Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தொடர் விடுமுறை.. பஸ் ஸ்டாண்டில் குவியும் மக்கள்.. கூடுதல் பேருந்துகள் இயக்கம்!!

Sekar October 01, 2022 & 15:29 [IST]
தொடர் விடுமுறை.. பஸ் ஸ்டாண்டில் குவியும் மக்கள்.. கூடுதல் பேருந்துகள் இயக்கம்!!Representative Image.

திருவிழாக்களை முன்னிட்டு தொடர் விடுமுறை வருவதால், இன்று முதல் தமிழகத்தில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருவிழாக்களும் வரிசையாக வருகின்றன. நவராத்திரி, விஜயதசதி, ஆயுத பூஜை என்று தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் சென்று வரவும் பலரும் திட்டமிட்டு வருகின்றனர். 

கடைசி நேரத்தில் ரயில் டிக்கெட் கிடைக்காதது, தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் போன்ற சிக்கலை மக்கள் எதிர்கொண்டு வரும் நிலையில், மக்கள் எளிதாக சென்று வரும் வகையில் அரசு சார்பில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் தசரா பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில், எஸ்இடிசி சார்பில், இன்று அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை, சென்னையிலிருந்து திருச்செந்தூர், குலசேரப் பட்டினத்திற்கும் மற்றும் கோயம்புத்தூரிலிருந்து திருச்செந்தூர், குலசேரப் பட்டினத்திற்கும் தினசரி  கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் பண்டிகை முடியும் நாட்களிலும் அக்டோபர் 6 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளுக்கு மட்டுமல்லாமல் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி விடுமுறை தினங்களைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் அரசு போக்குவரத்து கழகத்தால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்