Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஹாப்பி நியூஸ்.. கொளுத்தும் வெயிலை குளிர்விக்க சென்னைக்கு வருகிறது வொண்டர்லா.. | Chennai Wonderla

Nandhinipriya Ganeshan Updated:
ஹாப்பி நியூஸ்.. கொளுத்தும் வெயிலை குளிர்விக்க சென்னைக்கு வருகிறது வொண்டர்லா.. | Chennai WonderlaRepresentative Image.

பெங்களூரை தலைமையிடமாக கொண்ட வொண்டர்லா ஹாலிடேஸ் [Wonderla Holidays] என்ற பொழுதுபோக்கு பூங்கா மற்றும் ரிசார்ட் நிறுவனம் இந்தியாவில் பிரபலமான ஒன்றாக செயல்பட்டு வருகிறது. அந்தவகையில், இதுவரை கொச்சி, பெங்களூரு, மற்றும் ஹைதராபாத் ஆகிய மூன்று இடங்களில் செயல்பட்டு வருகிறது. பெரிய அளவில் வளர்ச்சியை கண்டு வரும் இந்நிறுவனம் தொடர்ந்து நாட்டின் பெரும் நகரங்களில் புதிய பொழுதுபோக்கு பூங்காக்களை அமைக்க திட்டமிட்டு வருகிறது. அதன்படி, சென்னை மற்றும் ஒடிசாவில் புதிய பொழுதுபோக்கு பூங்காவை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டது. 

அந்தவகையில், கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பரில் அதிமுக ஆட்சியில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் முதல் பதிப்பில் சென்னை திட்டத்தில் ரூ.500 கோடி முதலீடு செய்ய தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதற்காக, 2018 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள பழைய மகாபலிபுரம் சாலையில் 60 ஏக்கர் அளவிலான நிலபரப்பு கையகப்படுத்தப்பட்டது. 

ஆனால், தமிழக அரசு விதிக்கும் உள்ளாட்சி வரி (எல்பிடி) தொடர்பான பிரச்னைகளால், இத்திட்டத்தை மேற்கொண்டு செயல்பட முடியாமல் போனது. தற்போது, ​​மாநில அரசு 18 சதவீத ஜிஎஸ்டிக்கு மேல் 10 சதவீத எல்பிடியை விதித்து வருகிறது. இது பல பொழுதுபோக்கு பூங்கா நிறுவனங்கள் சந்தையில் நுழைவதைத் தடுக்கும் விதமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், ஏழு ஆண்டு கால தாமதத்திற்குப் பிறகு, வொண்டர்லா ஹாலிடேஸ் சென்னையில் அதன் புதிய பொழுதுபோக்கு பூங்காவின் பணிகளைத் தொடங்க உள்ளது. இது குறித்து வொண்டர்லா ஹாலிடேஸ் நிறுவனத்தில் MD அருண் கே சிட்டிலப்பிள்ளி கூறியதாவது, ' நாங்கள் உள்ளாட்சி அமைப்பு வரியில் 10 ஆண்டுகள் தள்ளுபடி கேட்டிருந்தோம், அரசும் எங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டது. அதனால், மீண்டும் பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளோம்'.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் புதிய பொழுதுபோக்கு பூங்காவின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துவிடும், அதன்பிறகு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று கூறனார். மேலும், வொண்டர்லா நிறுவனம் சென்னையில் நிலத்திற்கு கிட்டத்தட்ட ரூ.100 கோடி செலவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், சென்னைக்கு முன்பாக பூங்காவை ஒடிசாவில் அமைக்கப்பதற்கான கட்டுமான பணிகளை மார்ச் மாதத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இது அடுத்த இரண்டு ஆண்டுகளில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை வொண்டர்லா திறக்கப்படும் நேரம், டிக்கெட் விலை, செல்லும் வழி போன்றவை விரைவில் அப்பேட் செய்யப்படும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்