Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

2022 Top 10 Tourist Places | மக்கள் அதிகம் சென்ற டாப் 10 பிரபல சுற்றுலாத் தளங்கள்

Priyanka Hochumin Updated:
2022 Top 10 Tourist Places | மக்கள் அதிகம் சென்ற டாப் 10 பிரபல சுற்றுலாத் தளங்கள்Representative Image.

உலகில் பரப்பளவில் அடிப்படையில் ஏழாவது இடத்திலும், மக்கள்தொகை அடிப்படையில் இரண்டாவது இடத்திலும் இருக்கிறது இந்தியா. அது மட்டும் இல்லாமல் உணவு மற்றும் கலாச்சாரத்தில் நம்மை அடிச்சுக்க ஆளே இல்லை. அப்படி இருக்கையில் 2022 ஆம் ஆண்டில் டாப் 10 சுற்றுலாத் தலங்களுக்கு அதிகம் மக்கள் சென்றுள்ளனர் என்ற பட்டியல் வெளியானது. அதன் அடிப்படையில்,

1. தாஜ் மஹால் - ஆக்ரா

முகலாய பேரரசர் ஷாஜஹான் தன்னுடைய மனைவி மும்தாஜ் அவர்களின் நினைவாக 1632 முதல் 1653  ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது. பெரிய வெள்ளை பளிங்கு கல்லறை, பிரதிபலிக்கும் குளங்கள், மற்றும் விரிவான அலங்கார தோட்டங்கள் ஆகிய அனைத்தையும் உள்ளடங்கிய இந்த கட்டிடக்கலை முகலாய கட்டிடக்கலையின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்றாக திகழ்கிறது.

2. ஹவா மஹால் - ஜெய்ப்பூர்

ஜெய்ப்பூர் நகரில் தன்னுடைய தனித்துவதால் அனைவரின் கவனத்தை ஈர்த்த ஹவா மஹால் "காற்றின் அரண்மனை" என்று செல்லமாக அழைக்கப்படுகிறது. 1799-களில் வடிவமைக்கப்பட்ட இந்த கட்டிடமானது மொத்தம் 953 ஜன்னல்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் ஒரு சிக்கலான வடிவமைப்புடன் வடிவமைக்கப்பட்டது.

3. குதுப் மினார் - மெஹ்ராலி

குதுப் மினார் உலகின் இரண்டாவது உயரமான செங்கல் மினாராகும். வானத்தை நோக்கி 80 மீட்டர் (270 அடி) உயரமுள்ள மினாரட், குரானின் வாசகங்களுடன் செதுக்கப்பட்ட பளிங்கு மற்றும் சிவப்பு மணற்கல் செங்கற்களால் ஆனது. 1193 ஆம் ஆண்டு ஆரம்பித்து நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கட்டிமுடிக்கப்பட்டது.

4. ஜிம் கார்பெட் தேசிய பூங்கா - ராம் நகர்

இந்தியாவின் பழமையான பூங்காவாக திகழும் இது 1936 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 1954 ஆம் ஆண்டு ஜிம் கார்பெட், எழுத்தாளர் மற்றும் வனவிலங்கு பாதுகாவலர் என்பவரை கௌரவிக்கும் விதமாக பெயர் மாற்றப்பட்டது.

5. ஹர்மந்திர் சாஹிப் - அம்ரிஸ்டர்

சீக்கியர்களின் கலாச்சாரத்தை தெரிவிக்கும் விதமாக நிறுவப்பட்ட ஹர்மந்திர் சாஹிப் "கோல்டன் டெம்பிள்'' என்றும் அழைக்கப்படுகிறது. 16 ஆம் நூற்றாண்டில் குரு ராம்தாஸ் ஜி அவர்களால் கோவில் கட்டும் வேலை தொடங்கப்பட்டது.

6. சன் டெம்பிள் - கோனார்க்

இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் சிறந்த சுற்றுலாத் தளமாக திகழ்கிறது இந்த சூரிய கோவில். 13 ஆம் நூற்றாண்டில் சூரிய பகவான் அவர்களுக்காக கட்டப்பட்டது. சூரிய ஒளி இந்த கோவிலில் படும் போது யானை, பாம்பு, ஒட்டகச்சிவிங்கி போன்ற மிருகங்களின் உருவம் சுவரில் தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

7. எல்லோரா குகைகள் - அவுரங்காபாத்

6 ஆம் நூற்றாண்டு முதல் 12 ஆம் நூற்றாண்டு வரை மூன்று கட்டங்களாக பாறை வெட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த 34 மடங்கள் மற்றும் கோவில்கள் இப்பகுதியில் 2 கி.மீ. சிவனின் இருப்பிடமான கைலாச மலையை ராவணன் தூக்கிச் செல்ல முயலும் சிற்பம் குறிப்பாக கவனிக்கத்தக்கது.

8. அஜந்தா குகைகள் - அவுரங்காபாத்

அஜந்தாவில் உள்ள முதல் புத்த குகை நினைவுச்சின்னங்கள் கிமு 2 மற்றும் 1 ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டன. பின்னர் கி.பி 5 மற்றும் 6 ஆம் நூற்றாண்டு வரை குப்தர்களின் ஆட்சி நடைபெற்றது. அந்த காலத்தில் பல்வேறு குகைகள் அசல் குழுவில் சேர்க்கப்பட்டன. பௌத்த மதக் கலையின் தலைசிறந்த படைப்புகளாகக் கருதப்படும் அஜந்தாவின் ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் கணிசமான கலைத் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

9. கஜுராஹோ கோவில்கள் - கஜுராஹோ

கஜுராஹோவில் மேற்கு, கிழக்கு மற்றும் தெற்கு குழு கோயில்கள் என மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்ட கோயில்களின் குழு உள்ளது. 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவில் கவர்ச்சியான சிற்பங்களுக்கு பேர் போனது.

10. ஹுமாயூனின் கல்லறை - டெல்லி

ஹுமாயூனின் கல்லறை கி.பி 1570 இல் கட்டப்பட்டது. இது இந்திய துணைக்கண்டத்தின் முதல் தோட்டம்-கல்லறை என்பதால் இது தனித்துவமானது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்