Thu ,May 16, 2024

சென்செக்ஸ் 72,862.02
-125.01sensex(-0.17%)
நிஃப்டி22,138.45
-62.10sensex(-0.28%)
USD
81.57
Exclusive

ஒரு ’T’ போட்டது குத்தமா - கடைக்கு நாமம் போட்ட தேவஸ்தானம்!

Abhinesh A.R Updated:
ஒரு ’T’ போட்டது குத்தமா - கடைக்கு நாமம் போட்ட தேவஸ்தானம்!Representative Image.

திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் இயங்கும் ஏழுமலையான் கோயில் வளாகத்தில் வேற்றுமத பிரச்சாரம், வேற்று மத வழிபாடு, வேற்றுமத குறியீடுகளுடன் கூடிய பொருள்களை விற்பனை செய்வது, பயன்படுத்துவது ஆகியவற்றுக்கு தீவிர தடை அமலில் உள்ளது.

இந்த நிலையில் திருப்பதி மலையில் உள்ள டீக்கடை ஒன்றில் சிலுவை குறியுடன் கூடிய டீ கப்புகள் பயன்படுத்தப்படுவதாக பக்தர்கள் புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் அங்கு சென்ற தேவஸ்தான அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.

தொடர்ந்து, இந்த டீ கப்புகள் உங்களுக்கு எப்படி கிடைத்தது என்று விசாரணை நடத்தினர். அப்போது திருப்பதி மலையில் உள்ள மொத்த விற்பனை கடை ஒன்றில் வாங்கியதாக டீ கடை உரிமையாளர் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் மொத்த விற்பனை கடைக்குச் சென்று தேவஸ்தான சுகாதாரத் துறையினர், அலுவலர்கள் ஆகியோர் சோதனை செய்தனர். அப்போது அந்த கடையில் சிலுவை குறியீடுடன் கூடிய டீ கப்புகள் இருப்பதாக அவர்கள் உறுதி செய்துள்ளனர்.

தொடர்ந்து கடையை மூட உத்தரவு பிறப்பித்த அலுவலர்கள், தேவஸ்தான அலுவலகத்திற்கு வந்து விளக்கம் அளிக்க அந்த கடை உரிமையாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஆனால், கடை உரிமையாளர்கள் அது மத குறியீடு இல்லை, வெறும் “டி” (t) எனும் எழுத்தின் வேறு வடிவம் என விளக்கம் அளித்தும், கோயில் அலுவலர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்