Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

அட்டகாசமான ரிலீஸ்...லேட்டஸ்ட் Vivo V21s 5G...வேற லெவல் அம்சங்கள் ப்ரோ!

Priyanka Hochumin November 18, 2022 & 10:50 [IST]
அட்டகாசமான ரிலீஸ்...லேட்டஸ்ட் Vivo V21s 5G...வேற லெவல் அம்சங்கள் ப்ரோ! Representative Image.

Vivo V21s Price in India: விவோ நிறுவனத்தின் 5ஜி போனான Vivo V21s மாடல் தைவானில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் புதுப்பிக்கப்பட்ட ஆண்ட்ராய்டு 12 பயன்படும் இருப்பதாக கூறப்படுகிறது. இது தவிர இன்னும் என்னென்ன சிறப்பம்சங்கள் இந்த போனில் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வோம்.

விலை விவரங்கள்

தைவானில் அறிமுகமான Vivo V21s ஸ்மார்ட்போன் 11,490 தைவான் டாலருக்கு அறிமுகமானது. அதாவது இந்திய மதிப்பில் ரூ. 30,000/-க்கு விற்பனையாகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் டார்க் ப்ளூ நிறத்தில் கிடைக்கும். இதே விலை மற்றும் நிறத்தில் இந்தியாவில் கிடைக்குமா என்று தெரியவில்லை.

Vivo V21s அம்சங்கள்

பட்ஜெட் ஸ்மார்ட்போனான விவோ வி 21 எஸ் 5ஜி, 90Hz புதுப்பிப்பு விகிதத்துடன் 6.44-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. அத்துடன் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான FunTouch OS 12 உடன் இயங்குகிறது. மேலும் 2404x1080 பிக்சல்கள் ரிச்செல்யூஷன் மற்றும் MediaTek Dimensity 800U சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

கேமராவைப் பொறுத்த வரை பின்புறத்தில் ட்ரிபிள் ரியர் கேமரா வைக்கப்பட்டுள்ளது. 64 மெகாபிக்சல் பிரைமரி லென்ஸ், 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் மற்றும் 2 மெகாபிக்சல் ஆகியவற்றை கொண்டுள்ளது. வீடியோ கால் மற்றும் செல்பீ பயன்பாட்டிற்கும், முன்பக்கத்தில் 44 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

போனில் இணைப்பு விருப்பங்களாக - டூயல் சிம் 5ஜி, புளூடூத் வி5.1, ​​டூயல் பேண்ட் வைஃபை, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக் உள்ளது. நீண்ட நேரம் நீடித்த பயன்பாட்டிற்காக 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை ஆதரிக்கும் 4000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்