Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பொள்ளாச்சிக்கு போனா இந்த இடங்களை பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.. | Pollachi Tourist Places in Tamil

Editorial Desk Updated:
பொள்ளாச்சிக்கு போனா இந்த இடங்களை பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.. | Pollachi Tourist Places in TamilRepresentative Image.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இயற்கை எழில் கொஞ்சும் அழகிய நகரம் தான் பொள்ளாச்சி. கலாச்சாரம், பாரம்பரியம், மற்றும் விவசாயத்திற்கும் பெயர் பெற்ற நகரமான இந்த பொள்ளாச்சி மேற்கு தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள அழகிய நிலப்பரப்புகளும் அமைதியான சூழ்நிலைகளும் நம்மை வியப்படைய செய்கிறது. தென்னை மற்றும் வாழை சாகுபடிக்கு பெயர்ப்போன பொள்ளாச்சியில் சிறு, குறு தொழிற்சாலைகளும் உள்ளன. வீக்எண்ட் டிரிப் செல்ல நினைப்பவர்களுக்கு பொள்ளாச்சி ஒரு பெஸ்ட் சாய்ஸ் என்றே சொல்லலாம். சரி வாங்க, பொள்ளாச்சியில் அப்படி என்ன இருக்கிறது என்று பார்க்கலாம்.

வால்பாறை:

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் இடம் தான் வால்பாறை. ஆரம்பத்தில் பூணாச்சி மலை என்று அழைக்கப்பட்ட இந்த மலையில் அமைந்துள்ள தொடர்ச்சியான மலைகள் கண்களை கவரும் வண்ணம் அமைந்துள்ளன. இந்த மலைப்பகுதியில் தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடுகளை காண முடியும். தேயிலை தோட்டங்களையும் கொண்டுள்ளது. வால்பாறையின் அழகை வர்ணிக்கும் வகையில் ஆங்காங்கே நீருற்றுகள், அருவிகள் நாம் காணலாம்.ச்

ஆனமலை புலிகள் சரணாலயம்:

பொள்ளாச்சி வால்பாறை தாலுக்காவில் அமைந்துள்ள ஒரு மலை பகுதியே ஆனமலை. பல்வேறு தாவரங்களுக்கும், விலங்களுக்கும் இருப்பிடமாக உள்ள சரணாலயத்தில் யானை, சிறுத்தை, நீலகிரி தஹ்ர், சிங்கவால் மக்காக், கவுர், நீலகிரி லங்கூர், சோம்பல் கரடி, மலபார் ஸ்பைனி, சாம்பார் மான் முதலிய விலங்குகளும்; வாத்து, காடை, கிளுவை, இருவாயக்குருவி, பாறு கழுகு, மீன்கொத்தி முதலிய பறவைகளும் உள்ளன. இதனை இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம் என்றும் தேசிய பூங்கா என்றும் அழைப்பதுண்டு. இது மட்டுமின்றி 2000க்கும் மேற்ப்பட்ட மரங்களையும் தன்னிடம் கொண்டுள்ளது இந்த ஆனமலை. 
 
ஆழியார் அணை:

'ஆழி' என்றால் 'கடல்' என்று பொருள். கடல் போன்று காட்சி அழிப்பதால் இதற்கு ஆழியார் என்றும் பெயர். இந்த அணையானது மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள முக்கியமான ஒரு சுற்றுலா தளம் ஆகும். இந்த அணையானது ஆண்டு முழுவதும் நீர் வற்றாமல் பாயும் என்பதால், ஆழியார் நதிக்கு நீர் தேக்கம் செய்து அதனை சுற்றியுள்ள இடங்களுக்கும், விவசாயத்திற்கு தேவைப்படும் நீரையும் தருகின்றது. அதுமட்டுமின்றி, இங்கிருந்து நீர் மூலம் மின்சாரமும் எடுக்கப்படுகிறது. இந்த அணையை சுற்றி பசுமையான காடுகளும் இருக்கின்றது, எனவே இயற்கையை ரசித்து கொண்டு மேற்கு தொடர்ச்சி மலைகளில் நடக்கலாம். இங்கு குழந்தைகளுக்கு பூங்காவும் உள்ளது.

சிறுவாணி அணை:

சிறுவாணி அணையானது மேற்கு தொடர்ச்சி மலைகளான சிறுவாணி மலையின் மேற்குச் சரிவில் உருவாகி வடக்கு நோக்கி பாய்ந்து பவானி ஆற்றில் கலக்கிறது. இது இதன் தூய்மையான நீரும், அழகான சூழ்நிலையும் தன்னுள் கொண்டுள்ளது. இங்கு நாம் படகு சவாரி செய்து சிறுவாணி ஆற்றின் அழகை, மலையின் அழகையும் ரசிக்கலாம். கோயம்புத்தூரில் இருந்து 36 கி.மீ தொலைவில் மேற்கு திசையில் அமைந்துள்ள இந்த அணையை கேரள அரசுடன் தமிழ்நாடு அரசு இணைந்து கட்டியுள்ளது. சிறுவாணி ஆற்றின் நீரை தான் கோயம்புத்தூர் பகுதியில் மக்கள் பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலத்தின் கலைகளை இந்த அணையின் சாலைகளில் நாம் காணமுடியும். அதேபோல், பழங்குடி மக்களான இருளர் மற்றும் முதுவர்களையும் காணலாம். 

குரங்கு அருவி:

குரங்கு அருவி ஆனமலை மலைத்தொடரில் பொள்ளாச்சி–வால்பாறை சாலையில் அமைந்துள்ளது. வால்பாறை மலையடிவாரத்தில் அமைந்துள்ள இயற்கை நீர்வீழ்ச்சியான இந்த அருவி ஆழியார் அணையிலிருந்து 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த நீர்விழ்ச்சியின் அழகை நாம் கண்டு மகிழலாம்.

சின்னார் வனவிலங்குக் காப்பகம்:

இது மறையூருக்கு வடக்கே 12 கி.மீ. தொலைவில் சின்னாறு பகுதியில் அமைந்துள்ளது. கேரள மாநிலத்தில் அமைந்துள்ள 12 கானுயிர்க் காப்பகங்களில் ஒன்றாகவும் உள்ளது. இந்த காப்பகத்தின் வழியாக உடுமலைப்பேட்டை- மூணார் மாநில நெடுஞ்சாலை செல்கிறது. இங்கு 34 வகையில் பாலூட்டிகளும், 245 வகையான பறவைகளும், 52 வகையான ஊர்வனங்களும் வாழ்கின்றது. மேலும், 965 வகையான பூக்களும் உள்ளன.

சோலையார் அணை :

ஆனமலையில் உள்ள மலை வாழிடமான வால்பாறையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளத இந்த சோலையார் அணை. இதுவே இந்தியாவின் 2வது ஆழமான அணையாகும். இந்த சோலையார் அணை பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் முக்கிய நீர்த்தேக்கமாக விளங்குகிறது. இதன் நீர் சேமிப்பு திறன் 160 அடி (49மீ) ஆகும். இந்த அணையை பார்க்க சிறப்பு அனுமதி தேவை.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்