Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Personal Data Scraping: Submit அழுத்துவதற்கு முன்பே...data-வை தட்டித்தூக்கும் இணையதளங்கள்...ஜாக்கிரதை மக்களே!

Priyanka Hochumin May 16, 2022 & 19:15 [IST]
Personal Data Scraping: Submit அழுத்துவதற்கு முன்பே...data-வை தட்டித்தூக்கும் இணையதளங்கள்...ஜாக்கிரதை மக்களே!  Representative Image.

Personal Data Scraping: மக்கள் அதிகம் பயனப்படுத்தும் இணையதளங்களில் இருந்து, பயனர்கள் அனுமதியின்றி டேட்டாக்கள் சேகரிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளன. 

இதை எப்படி கண்டுபிடிச்சாங்க? | Data Theft Websites

ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், மக்கள் அடிக்கடி பயன்படுத்தும் சிறந்த 1,00,000 இணையத்தளங்களில் இருந்து submit பட்டன் அழுத்துவதற்கு முன்பே பயனர்களின் டேட்டாக்கள் சேகரிக்கப்படுகிறது. இது பயனர்களின் அனுமதியின்றி நடப்பது இன்னும் ஒரு அதிரிச்சியான தகவல். இந்த ஆய்வை Leuven, Radboud பல்கலைக்கழகம் மற்றும் Lausanne பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் நடத்தினர். இவர்கள் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் US ஆகிய இரண்டு இடங்களை மையமாகக் கொண்டு நடத்தப்பட்டது. மேலும் இந்த இரண்டு நாடுகளில் சிறந்த 1,00,000 இணையதளங்களை வலம் வருவதற்கும் (crawling) பகுப்பாய்வு (analysis) செய்வதற்கும் உதவும் அமைப்பை அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

என்னென்ன டேட்டா சேகரிக்கப்படுகிறது? | User Data Theft Website

மக்கள் அதிகம் பார்க்கும் வெப்சைட்களில் விளம்பரங்கள் அதிகம் வருவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அது ஏனென்றால், ஒரு சில நிறுவனங்கள் அல்லது சொந்த தொழில் ஆரம்பித்தவர்கள் தங்களை விளம்பரப்படுத்திக்கொள்ள எண்ணற்ற வழிகளை பயன்படுத்துவார்கள். இப்பொழுது அனைத்தும் டிஜிட்டலாக மாறியதால், இது போன்ற வெப்சைட்களில் தங்களின் விளம்பரங்களை போட அவர்களுக்கு பணம் கொடுப்பார்கள். இதன் மூலம் இருவருக்கும் லாபமாக இருக்கும் இந்த செயல் தான் இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. 

இந்த விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்தல் நோக்கங்களுக்காக ஒருங்கிணைக்கப்பட்ட மூன்றாம் தரப்பு டிராக்கர்கள், பயனர்களின் ஈமெயில் அட்ரஸ் போன்ற விவரங்களை அவர்களின் தனிப்பட்ட டேட்டாக்களை அனுமதியின்றி சேகரிக்கின்றன. 

யாரெல்லாம் இடம்பெற்றுள்ளன? | Data Theft Website

பகுப்பாய்வு செய்யப்பட்ட வெப்சைட்களில் இருந்து, சுமார் 1,844 இணையதளங்கள் ஐரோப்பிய ஒன்றியப் பகுதியில் இருந்து வரும் பார்வையாளர்களின் தரவுகளையும், அமெரிக்காவில் இது டபுளாகி 2,950 இணையதளங்கள் தரவுகளை எடுப்பதாகவும் இந்த ஆய்வு தெரிவித்தது. மேலும் பெரும்பாலான பயனர்களின் தரவுகளைப் பெறுபவர்கள் மெட்டா மற்றும் டிக் டாக் உள்ளிட்ட நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வருகிறது. இருப்பினும் 41 முன்னர் அறியப்படாத டிராக்கர் டொமைன்கள், சிறந்த வலைத்தளங்களில் இருந்து பயனர் தரவைப் பெரும் பட்டியலில் இருந்து கண்டுபிடித்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

அமெரிக்காவில், USAToday, Business Insider, Fox News, Time மற்றும் Trello ஆகிய இணைத்தளங்களும், ஐரோப்பிய ஒன்றியத்தில் Independent, Shopify, Newsweek மற்றும் Marriott ஆகிய இணைத்தளங்களில் இருந்து, டிராக்கர்களுக்கு ஈமெயில் முகவரிகள் கசிந்துள்ளதாக கண்டறியபப்பட்டது. மேலும் 52 இணையதளங்களில் இருந்து ரஷ்யாவின் யாண்டெக்ஸ் உட்பட மூன்றாம் தரப்பினர், சமர்ப்பிப்பதற்கு முன் Password-ஐ  தற்செயலாக சேகரித்தது தெரியவந்தது. பிறகு இதற்கான தீர்வையும் யாண்டெக்ஸ் உருவாகியுள்ளது. 

ஆப்பிள் மற்றும் பிற தொழில்நுட்ப நிறுவனங்கள் பயனர்களின் ஆன்லைன் கண்காணிப்பைக் குறைக்க, மூன்றாம் தரப்பு குக்கீகள் மற்றும் டிராக்கர்களைத் தடுக்கத் தொடங்கியுள்ளனர். இதைப்பற்றி மெட்டா மற்றும் டிக் டாக் நிறுவங்களிடம் கேட்ட பின்பு இதற்கான விளக்கத்தை தெரியப்படுத்தவாக கூறியுள்ளனர்.     

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்