Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 74,032.40
179.46sensex(0.24%)
நிஃப்டி22,464.50
62.10sensex(0.28%)
USD
81.57
Exclusive

சர்ஃபிங் பண்ணனுமா? அப்ப தமிழ்நாட்டுல இந்த இடத்துக்கெல்லாம் போங்க.. | Best Surfing Destinations in Tamil Nadu

Gowthami Subramani Updated:
சர்ஃபிங் பண்ணனுமா? அப்ப தமிழ்நாட்டுல இந்த இடத்துக்கெல்லாம் போங்க.. | Best Surfing Destinations in Tamil NaduRepresentative Image.

இந்தியாவின் மிக நீளமான கடற்கரையைக் கொண்டுள்ள தமிழ்நாட்டில் பல்வேறு இடங்கள் சுற்றுலா இடங்களாகக் காட்சி தருகின்றன. தமிழகத்தில் உள்ள சுற்றுலா இடங்கள், பாரம்பரியமிக்கதாகவும், கலாச்சாரத்தை எடுத்துக் கூறும் வகையில் அமைகிறது. மேலும், தமிழகத்தில் சிறந்த சர்ஃபிங் இடங்கள் உள்ளன. இவை சுத்தமாகவும், பாதுகாப்பானதாகவும் அமையும். இதனால், கடற்கரைகளின் அலைகளில் சவாரி செய்வதை, அனைவருமே விரும்புவர். அந்த வகையில், தமிழகத்தில் எந்தெந்த இடங்கள் சிறந்த சர்ஃபிங் இடங்களாக உள்ளது என்பது குறித்து இதில் காண்போம்.

சர்ஃபிங் பண்ணனுமா? அப்ப தமிழ்நாட்டுல இந்த இடத்துக்கெல்லாம் போங்க.. | Best Surfing Destinations in Tamil NaduRepresentative Image

கோவ்லாங்

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் இருந்து, கிழக்கு கடற்கரைச் சாலையில் 45 நிமிட பயணத்தில் இருப்பது, கோவலங் ஆகும். இது இந்தியாவின் முதல் சர்ஃபிங் கிராமம் என்றும் கூறலாம். இந்த அற்புத மீன்பிடி கிராமமானது அனைவருக்கும் பிடித்த இடமாகவும், சர்ஃபிங் செய்வதற்கு ஏற்ற இடமாகவும் அமைகிறது. மேலும், கடற்கரையில் உள்ள நீருக்கு அடியில் பாறைகள் அழகான கவர்ச்சிகரமான இடங்களாக உள்ளது. இது, சர்ஃபிங் செய்வதற்கு ஏற்ற இடமாகவும் உள்ளது.

சர்ஃபிங் பண்ணனுமா? அப்ப தமிழ்நாட்டுல இந்த இடத்துக்கெல்லாம் போங்க.. | Best Surfing Destinations in Tamil NaduRepresentative Image

மகாபலிபுரம்

கலைநயமிக்கதாகவும், நம் பாரம்பரியத்தை எடுத்துக் கூறும் வகையிலும் அமையும் இடம் மகாபலிபுரம் ஆகும். தமிழகத்தில், கோரமண்டல் கடற்கரையில் மகாபலிபுரம் உள்ளது. பண்டைய துறைமுக நகரமான பல்லவ வம்சத்தின் பின்னணியை எடுத்துக் கூறும் வகையில், மகாபலிபுரம் அமைகிறது. இந்த இடத்தில் செய்யப்படும் சர்ஃபிங் ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்கக் கூடியதாக அமைகிறது. இந்த இடத்தில் பல்வேறு சர்ஃபங் பள்ளிகள் அனைவருக்கும் சர்ஃபிங்-ஐ சிறந்த முறையில் கற்றுத் தருவதற்கு ஏதுவாக அமைந்துள்ளது.

சர்ஃபிங் பண்ணனுமா? அப்ப தமிழ்நாட்டுல இந்த இடத்துக்கெல்லாம் போங்க.. | Best Surfing Destinations in Tamil NaduRepresentative Image

ராமேஸ்வரம்

வரலாற்று சிறப்பு மிக்க ராமேஸ்வரம் கடலானது, அனைவருக்கும் பிரமிப்பை ஏற்படுத்தும் வகையில் அமையும். ஆன்மீக ரீதியாக ஒரு புறம் இருந்தாலும், இதன் கலாச்சார, கட்டிடக்கலை மற்றும் பாரம்பரிய மிக்க அதிசயங்கள் இன்றளவும் வியப்பூட்டும் வகையிலேயே அமையும். இது சாகச வீரர்களுக்கு சிறந்த இடமாகவும் உள்ளது. இந்தியப் பெருங்கடலின் தெளிவான நீல நிறத்திற்கு அருகில் அமைந்திருக்கும் ராமேஸ்வரம் ஆனது, காற்றில் உலாவுதல், ஸ்டாண்ட் அப் போர்டிங் போன்ற வசதிகளை வழங்குகிறது. இந்தப் பகுதியில் செய்யப்படும் சர்ஃபிங் அனைவருக்கும் மிகச்சிறந்த அனுபவத்தைத் தரக்கூடியதாக அமையும்.

தமிழ்நாட்டில் உள்ள சிறந்த சர்ஃபிங் செய்யும் இடங்களைப் பற்றி தெரிந்து கொண்டீர்களா.? இந்த இடங்களில் சர்ஃபிங் செய்து உங்களுடைய மறக்க முடியாத அனுபவத்தை சேகரித்து கொள்ளுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்