Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,603.00
-249.94sensex(-0.34%)
நிஃப்டி22,325.80
-76.60sensex(-0.34%)
USD
81.57
Exclusive

மாட்டுக்கறி சாப்பிடலாமா கூடாதா? அறிவியல் சொல்வதென்ன?

UDHAYA KUMAR Updated:
மாட்டுக்கறி சாப்பிடலாமா கூடாதா? அறிவியல் சொல்வதென்ன?Representative Image.

மாட்டுக்கறி சாப்பிடலாமா கூடாதா? மாட்டுக்கறி சாப்பிடுவதால் ஏதேனும் பிரச்னை வருமா?  தன்னை விட பெரிய விலங்குகளைச் சாப்பிடுவது கூடாது என்கிறார்களே அதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது?  மாட்டுக்கறி சாப்பிடுவதில் இருக்கும் நன்மை தீமைகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் காண்போம். 

சமூக வலைத்தளங்களில் டாக்டர் ஒருவர் பேசும் வீடியோ வைரலாகி வருகின்றது. அதில் தன்னை டாக்டர் எனச் சொல்லிக்கொள்ளும் அந்த இளம்பெண் கூறுவது, மத ரீதியான நம்பிக்கை ஒருபுறம் இருந்தாலும், மருத்துவ ரீதியாகவே தன்னை விட பெரிய விலங்குகளைச் சாப்பிடுவது கூடாது என்கிறார். இது பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. 

மாட்டுக்கறியில் புரோட்டின்

மாட்டுக் கறியில் புரோட்டின் மற்றும் தாது பொருட்கள் அதிக அளவில் இருக்கின்றன. இதனால் பல காய்கறிகளை வாங்கி சாப்பிட்டால் கிடைக்கும் சத்துக்கள் மாட்டுக் கறியில் எளிதாக கிடைக்கின்றன. அதே நேரம் மாட்டுக்கறியை அளவுக்கு அதிகமாக வாரம் ஒருமுறை என தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பல பிரச்னைகள் வர வாய்ப்பிருக்கிறது. 

மாட்டுக்கறி தீமைகள்

கோழி, ஆடு போல அல்லாமல் மாட்டுக் கறி பல பிரச்னைக்களுக்கு காரணாக இருக்கிறது. கோழி, ஆடு போன்றவற்றை வாரம் வாரம் சாப்பிட்டால் பெரிய பிரச்னைகள் எதுவும் வரப்போவதில்லை. ஆனால் மாட்டுக்கறியில் கீழ்க்கண்ட பிரச்னைகள் இருக்கின்றன

  • தமனிகளில் தடிப்பு ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றனவாம்
  • நாளடைவில் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புண்டு
  • அதிகளவு மாட்டுக்கறி சாப்பிடுவதால் இதய நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்குமாம்
  • குடல் புற்றுநோய் ஏற்பட மிகப் பெரிய வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்
  • மாட்டுக்கறியிலுள்ள கார்சினோஜென் புற்றுநோயை வரவழைக்க அதிக வாய்ப்புகள்
  • உண்டு
  • கொழுப்பு அதிகம் இருப்பதால், உடல் எடை, பருமன் அதிகரித்து அது தொடர்பான நோய்களுக்கு வாய்ப்பிருக்கிறது

இவை அனைத்துமே அதிகப்படியான அளவில் சாப்பிட்டால் மட்டுமே. நீங்கள் எப்போதாவது மாட்டுக்கறி உட்கொள்கிறீர்கள் என்றாலோ, வாரம் ஒருமுறை 100கிராம் 200கிராம் அளவுக்கு எடுத்துக்கொள்கிறீர்கள் என்றாலோ அது ஆரோக்யமான உடலுக்கு உதவியாகத் தான் இருக்கும் என்கிறார்கள். கூடவே உடல் எடையையும் பேணிப் பாதுகாக்க வேண்டும். உடல்பயிற்சியும் செய்ய வேண்டும் என்கிறார்கள் வல்லுநர்கள். 

தினமும் சிறிதளவு மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் (நல்ல உடல் எடையுடன் உடல் பயிற்சிகளை மேற்கொண்டு வருபவர்களுக்கு ) உடலில் எல்.டி.எல் எனும் கெட்ட கொழுப்புகள் கட்டுப்படுகின்றனவாம்.  இதனால் உயர் ரத்த அழுத்த நோயிலிருந்து ஒருவர் தன்னை பாதுகாத்துக் கொள்ளலாம். 

முடிவு: மாட்டுக்கறி என்றில்லை, ஆடு, கோழி, மற்றும் பல இறைச்சிகள் எதுவாக இருந்தாலும் அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு என்பதுதான்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்