Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குற்றாலத்தில் செயற்கை நீர்வீழ்ச்சிகளை இடிக்கும் பணி தீவிரம்..!

Bala August 24, 2022 & 13:57 [IST]
குற்றாலத்தில் செயற்கை நீர்வீழ்ச்சிகளை இடிக்கும் பணி தீவிரம்..!Representative Image.

நீரோடைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள செயற்கை நீர்வீழ்ச்சிகளை இடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட மேக்கரை வனப்பகுதியில் இருந்து நீரோடைகள் பாய்ந்து அடவிநையினார் அணை மற்றும் பண்பொழி இலத்தூர் சீவநல்லூர் கரிசல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குளங்களுக்கு சென்று விவசாயத்திற்கு பயன்படுகிறது.

இந்நிலையில் மேக்கரை பகுதியில் நீர் வழித்தடங்களை மறித்து, சிலர் தடுப்பணை போல் அமைத்து அதை நீர்வீழ்ச்சியாக உருவாக்கியுள்ளனர். மேலும் சுற்றுலா பயணிகளிடம் கட்டணங்கள் வசூல் செய்து செயற்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க பயன்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து வந்த புகாரின் பேரில், பொதுப்பணித்துறையினர் மற்றும் வனத்துறையினர் மேக்கரை பகுதி நீரோடைகளில் கட்டியுள்ள தடுப்பணைகள் குறித்து ஆய்வு செய்ததில், 20க்கும் மேற்பட்ட நபர்கள் நீரோடையில் தடுப்பணை கட்டி அதை நீர்வீழ்ச்சியாக உருவாக்கி சுற்றுலா பயணிகளிடம் வசூல் செய்தது தெரிய வந்தது.

இதனையடுத்து நீர் வழித்தடங்களில் மறித்து கட்டப்பட்ட தனியார் அருவிகள் அனைத்தையும் இடித்து அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக தனியார் அருவிகள் அனைத்தும் இடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்