Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

எல்லாமே ரத்து...அடுத்தடுத்து அதிரடி காட்டும் சீனா...!

Bala August 05, 2022 & 16:13 [IST]
எல்லாமே ரத்து...அடுத்தடுத்து அதிரடி காட்டும் சீனா...!Representative Image.


அமெரிக்கா சபாநாயகர் தைவான் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அமெரிக்கா உடனான பல்வேறு ஒப்பந்தங்களை சீனா ரத்து செய்து அறிவித்துள்ளது. 
 
சீனாவின் ஒரு மாகணம் தான் தைவான் என சீனா கூறி வருகிறது. இருந்த போதிலும் தைவான் ஒரு சுதந்திர நாடு என்றும், தைவான் மீது யாரும் உரிமை கோர முடியாது என தைவான் ஆட்சியாளர்களால் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்கா செனட் சபையின் சபாநாயகர் 4 நாள் ஆசிய பயணத்தின் போது தைவான் சென்றிருந்தார். அவர் தைவான் சென்ற நிலையில், தென்சீனக்கடலில் உச்சக்கட்ட பதற்றம் நீடித்தது.

ஒரு பக்கம் சீனா படைகள் முன்னேறி வந்த நிலையில், மறுபக்கம் அமெரிக்கா போர் கப்பல்கள் மற்றும் விமானங்கள் தைவானை நோக்கி நகர்த்தப்பட்டன. இருந்தபோதிலும் பாதுகாப்பாக  பெலோசி தைவானில் தரையிறங்கினார். இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற சீனா தைவானை சுற்றி வளைத்து பிரம்மாண்ட போர் பயிற்சி நடத்தி வருகிறது. இந்த போர் பயிற்சியின் போது சீனா ஏவிய ஏவுகணைகள் ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்குள் விழுந்ததையடுத்து ஜப்பான் அரசு கடும் கண்டனத்தை பதிவு செய்தது.

இந்நிலையில் அமெரிக்காவுக்கு பாடம் புகட்டும் வகையில் அமெரிக்காவுடனான பல்வேறு ஒப்பந்தங்களை சீனா ரத்து செய்துள்ளது. அதாவது, அமெரிக்கா - சீனா ராணுவ அதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையை ரத்து செய்தல் மற்றும் இருதரப்பு காலநிலை மாற்ற பேச்சுவார்த்தையையும் நிறுத்தியுள்ளது. மேலும், சீனா மற்றும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகங்கள் மற்றும் சீனா-அமெரிக்க கடல்சார் இராணுவ பாதுகாப்பு ஆலோசனைகளுக்கு இடையிலான சந்திப்புகளுக்கான ஏற்பாடுகளை ரத்து செய்தல், சட்டவிரோதமாக குடியேறியவர்களை திருப்பி அனுப்புவதில் சீனா-அமெரிக்கா  இடையேயான ஒத்துழைப்பையும் நிறுத்தியுள்ளது.

சர்வதேச அரசியலை உற்று நோக்குபவர்களிடம் சீனா அதிபர் பற்றி ஒரு பரவலான எண்ணம் உள்ளது. அதாவது சீனா அதிபர் தெளிவான மனநிலையை உடையவர், அவர் சீனாவின் பொருளாதாரத்திற்கு எந்த பாதிப்பும் வந்து விடக்கூடாது என்பதில் கண்ணாக இருப்பதாகவும், அவர் ரஷ்ய அதிபர் புதின் போல் அல்ல என கூறி வருகின்றனர்.  
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்