Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Viral Video: 'அன்பை பகிருங்கள்' என வலியுறுத்தும் சோனு சூட்..... யாருக்குனு தெரியுமா...?

Manoj Krishnamoorthi October 05, 2022 & 10:55 [IST]
Viral Video: 'அன்பை பகிருங்கள்' என வலியுறுத்தும் சோனு சூட்..... யாருக்குனு தெரியுமா...?Representative Image.

திரையில் வில்லன் நிஜத்தில் சூப்பர் ஹீரோ என்பதற்கு சிறந்த உதாரணம் நடிகர் சோனி சூட், கோவிட் லாக்டவுன் காலத்தில் மக்களுக்கு பல உதவிகளை செய்து மக்கள் மத்தியில் மனிதநேயம் தான் பெரியது என்று நிரூபித்து காட்டியவர். தற்போது இவர் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட ஒரு விடியோ சமுக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இரயில் நிலையத்தில் அமர்ந்து கொண்டு நாய் ஒன்றுடன் விளையாடி கொண்டு இருக்கும் சோனு சூட். தன் சமுக வலைத்தள ரசிகர்களுக்கு நம் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கு அளிக்கும் அன்பை போல இந்த குரல் எழுப்பமுடியாத நண்பனிடமும் அன்பை பகிருங்கள் என வலியுறுத்தி உள்ளார். 

மேலும், தன் கொஞ்சி விளையாடும் இந்த தெருநாயை தன்னுடன் வைத்து வளர்க்கப்போவதாகக் கூறி, நீங்களும் உங்களால் முடிந்த அன்பை இந்த பிராணிகளுக்கு அளியுங்கள் என்று விடியோவில் கேட்டு கொண்டார். 4 நாட்களுக்கு முன்பு இவர் வெளியிட்ட இந்த வீடியோ 1 மில்லியன் வியூஸ்களை கொண்டு பலரின் ஆதரவை பெற்றுள்ளது. நாம் அனைத்து உயிரையும் சக உயிராக மதித்து அக்கறை காட்ட வேண்டும் என்ற இவரின் கருத்து அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும்.  

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்