Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
114.49sensex(0.16%)
நிஃப்டி22,402.40
34.40sensex(0.15%)
USD
81.57
Exclusive

அமைச்சரான அப்பாவிற்கு உதயநிதி மகள் கொடுத்த பரிசு; வைரல் வீடியோ! 

KANIMOZHI Updated:
அமைச்சரான அப்பாவிற்கு உதயநிதி மகள் கொடுத்த பரிசு; வைரல் வீடியோ! Representative Image.

அமைச்சர் பதவியேற்ற பிறகு குடும்பத்தினரிடம் ஆசி பெற்ற உதயநிதி ஸ்டாலினை கட்டியணைத்து அவரது மகள் முத்தமிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தமிழ்நாடு அரசின் அமைச்சரவை விரிவாக்கத்தை தொடர்ந்து சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை 9.30 மணிக்கு அமைச்சராக பதவியேற்றார். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை தர்பார் ஹாலில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி உதயநிதி ஸ்டாலினுக்கு பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலினின் தாய் துர்கா ஸ்டாலின், மனைவி கிருத்திகா உதயநிதி, மகள் தன்மயா, அத்தை கனிமொழி, தங்கை செந்தாமரை, அவருடைய கணவன் சபரீசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் அவரது குடும்பத்தினருக்கு முன்வரிசையில் இருக்கை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல்வராக கணவரும், அமைச்சராக மகனும் ஒரே மேடையில் இருப்பதை ஒட்டுமொத்த குடும்பம் மெய்சிலிர்ந்த படி கண்டு ரசித்துக்கொண்டிருந்தது. 

உதயநிதி ஸ்டாலின் எனும் நான்... என்ற வாசகத்தை அவர் கூறியதும் அரங்கே அதிரும் அளவிற்கு கைத்தட்டல் சத்தம் கேட்டது. முதன் முறையாக அமைச்சராக பதவியேற்பதால் உதயநிதி முகத்திலும், உடல் மொழியிலும் மெல்லிய பதற்றம் தொற்றிக்கொண்டிருந்தது. “எப்படா பதவிப்பிரமாணம் முடியும் மேடையை விட்டு இறங்கிடலாம்” என்பது போல் நின்றிருந்தார்.

பதவிப்பிரமாணம் முடிந்ததும் அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் மேடையில் இருந்து இறங்கி வந்து தனது குடும்பத்தினரைச் சந்தித்தார். அம்மா துர்கா, மனைவி கிருத்திகா, அத்தை கனிமொழி, தங்கை செந்தாமரை மற்றும் மாமா சபரீசன் ஆகியோரை கட்டித்தழுவி வாழ்த்து பெற்றார்.

அப்போது அங்கே இருந்த உதயநிதி மகள் தன்மயா, ஷேர் மீது ஏறி நின்று அப்பாவை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்தார். மகள் கொடுத்த இந்த திடீர் பரிசால் உதயநிதி முகத்தில் சின்ன ஒரு புன்னகை எட்டிப்பார்த்தது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது... 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்