Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வாட்ஸ்அப்பில் புதிய அம்சம்.. ஆப்பு அப்டேட்டும் கூட.. | WhatsApp New Feature

Nandhinipriya Ganeshan Updated:
வாட்ஸ்அப்பில் புதிய அம்சம்.. ஆப்பு அப்டேட்டும் கூட.. | WhatsApp New FeatureRepresentative Image.

மெட்டா நிறுவனத்தின் மெசேஜிங் தளமான வாட்ஸ்அப் தன்னுடைய பயனர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் விதமாக அவ்வப்போது புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. எத்தனையோ அம்சங்களை அறிமுகப்படுத்திய வாட்ஸ்அப் தற்போது ஒரு சூப்பரான அம்சத்தை வெளியிட்டுள்ளது. இது உண்மையில் பலராலும் எதிர்பார்க்கப்பட்ட அப்டேட் என்றே சொல்லலாம். அப்படி என்னங்க அப்டேட்டு? என்று கேட்கிறீங்களா? அது தாங்க 'கம்பேனியன் மோட் ' [Companion Mode]. இந்த அம்சத்தை வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பரில் இருந்து உருவாக்கத் தொடங்கியது. 

ஒருவழியாக தற்போது அதன் ஆன்ட்ராய்டு பீட்டா சோதனையாளர்களுக்கு வெளியிட்டுள்ளது. இந்த கம்பேனியன் மோட் அம்சத்தின் மூலமாக ஒரு பயனர் தனது வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை 4 வெவ்வேறு ஸ்மார்ட்போன்களுடன் இணைத்துக் கொள்ளலாம். இதற்கு உங்க மொபைல் நம்பர் தேவையில்லை. ஜஸ்ட் ஸ்கேன் செய்தாலே போதுமானது. அதாவது, உங்களுடைய பிரதான மொபைலில் இருக்கும் வாட்ஸ்அப் அக்கவுண்டின் QR குறியீட்டை நீங்கள் இணைக்க விரும்பும் மற்றொரு ஸ்மார்ட்போனால் ஸ்கேன் செய்தாலே போதும். 

உங்களுடைய பிரதான மொபைலில் இருக்கும் சேட் ஹிஸ்டரி அனைத்தும் (Chat History) இணைத்த மற்றொரு ஸ்மார்ட்போனுக்கு வந்துவிடும். இதேபோல், ஒரே நேரத்தில் 4 வெவ்வேறு ஸ்மார்ட்போன்களில் இணைத்து பயன்படுத்திக் கொள்ளலாம். அனைத்து சேட் ஹிஸ்டரியும் end to end encrypted செய்யப்படும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் உறுதியளித்துள்ளது. கூடிய விரைவில் அனைத்து வாட்ஸ்அப் பயனர்களுக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அசத்தல் அப்டேட்டாக இருந்தாலும், ஒரு சிலருக்கு ஆப்பு அப்டேட்டாகவும் இருக்கப்போகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்