Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சூப்பரான கோடைக் கொண்டாட்டத்திற்கு பெங்களூர் வொண்டர்லா தான்..! | Wonderla Bangalore

Gowthami Subramani Updated:
சூப்பரான கோடைக் கொண்டாட்டத்திற்கு பெங்களூர் வொண்டர்லா தான்..! | Wonderla BangaloreRepresentative Image.

சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பிச் செல்லும் இடங்களில் ஒன்று அம்யூஸ்மென்ட் பார்க்குகள். இந்த அம்யூஸ்மென்ட் பார்க்குகளில் ஒன்றாக விளங்குவது வொண்டர்லா. இது இந்தியாவில் பெங்களூர், கொச்சி, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் இந்த வொண்டர்லா செயல்பட்டு வருகிறது. தற்போது, தமிழகத்தில் சென்னையிலும் வொண்டர்லா அமைக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்தப் பதிவில், பெங்களூரில் உள்ள வொண்டர்லாவின் டிக்கெட் விலை, பார்க் நேரம், ரைட்ஸ் விவரங்கள் மற்றும் இது குறித்த பல்வேறு தகவல்களைக் காணலாம்.

மெகா த்ரில்லர் ரைட்ஸ்

பெங்களூரில் உள்ள இந்த வொண்டர்லாவில் High Thrill Rides, Water Rides, Land Rides, Kids Rides போன்றவை உள்ளன. இவை அனைத்துமே, மக்கள் விரும்பிச் செல்லக் கூடிய ரைடுகள் ஆகும். இவற்றில் வாடிக்கையாளர்களுக்கு புது வித அனுபவத்தை வழங்கக் கூடிய ரைடுகள் சிலவற்றைக் காணலாம்.

சூப்பரான கோடைக் கொண்டாட்டத்திற்கு பெங்களூர் வொண்டர்லா தான்..! | Wonderla BangaloreRepresentative Image

Recoil

இந்த ரைடின் குறைந்தபட்ச உயரம் 140 செ.மீ ஆகும். இது இந்தியாவின் முதல் ரிவர்ஸ் லூப்பிங் ரோலர் கோஸ்டர் ரைடு ஆகும். இது ஒரு த்ரில் அனுபவத்தைத் தரும். இது இரண்டு பாதை வளைவுகளைக் கொண்டுள்ளது. இந்த ரெய்டில், ரயிலின் ஒரு வளைவில் ஏறி, 1 வினாடியில் மணிக்கு 80 கிமீ வேகத்தில் செல்லும். தண்டவாளத்தில் கோப்ரா ரோல் மற்றும் லூப் போன்றவற்றைச் சந்திப்பதற்கு முன், இரண்டாவது வளைவில் ஏறி, மீண்டும் 40 மீ உயரத்திற்குச் சென்று, மீண்டும் பழைய இடத்திற்கு வருகிறது. இந்த பின்னோக்கி இயக்கப்படும் ரைடு, த்ரில்லர் அனுபவத்தைத் தரக்கூடியதாக அமைகிறது.

சூப்பரான கோடைக் கொண்டாட்டத்திற்கு பெங்களூர் வொண்டர்லா தான்..! | Wonderla BangaloreRepresentative Image

Flash Tower

Flash Tower ரைடு ஆனது, 40 மீட்டர் உயரம் கொண்ட Shoot-up மற்றும் Drop-down ஆகும். இதில், திடீரென மேல் நோக்கி செல்லப்பட்டு உச்சியை அடைவதற்குள் திடீரென வேகம் குறைந்து விடும். பின்னர், தரையில் அதிகமான வீழ்ச்சியில் இறக்கி விடப்படுவர். இதில், ரைடர்ஸ் கீழே விழுவது போன்ற உணர்வை அடைவர். இந்த சவாரியில் ஏறும் போது ~1.2G முடுக்கத்துடனும், இறக்கத்தின் போது ~3G முடுக்கத்துடனும் வேகம் இருக்கும்.

சூப்பரான கோடைக் கொண்டாட்டத்திற்கு பெங்களூர் வொண்டர்லா தான்..! | Wonderla BangaloreRepresentative Image

Equinox

இந்த Equinox சுற்றில், 5.5 மீட்டர் விட்டம் கொண்ட இருக்கையின் மேலே இருந்து இணைக்கப்பட்ட இருக்கையில் ரைடர்ஸ் அமர்ந்து கொள்ளலாம். இதில், ரைடர்ஸ் கால்கள் சுதந்திரமாக இருக்கும். சக்தி வாய்ந்த மோட்டார்கள் மூலம், இந்த Equinox இயக்கப்படும் போது, முன்னும், பின்னும் ஊசலாடுகிறது. இது உச்சத்தில் அதிகபட்சமாக 70 கிமீ வேகத்தில் செல்லக் கூடியதாகவும், தலைகீழாக இருக்கும் அனுபவத்தைத் தரக்கூடியதாகவும் அமையும்.

சூப்பரான கோடைக் கொண்டாட்டத்திற்கு பெங்களூர் வொண்டர்லா தான்..! | Wonderla BangaloreRepresentative Image

Insanity

இந்த ரைடானது ராட்சத ஸ்க்விட் போன்ற ரோபோவைக் கொண்டுள்ளது. இது நான்கு கைகள் கொண்டதாகவும், ஒவ்வொரு கையிலும் நான்கு விரல்கள் இருப்பது போன்றும் காட்சி தரும். மேலும் இந்த ராட்சத ரைடானது அதிநவீன ஹைட்ராலிக்ஸைப் பயன்படுத்தி இயக்கப்படுகிறது. இவ்வாறு இயக்கும் போது ஒவ்வொரு கை மற்றும் விரல்கள் தனித்தனியே நகர்த்தப்படுகிறது. இது ஒவ்வொரு திசையில் திருப்படும். இது தலை சுற்றும் உணர்வைத் தரக்கூடியதாக இருக்கும்.

சூப்பரான கோடைக் கொண்டாட்டத்திற்கு பெங்களூர் வொண்டர்லா தான்..! | Wonderla BangaloreRepresentative Image

இது போன்ற ஏராளமான ரைடுகள் உள்ளன இவை அனைத்துமே, புது விதமான த்ரில்லர் அனுபவத்தைத் தரக்கூடியதாகவே அமையும்.

தவிர்க்க வேண்டியவர்கள்

இந்த த்ரில்லர் பயணத்தைக் கட்டாயம் தவிர்க்க வேண்டியவர்கள் சிலர் உள்ளனர். கர்ப்பிணிப் பெண்கள், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், வலிப்பு நோய் உள்ளவர்கள், இதய நோயாளிகள் போன்றோர் இந்த வேகமான சாகசப் பயணத்தைத் தவிர்க்க வேண்டும்.

சூப்பரான கோடைக் கொண்டாட்டத்திற்கு பெங்களூர் வொண்டர்லா தான்..! | Wonderla BangaloreRepresentative Image

பெங்களூர் வொண்டர்லா நேரம்

அம்யூஸ்மென்ட் பார்க் நேரம் (Amusement Park Timings)

வார நாள்கள்: காலை 11.00 முதல் மாலை 06.00 மணி வரை

விடுமுறை நாள்கள்: காலை 11.00 முதல் மாலை 07.00 மணி வரை

நீர் பூங்கா நேரம் (Water Park Timings)

வார நாள்கள்: மதியம் 12.30 முதல் மாலை 05.30 மணி வரை

விடுமுறை நாள்கள்: காலை 12.00 முதல் மாலை 06.00 மணி வரை

பெங்களூர் வொண்டர்லா டிக்கெட் விலை விவரங்கள்

வார நாள்கள்:

Adult Regular – ரூ.1,016

Child Regular – ரூ. 812

விடுமுறை நாள்கள்:

Adult Regular – ரூ.1185 + 18% ஜிஎஸ்டி

Child Regular – ரூ.948


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்