Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்கள்..!| Jallikattu Places in Tamilnadu

Gowthami Subramani Updated:
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்கள்..!| Jallikattu Places in TamilnaduRepresentative Image.

தமிழக வீரர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு புகழ்பெற்ற விளையாட்டாகும். வட, தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு விளையாட்டு விளையாடப்படுகிறது. இருப்பினும், தென்மாவட்டங்களிலேயே ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கான பங்கேற்பும், ஆவலும் அதிகமாக இருக்கும். பொங்கல் பண்டிகையில் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு ஆண்டுதோறும் மக்களின் வருகைக்கேற்ப தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு விளையாட்டு விளையாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் இடங்களைப் பற்றி இதில் காணலாம்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்கள்..!| Jallikattu Places in TamilnaduRepresentative Image

அலங்காநல்லூர், மதுரை

தென் மாவட்டங்களில் எத்தனையோ இடங்களில் ஜல்லிக்கட்டு விளையாடப்பட்டு வந்தாலும், மதுரை மாநகரமே ஜல்லிக்கட்டுக்கு உரிய மாவட்டமாகக் கருதப்படுகிறது. அதன் படி, மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காண மக்கள் ஆவலோடு வருவர். இதில் வெளி மாவட்டங்களிலிருந்தும் மக்கள் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு காண்பர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் இடங்களைப் பற்றி இதில் காணலாம்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்கள்..!| Jallikattu Places in TamilnaduRepresentative Image

அவனியாபுரம், மதுரை

தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்குப் பிறகு சிறப்பு வாய்ந்தது இந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழா ஆகும். தமிழர்களின், பண்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக அமையும் ஜல்லிக்கட்டு, அனைவருக்கும் உற்சாகத்தையும், புத்துணர்ச்சியையும் தரும்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்கள்..!| Jallikattu Places in TamilnaduRepresentative Image

திருப்பவூர், புதுக்கோட்டை

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்குப் பெயர் போன இடங்களில், புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள திருவப்பூரும் ஒன்று. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து வீடுகளிலும் காளைகளை ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயார் படுத்தி விடுவர்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்கள்..!| Jallikattu Places in TamilnaduRepresentative Image

தம்மம்பட்டி, சேலம்

சேலம் மாவட்டத்திற்கு அருகில் உள்ள தம்மப்பட்டியிலும், ஜல்லிக்கட்டு போட்டி ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறும். பொங்கல் பண்டிகைக்கு சிறப்பாக நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு விழாவைக் காண சேலம் மட்டுமல்லாமல், சுற்று வட்டாரப் பகுதி முழுவதும் ஓடோடி வருவர்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்கள்..!| Jallikattu Places in TamilnaduRepresentative Image

பாலமேடு, மதுரை

அடுத்ததாக, மதுரையில் உள்ள பாலமேடு பகுதியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விளையாட்டைப் பற்றித் தான் காணப்போகிறோம். மதுரையில் ஆங்காங்கே நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் இந்த பாலமேட்டில் நடக்கும் ஜல்லிக்கட்டும் ஒன்று. இதுவும் மதுரை மக்களிடத்தில் பிரபலமான ஒன்றாகத் திகழ்கிறது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்கள்..!| Jallikattu Places in TamilnaduRepresentative Image

சிராவயல், காரைக்குடி

காரைக்குடியில், மற்றொரு ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் பகுதியாக சிராவயல் உள்ளது. இதில் நடக்கும் மஞ்சுவிரட்டு திருவிழாவில், ஏராளமான காளைகள் சீறிப்பாய்ந்து வீரர்களின் வீரத்தை எடுத்துக் கூறும் வகையில் அமைகிறது. இந்த ஜல்லிக்கட்டு பண்டிகையைக் காண, மக்கள் ஏராளமானோர் படையெடுத்து வருவர்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்கள்..!| Jallikattu Places in TamilnaduRepresentative Image

கண்டுப்பட்டி, சிவகங்கை

சிவகங்கையில் நடைபெறும் மஞ்சுவிரட்டு, மக்கள் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் ஜல்லிக்கட்டு போட்டி ஆகும். பொங்கல் பண்டிகையை ஒட்டி, காளையை ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயாராகும் விதமாக காளைகளைத் தயார் செய்வர். இதனைக் காண ஏராளமான மக்கள் படையெடுத்து வருவர்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்கள்..!| Jallikattu Places in TamilnaduRepresentative Image

வேந்தம்பட்டி, பொன்னமராவதி அருகில், புதுக்கோட்டை

புதுக்கோட்டையில், வேந்தம்பட்டி பகுதியில் நடக்கும் ஜல்லிக்கட்டு சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். பொங்கல் திருவிழாவை ஒட்டி, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில், புதுக்கோட்டையில் நடப்பதைக் காண மக்கள் ஆவலுடன் இருப்பர். இது வீரர்களை உற்சாகப்படுத்துவதுடன், தமிழர்களின் பாரம்பரியத்தை எடுத்துக் கூறும் வகையிலும் அமைகிறது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்கள்..!| Jallikattu Places in TamilnaduRepresentative Image

பல்லவராயன்பட்டி, கம்பம்

தேனியில் உள்ள மக்கள் பொங்கல் பண்டிகையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியைக் காண ஆவலுடன் செல்லும் பகுதியாக பல்லவராயன்பட்டி உள்ளது. தேனி பகுதி மட்டுமல்லாமல், தேனியைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மக்கள் ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண ஆர்வத்துடன் இருப்பர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்