கடலூர் மாவட்டம் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 4பேர் பலியான நிலையில் அவர்களது குடும்பத்தினருக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம், எம். புதூர் பகுதியில் இயங்கி வந்த தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், மூன்று பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் வந்துள்ள செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். எனது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்கள் பூரண குணமடைந்து இல்லம் திரும்ப வேண்டும் என்று எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும், மேற்படி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் உரிய நிவாரண உதவியை வழங்கவும், அடிக்கடி நடைபெறும் பட்டாசு விபத்தினைத் தடுக்கவும் தமிழ்நாடு அரசு தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…