Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

IRCTC : ரயில் ஆன்லைன் முன்பதிவில் புதிய மாற்றம்..! எப்படி முன்பதிவு செய்வது..?

Muthu Kumar May 18, 2022 & 14:58 [IST]
IRCTC : ரயில் ஆன்லைன் முன்பதிவில் புதிய மாற்றம்..! எப்படி முன்பதிவு செய்வது..?Representative Image.

IRCTC : IRCTC ரெயில் டிக்கெட் ஆன்லைன் முன்பதிவில் புதிய மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. இதில் புதிய புக்கிங் முறையை பற்றி தெளிவாக காணலாம்.

IRCTC

IRCTC ஆப் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இலவசமாக கிடைக்கிறது. இந்த ஆப் மூலம் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் தங்களுக்கான டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வருகின்றனர். 

டிக்கெட் முன்பதிவு 

இந்நிலையில் இந்திய ரெயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பயணிகளுக்கான டிக்கெட் முன்பதிவு செயல்முறையில் திருத்தம் செய்துள்ளது.

புதிய விதி

IRCTC-யின் புதிய விதிகளின் படி, அதன் ஆப் அல்லது இணையதளத்தில் ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு முன் பயனர்கள் வெரிபிகேஷன் செய்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. meelum வெரிபிகேஷனை பூர்த்தி செய்யாதவர்கள் முன்பதிவு செய்ய முடியாது என்றும் ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.

IRCTC-யில் முன்பதிவு செய்வது எப்படி..?

✦ முதலில் ஐஆர்சிடிசி ஆப் அல்லது இணையதளத்திற்குள் லாகின் செய்யுங்கள்.

✦  ஐஆர்சிடிசி ஆப்ஸ் அல்லது இணையதளத்திற்குள் உள்ள வெரிபிகேஷன் விண்டோவை கிளிக் செய்யவும்.

✦ அதில் உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை உள்ளிடவும்.

✦ இதனையடுத்து வலதுபுறத்தில் வெரிபிகேஷனுக்கான விருப்பத்தையும் இடதுபுறத்தில் எடிட் செய்வதற்கான பொத்தானையும் காண்பீர்கள்.

✦ அதன் பின்னர் மெயில் ஐடி மற்றும் செல்போனுக்கு வந்த ஓடிபி விவரங்களை தனித்தனியே உள்ளிடவும். அதன் பின்னர் உங்கள் ஐஆர்சிடிசி அக்கவுண்ட் மூலமாக நீங்கள் பயணிக்க விரும்பும் ரயிலுக்கான ஆன்லைன் டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம்.

வெரிபிகேஷனுக்குப் பிறகு..?

✦ முதலில் IRCTC ஆப் அல்லது இணையதளத்திற்குள் லாகின் செய்யுங்கள்.

✦ புறப்படும் இடம், சேருமிடம், பயணத் தேதி மற்றும் பிற விவரங்களை உள்ளிடவும்.

✦ அதன் பின்னர் தோன்றும் பட்டியலில் இருந்து சரியான ரயிலை தேர்வு செய்யுங்கள். அதனைத்தொடர்ந்து Book Now என்பதை கிளிக் செய்து டிக்கெட்டை முன்பதிவு செய்யுங்கள்.

✦ பயணியின் பெயர், வயது, பாலினம், பெர்த் விருப்பம் உள்ளிட்ட தகவல்களை உள்ளிடவும்.

✦ பேமெண்ட் ஆப்ஷனை கிளிக் செய்து டிக்கெட்டிற்கான தொகையை செலுத்தவும்.

இந்த அணைத்து செயல்முறை முடிந்த பிறகு பதிவுசெய்த மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு முன்பதிவு குறித்து IRCTC குறுஞ்செய்தி மூலமாக தகவல் தெரிவிக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்