Thu ,May 16, 2024

சென்செக்ஸ் 72,862.02
-125.01sensex(-0.17%)
நிஃப்டி22,138.45
-62.10sensex(-0.28%)
USD
81.57
Exclusive

நள்ளிரவில் வரும் கணவரின் ஆவி.. வீடியோவை பகிர்ந்து உருகிய மனைவி.. உண்மை என்ன?

Sekar Updated:
நள்ளிரவில் வரும் கணவரின் ஆவி.. வீடியோவை பகிர்ந்து உருகிய மனைவி.. உண்மை என்ன?Representative Image.

டிக்டாக்கில் ஒரு பெண், நள்ளிரவில் தனது கைக்குழந்தையைப் பார்க்க இறந்த கணவர் வருவதாகக் கூறி, அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டு வைரலாகி வருகிறார்.

விட்னி ஆலன் எனும் அந்த பெண் தனது கணவர் இறந்த நிலையில், தனது இரண்டு குழந்தைகளை ஒரு தாயாக வளர்த்து வருவது குறித்து டிக்டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஆலனின் கணவர் ரியான், தேனீ கொட்டியதால் கடுமையான ஒவ்வாமை எதிர்விளைவு ஏற்பட்டு இறந்தார்.

அப்போதிருந்து, அவர் டிக்டாக்கில் இதை செய்து வருவதோடு, 25,000க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொண்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த வாரம், ஆலன் தனது இளைய மகன் தனது தொட்டிலில் தூங்கும் போது, ஒரு குழந்தை மானிட்டர் வழியாக ஒரு பிரகாசமான உருண்டையின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

"எங்கள் இரண்டாவது மகன் லியோவுக்கு 3 மாத வயது இருக்கும் போது, என் கணவர் ஏப்ரல் 7, 2022 அன்று காலமானார்" என்று அதில் தெரிவித்துள்ள ஆலன், மேலும், "இன்றிரவு என் கணவர் எங்கள் குழந்தையை அமைதிப்படுத்துவதைப் பார்த்தது போல் உணர்ந்தேன்." என்று கூறியுள்ளார்.

ஒளிரும் உருண்டை அவரது மகனின் தலைக்கு மேல் நகர்வதை போலவும், யாரோ குழந்தையை தடவுவது போலவும் வீடியோவில் பதிவாகியுள்ளது. இதை பார்த்த பலரும் ஆலனைப் போலவே உணர்வதாகக் கூறி, அவரது மறைந்த கணவர் தனது மகனுடன் இருப்பதாக பதிவிட்டு வருகின்றனர்.

புகைப்படம் எடுத்தல் மற்றும் வீடியோகிராஃபியில் சில நேரங்களில் ஒளிரும் உருண்டைகள் என்பது கேமரா ஃபிளாஷ் மூலம் தூசி, நீர் துளிகள் அல்லது பிற துகள்களை காட்டும் என அறிவியல்பூர்வமாக கூறப்பட்டாலும், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் உள்ள உருண்டைகள் இறந்த நபரின் ஆவி அல்லது ஆவியின் அடையாளம் என்று பலர் நம்புகிறார்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்