Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குட்டி யானையின் போராட்டம்.. தாயுடன் சேர்த்து வைத்த வனத்துறையினர்!!

Sekar September 01, 2022 & 15:14 [IST]
குட்டி யானையின் போராட்டம்.. தாயுடன் சேர்த்து வைத்த வனத்துறையினர்!!Representative Image.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் தாயை பிரிந்து ஆற்றில் அடித்து வரப்பட்ட குட்டி யானையை மீட்ட வனத்துறையினர் பத்திரமாக தாயுடன் சேர்த்தனர்.

முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மாவனல்லா ஆற்றில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சிக்கிய குட்டி யானை ஒன்று வெள்ளத்தில் அடித்து செல்லப்படுவதை பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து வனத்துறையினர் வேட்டை தடுப்பு காவலர்களுடன் ஆற்றில் அடித்து வரப்பட்ட குட்டி யானையை பத்திரமாக மீட்டனர். பின்னர் குட்டி யானையை தாயுடன் சேர்க்கும் பணியில் வனத்துறையினர் கடந்த மூன்று நாட்களாக முயற்சித்து வந்தனர். 

இந்நிலையில் நேற்று இரவு அதன் தாய் யானையை கண்டுபிடித்த நிலையில், தாயுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

தாய் யானை அதனுடன் மற்ற பெண் யானை இரண்டும் சேர்ந்து குட்டியை அரவணைத்து அழைத்துச் செல்வது ட்ரோன் கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்