல கேம் விளையாடி டைம் பாஸ் பண்ணலாம்! அதுக்கு இந்த கேம்ஸ் ட்ரை பண்ணுங்க!

Priyanka Hochumin May 25, 2022 & 14:05 [IST]
New Upcoming Video Games: இந்த சம்மர் லீவ்ல கேம் விளையாடி டைம் பாஸ் பண்ணலாம்! அதுக்கு இந்த கேம்ஸ் ட்ரை பண்ணுங்க!Representative Image.

New Upcoming Video Games: ஒவ்வொரு ஆண்டும் புத்தம் புது வீடியோ கேம்கள் வெளியிடப்பட்டு சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த வருடம் மே மாதம் முடியப்போகிறது, அந்த வகையில் 2022-டிற்கான வெளிவரப் போகும் கேம்களில் ஒரு சிலவற்றை இந்த பதிவில் பார்க்கலாம்.

சிறிய நிறுவனம் முதல் பெரிய நிறுவனம் வரை ஒரு ஆண்டிற்கு 1000-க்கும் மேலான கேம்கள் வெளிவருகிறது. அதில் ஒரு சில கேம் தான் மக்களின் கவனத்தை ஈர்க்கிறது. மீதமுள்ள சில கேம்களைப் பற்றி நமக்கு தெரியாமல் இருக்கலாம். அந்த வகையில் ஒரு சில கேம்கள் இந்த மாதம் அல்லது வரவிருக்கும் மாதங்களில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

1. Sonic Origins | Best Upcoming Video Games 

இந்த சோனிக் ஆரிஜின்ஸ் கேமானது SEGA Genesis மற்றும் SEGA CDக்கான நான்கு ஒரிஜினல் சோனிக் வீடியோ கேம்களின் HD ரீமேக்களின் படைப்பாகும். மேலும் இந்த கேம்களில் சோனிக் ஹெட்ஜ்ஹாக், சோனிக் ஹெட்ஜ்ஹாக் 2, சோனிக் சிடி மற்றும் சோனிக் ஹெட்ஜ்ஹாக் 3 மற்றும் நக்கிள்ஸ் ஆகிய விளையாட்டுகளும் அடங்கும்.

கேமின் மையக் கதை | Upcoming 2022 Video Games 

சோனிக் ஆரிஜின்ஸ் இந்த நான்கு கதைகளையும் ஒன்றாக சேர்த்தது தான் இந்த வீடியோ கேம். இந்த கேம் புரியாதவர்களுக்கு விளக்கும் வகையில் கதைச் சுருக்கத்தை இப்பொழுது பார்க்கலாம். இந்த கடையில் சோனிக், அவருடைய நம்பகமான நண்பன் டெயில்ஸ் மற்றும் பின்னர் புதிய நண்பர் நக்கிள்ஸ், இவர்கள் வில்லனான டாக்டர் ரோபோட்னிக் அனைத்து மரகதங்களையும் (emeralds) சேகரிப்பதை தடுக்கின்றனர்.  

ரிலீஸ் டேட்New Upcoming Video Games 

விளையாடும் வீரர்கள் இந்த நான்கு கேம்களில் ஏதாவது ஒன்றில் டெயில்ஸ் மற்றும் நக்கிள்ஸைக் கட்டுப்படுத்தலாம். இருப்பினும் சோனிக் சிடியில் நக்கிள்ஸ் இல்லாதது குறிப்பிடத்தக்கது. இந்த விளையாட்டு சமீபத்தில் வெளியான சோனிக் ஹெட்ஜ்ஹாக் 2 லைவ்-ஆக்சன் திரைப்படத்தில் இருந்து கிடைத்த உத்வேகத்தால் உருவாக்கப்பட்டது. மேலும் நிண்டெண்டோ ஸ்விட்ச், PS4/5, Xbox One/Series X மற்றும் PC ஆகியவற்றிற்காக ஜூன் 23, 2022 அன்று வீடியோ கேம் வெளிவருகிறது.

2. Xenoblade Chronicles 3 | Best Upcoming Video Games

Xenoblade Chronicles கேமின் டெவலப்பர் மோனோலித் சாஃப்டின் மூன்றாவது தொடரானது தான் Xenoblade Chronicles 3 வீடியோ கேமாகும். Xenoblade Chronicles 2 க்குப் பிறகு நாடாகும் நிகழ்வுகளை மையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது இந்த Xenoblade Chronicles 3 கேம். மேலும் இது Aionios எனப்படும் மற்றொரு கற்பனை உலகில் நடைபெறும் நிகழ்வுகள் என்று கூறப்படுகிறது.

கேமின் மையக் கதை | Upcoming 2022 Video Games

இந்த விளையாட்டில் கெவ்ஸ் (Keves) மற்றும் ஆங்குஸ் (Angus) என்று இரண்டு பிரிவுகள் ஒருவருக்கு ஒருவர் போரில் ஈடுபட்டுள்ளனர். இந்த இரண்டு பிரிவுகளில் இருந்து இரண்டு கதாநாயகர்கள் இந்த விளையாட்டில் இடம் பெறுவார்கள். கெவ்ஸ் குழுவில் இருந்து நோவா மற்றும் அவரின் பிரெண்ட்ஸ் லான்ஸ் மற்றும் யூனியும், அங்கஸ் பிரிவில் இருந்து மியோ மற்றும் டேயோன், சேனா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

ரிலீஸ் டேட் New Upcoming Video Games

இந்த கேம் ஜூலை மாதம் 29 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் புதிதாக மாற்றப்பட்டது, குழுவின் எண்ணிக்கையை 7 ஆக உயர்த்தியுள்ளது மற்றும் விளையாட்டிற்கு இடையில் ஒரு சில திறன்களைப் பெற இன்டர்லிங்க் அமைப்பை கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.   

3. Digimon Survive | Best Upcoming Video Games

90s கிட்ஸ்-களுக்கு மிகவும் பிடித்தமான கேமாக Digimon Survive திகழும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படி பட்ட விஷுவல் நாவல் வீடியோ கேம், டெவலப்பர் ஹைடினால் உருவாக்கப்பட்டது. இந்த கேம் முழுக்க முழுக்க விளையாடுபவர்களின் சாய்ஸ் பொறுத்தே இருக்கிறது. அவர்கள் எடுக்கும் முடிவால் அவர்கள் இந்த கேமின் அடுத்த கட்டத்திற்கு செல்லலாம் அல்லது தோல்வியடையலாம்.

கேமின் மையக் கதை | Upcoming 2022 Video Games

இதில் வெவ்வேறு விதமான கேம் பிளே இடம்பெற்றுள்ளது.

Drama Parts - இந்த கேமின் முன்னேற்றத்தை தெளிவு படுத்துவதற்காக உரையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்குகிறது.

Search Action - முக்கியமான நோக்கம் எப்படியாவது 'உயிர்வாழ்வது'. விளையாடுபவர்கள் வழிகளை கண்டுபிடித்து இறுதி வரை உயிருடன் இருக்க வேண்டும்.

Free Action - குறிப்பிட்ட நேரத்திற்குள் விளையாடுபவர்கள் எங்கு செல்ல வேண்டும், யாருடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து விளையாட வேண்டும்.

Free Battle - வீரர்கள் தங்கள் பார்ட்னர் டிஜிமோனுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

ரிலீஸ் டேட் | New Upcoming Video Games 

இந்த கேம் ஜூலை 29, 2022 அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் Nintendo Switch, PS4, Xbox One மற்றும் PC-களில் உபயோகிக்கலாம்.

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்