Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ட்விட்டர் லோகோ மாற்றம்...காரணத்தை வெளியிட்ட...எலான் மஸ்க் | Twitter Logo Change

Priyanka Hochumin Updated:
ட்விட்டர் லோகோ மாற்றம்...காரணத்தை வெளியிட்ட...எலான் மஸ்க் | Twitter Logo ChangeRepresentative Image.

பல வருடங்களாக ட்விட்டரின் அடையாளகமாக இருக்கும் நீல பறவை லோகோ மாற்றப்பட்டதால் உலகளவில் மக்கள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.

எலான் மஸ்க் அவர்கள் ட்விட்டரை வாங்கிய பின்னரில் இருந்து பல மாற்றங்கள் செய்து வருகிறார். அதில் ஒன்று தான் இந்த ட்விட்டர் லோகோ மாற்றம். இன்று திடீரென ட்விட்டர் பக்கத்தை ஓபன் செய்தால் ஒரு நாய் குட்டியின் முகம் தெரிகிறது. இது வேற ஒன்றும் இல்லை, Dogecoin எனப்படும் கிரிப்டோகரன்சியின் அடையாளமாகும். பில்லி மார்கஸ் மற்றும் ஜாக்சன் பால்மர் ஆகியோரால் நகைச்சுவையாக பணம் பரிவர்த்தனை நடைபெற வேண்டும் என்ற நோக்கில் அவர்கள் உருவாக்கிய கிரிப்டோகரன்சியின் அடையாளம் தான் அந்த நாயின் உருவப்படும்.

ட்விட்டர் லோகோ மாற்றம்...காரணத்தை வெளியிட்ட...எலான் மஸ்க் | Twitter Logo ChangeRepresentative Image

அவர்களின் அந்த முயற்சியை பல வருடமாக எலான் மஸ்க் அவர்கள் ஊக்குவித்து வந்துள்ளார். இன்று திடீரென ட்விட்டர் லோகோ மாற்றப்பட்டதால் Doge coin கிரிப்டோகரன்சியின் மதிப்பு 30 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதனால் இந்த மாற்றம், இதன் பின்பு இருக்கும் காரணம் குறித்து எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை. மேலும் இந்த லோகோ மாற்றம் கணினியில் மட்டுமே தென்படுவதாகவும், மொபைல் செயலியில் இன்னும் தென்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்