Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

DigiLocker Latest Update: அரசு அதிரடி...ஒரு மெசேஜ் வாட்ஸ்அப்பில் அனுப்பி...பான் கார்டு, தேர்ச்சி சான்றிதழ் அனைத்தும் பெறலாம்!

Priyanka Hochumin May 24, 2022 & 18:25 [IST]
DigiLocker Latest Update: அரசு அதிரடி...ஒரு மெசேஜ் வாட்ஸ்அப்பில் அனுப்பி...பான் கார்டு, தேர்ச்சி சான்றிதழ் அனைத்தும் பெறலாம்!Representative Image.

DigiLocker Latest Update: மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த டிஜி லாக்கர் சேவையாகும். மக்கள் தங்களுக்கு வேண்டிய ஆவணங்களை எளிதாக அணுக இந்த திட்டம் வழிவகுக்கிறது. இதற்கு நீங்கள் முதலில் வாட்ஸ்அப்பில் +91 9013151515 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்களை எளிதில் டவுன்லோட் செய்துகொள்ளலாம். 

டிஜி லாக்கர் சேவை | DigiLocker New Update

மக்கள் அதிகம் பயன்படுத்தும் digilocker on whatsapp உடன் இணைந்து அரசாங்கம் இந்த திட்டத்தை அமலுக்கு கொண்டுவந்துள்ளது. மக்களின் வேலையை சுலபமாக்க MyGov ஹெல்ப் டெஸ்க் மூலம் "வாழ்க்கை வசதியை" மேம்படுத்த இது உதவுகிறது. எனவே, மக்களே நீங்கள் வீணாக அலைந்து திரிந்து உங்களது ஆவணங்களை வாங்க வேண்டிய அவசியம் இனி இல்லை. ஒரு கிளிக் போதும் உங்களின் வேலை முடிந்துவிட்டது. இந்த டிஜி லாக்கர் மூலம் 

  • பான் கார்டு
  • ஓட்டுநர் உரிமம்
  • சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்ச்சிச் சான்றிதழ்
  • வாகனப் பதிவுச் சான்றிதழ் (RC)
  • இருசக்கர வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் பாலிசி
  • பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்
  • காப்பீட்டுக் கொள்கை ஆவணம் உள்ளிட்டவைகளைப் பெற முடியும்.

மாணவர்களுக்கு Apple Music சந்தா உயர்வு...இந்தியாவில் மட்டுமா?

என்ன செய்ய வேண்டும்? | DigiLocker on WhatsApp

இப்பொழுது நீங்கள் வாட்ஸ்அப் பயன்படுத்தி உங்களுக்குத் தேவையான முக்கிய ஆவணங்களை எப்படி டவுன்லோட் செய்வது என்று பார்க்கலாம். 

முதலில் உங்கள் போனில் +91 9013151515 என்ற எண்ணை சேவ் பண்ணவும்.

பிறகு வாட்ஸ்அப்பை ஓபன் செய்யவும். 

அந்த எண்ணுக்கு நமஸ்தே, ஹாய் அல்லது டிஜி லாக்கர் என்று அனுப்பவும்.

Digilocker Helpdesk வழங்கும் சேவைகளின் பட்டியலில் உங்களுக்கு தேவையானதை கேட்கவும்.

பிறகு அவர்கள் அனுப்பியதும் அதை நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம். 

இந்த டிஜி லாக்கர் மூலம் ஏறக்குறைய 100 மில்லியனுக்கும் அதிகமாக மக்கள் பதிவு செய்துள்ளனர்.  மேலும் 5 மில்லியனுக்கு அதிகமான ஆவணங்கள் பெறப்பட்டுள்ளது. மக்கள் தங்களின் மொபைல் மூலமாகவே அவர்களுக்கு தேவையான ஆவணங்களைப் பெறுவது உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்.

உங்களின் Gmail நம்பி வழியிதா...? ஒரே கிளிக்கில் வாஷ் அவுட்...! இது நிஜமா செம்ம யூஸ்...!

எப்பொழுது தொடங்கப்பட்டது? | DigiLocker Latest Update

முதன் முதலில் வாட்ஸ்அப் ஹெல்ப் டெஸ்க், மார்ச் 2020 இல் தொடங்கப்பட்டது. இதன் சேவைகள் மூலம் அரசாங்க மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி முன்பதிவு மற்றும் தடுப்பூசி சான்றிதழ்கள் டவுன்லோட் செய்ய என்று அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் கோவிட் தொடர்பான உண்மை நிலவரங்களை தெரிந்து கொள்ள இந்த சேவை பயன்படுத்தப்பட்டது. இந்தியா முழுவதும் மில்லியன் கணக்கில் மக்கள் இதனைப் பயன்படுத்தி தடுப்பூசி போட்டுக்கொண்டு, ஆவணங்களைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.   

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்