Tue ,Mar 05, 2024

சென்செக்ஸ் 73,872.29
66.14sensex(0.09%)
நிஃப்டி
(%)
USD
81.57
Exclusive

ஹைதராபாத் வொண்டர்லால இப்படி ஒரு ஸ்பெஷலா.? இது தெரியாம போச்சே.! | Hyderabad Wonderla

Gowthami Subramani Updated:
ஹைதராபாத் வொண்டர்லால இப்படி ஒரு ஸ்பெஷலா.? இது தெரியாம போச்சே.! | Hyderabad WonderlaRepresentative Image.

பொக்கிஷங்களால் ஆன நிலப்பரப்புகளைக் கொண்ட இடத்தையே ஹைதராபாத் எனக் கூறுவர். இந்த இடத்தில் சுற்றிப்பார்க்க பல்வேறு இடங்கள் இருந்தாலும், பெரும்பாலும் அனைவரும் எதிர்பார்ப்பது வொண்டர்லாவாகத் தான் இருக்கும். இது பயனர்களுக்குப் புது வித அனுபவங்களையும், பேரின்பத்தையும் தரும் மறக்க முடியாத இடமாக அமைகிறது. இந்தப் பதிவில் ஹைதராபாத்தில் உள்ள வொண்டர்லாவின் டிக்கெட் விலை, நேரம், ரைட்ஸ் விவரங்கள் மற்றும் பல்வேறு தகவல்களைக் காணலாம்.

த்ரில்லர் ரைடுகள்

குழந்தைகள், பெரியவர்கள் என வயது வித்தியாசமின்றி, அனைவருக்கும் இன்பம் தரும் வகையில், இந்த ஹைதராபாத் வொண்டர்லா ரைடுகள் அமையும். இதில் ஹை த்ரில் ரைடுகள், தரை சவாரி, நீர் சவாரி மற்றும் குழந்தை சவாரி போன்றவை உள்ளது.

ஹைதராபாத் வொண்டர்லால இப்படி ஒரு ஸ்பெஷலா.? இது தெரியாம போச்சே.! | Hyderabad WonderlaRepresentative Image

மேவரிக்

மேவரிக் எனக் கூறப்படும் ரைடு ஆனது 21 இருக்கைகள் கொண்ட படகில் இயங்கக் கூடிய வகையான ரைடு ஆகும். இது ஸ்கணிக்க முடியாத சுழற்சியைக் கொண்டிருக்கும். இருப்பினும், இதன் பாதுகாப்புக் கருவிகள் ரைடு செல்பவர்களின் பாதுகாப்பாக வைத்திருக்கும். இதன் குறைந்தபட்ச உயரம் 140 செமீ அளவில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

ஹைதராபாத் வொண்டர்லால இப்படி ஒரு ஸ்பெஷலா.? இது தெரியாம போச்சே.! | Hyderabad WonderlaRepresentative Image

டெக்னோ ஜம்ப்

இந்த வகை ரைடும், அதிவேக த்ரில்லர் அனுபவத்தைத் தரக்கூடியதாக அமையும். இதில் ஒரு மையத்தைச் சுற்றி 14 Spokes-களைக் கொண்டுள்ளது. இதன் ஒவ்வொரு Spoke-லும் வெளிப்புற முனையில் 3 பேர் அமரக்கூடிய இருக்கை உள்ளது. மேலும், இந்த Spokes ஹைட்ராலிக் முறையில் உயர்த்தப்பட்டு இறக்கப்படுகிறது. இது ரைடர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தைத் தரும். இந்த ரைடின் குறைந்தபட்ச உயரமும் 140 செ.மீ ஆகும்.

ஹைதராபாத் வொண்டர்லால இப்படி ஒரு ஸ்பெஷலா.? இது தெரியாம போச்சே.! | Hyderabad WonderlaRepresentative Image

ட்வின் ஃபிளிப் டி ரெக்ஸ்

ட்வின் ஃபிளிப் டி ரெக்ஸ் ரைடு, 10 மீ உயரத்தை எட்டக் கூடிய 2 ரோபோ கைகளைக் கொண்ட சவாரி ஆகும். இந்த கையின் முடிவில் விசிறியின் கத்தியானது 3 காப்ஸ்யூல்கள் இருக்கின்றன. இதில் ஒவ்வொரு முறை சுழன்று சுழன்று செல்லும் போது, ரோபோ கைகள் மேலும், கீழுமாக நகர்ந்து கொண்டே இருக்கும். இது தலைக்கு கிறுகிறு உணர்வைத் தரக்கூடியதாக அமைகிறது. குறைந்தபட்ச உயரமாக 140 செமீ-ஐக் கொண்டுள்ளது.

ஹைதராபாத் வொண்டர்லால இப்படி ஒரு ஸ்பெஷலா.? இது தெரியாம போச்சே.! | Hyderabad WonderlaRepresentative Image

ஸ்பேஸ் ஜாம்

5.5 மீ உயரத்தில் இருந்து, மேலும் கீழுமாக, திடீரென எதிர்பாராத முடுக்கங்களுடனும், திடீர் வீழ்ச்சிகளுடனும், கடிகார திசை மற்றும் அதன் எதிர் திசையிலும் அழைத்துச் செல்லக் கூடிய சவாரி ஆகும். இந்த உயர் த்ரில் ரைடு ஆனது 18 இருக்கைகளைக் கொண்ட சவாரியாக இருக்கும். இது நம்மை நிலைகுலைய வைக்கும். இந்த ரைடு ஒரு புது வித அனுபவத்தைத் தரக்கூடியதாக அமையும்.

ஹைதராபாத் வொண்டர்லால இப்படி ஒரு ஸ்பெஷலா.? இது தெரியாம போச்சே.! | Hyderabad WonderlaRepresentative Image

செல்லக் கூடாதவர்கள்

இந்த ஹை திரில் ரைடுகளை, கர்ப்பிணிப் பெண்கள், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதய நோயாளிகள், மற்றும் வலிப்பு நோயினால் பாதிக்கப்படுபவர்கள் போன்றோர் இந்த ரைடுகளைத் தவிர்ப்பது நல்லது.

ஹைதராபாத் வொண்டர்லால இப்படி ஒரு ஸ்பெஷலா.? இது தெரியாம போச்சே.! | Hyderabad WonderlaRepresentative Image

ஹைதராபாத் வொண்டர்லா நேரம் மற்றும் முகவரி

அம்யூஸ்மென்ட் பார்க் நேரம் (Amusement Park Timings)

வார நாள்கள்: காலை 11.00 முதல் மாலை 07.00 மணி வரை

விடுமுறை நாள்கள்: காலை 11.00 முதல் மாலை 07.00 மணி வரை

நீர் பூங்கா நேரம் (Water Park Timings)

வார நாள்கள்: மதியம் 12.00 முதல் மாலை 06.00 மணி வரை

விடுமுறை நாள்கள்: காலை 12.00 முதல் மாலை 06.00 மணி வரை

ஹைதராபாத் வொண்டர்லா டிக்கெட் விலை விவரங்கள்

வார நாள்கள்:

Adult Regular – ரூ.1,312.72

Child Regular – ரூ. 1,050.00

விடுமுறை நாள்கள்:

Adult Regular – ரூ.1397.46

Child Regular – ரூ.1117.80

ஹைதராபாத் வொண்டர்லா முகவரி:

ORR எக்ஸிட் எண். 13,

சர்வே எண்.274,

கொங்கரா குர்த் ஏ வில்லேஜ்,

ரவிராலா போஸ்ட்,

மஹேஷ்வரம் மண்டல்,

ஹைதராபாத், தெலுங்கானா,

இந்தியா – 501510


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்