Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Best Place To Put Ganesh Statue In Home : வீட்டில் எந்த திசையில் விநாயகர் சிலையை வைக்கலாம்....!

Manoj Krishnamoorthi August 23, 2022 & 17:00 [IST]
Best Place To Put Ganesh Statue In Home : வீட்டில் எந்த திசையில் விநாயகர் சிலையை வைக்கலாம்....!Representative Image.

ஈசனின் மகன் விக்னேஸ்வரனின் பார்வை நம் மீது இருந்தால் எந்த சங்கடமில்லாமல் வாழலாம், நமக்கு இமை நோகும் சங்கடம் வந்தாலும் கணபதி சங்கடங்களைத் தீர்த்து இன்பமான வாழ்வு அளிக்கும்.  பெரும்பாலும் நாம் வீட்டில் இறைவன் புகைப்படம் தான் வைத்திருப்போம்.

எந்த வீடாக இருந்தாலும் விநாயகர் படம் இருக்கும், நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கு முழுமுதற் கடவுள் விநாயகர் தான். வீட்டில் விநாயகர் சிலை இருப்பது நம் வாழ்வை வளமாக்கும், ஆனால் இந்த இடத்தில் இருக்க வேண்டும் என்பது தான் ஐயமாக இருக்கும். உங்கள் கேள்விக்கு இந்த பதிவு பதிலளிக்கும்.

வீட்டில் எங்கு வைக்க வேண்டும் ( Veetil Vinayagar Silai Vaikum Thisai)

  • நம் வீட்டின் கிழக்கு அல்லது மேற்கு திசையில் விநாயகரை வைத்து வணங்குவது குறையாத செல்வம் அளிக்கும். அதுவும் வடகிழக்கு திசையில் இருந்தால் மிகவும் நன்மை ஆகும்.
  • நம் வீட்டின் மையப் பகுதியில் விநாயகர் சிலை வைப்பதாக இருந்தால் விநாயகர் சிலையின் பின்புறம் வாசலை நோக்கியபடி இருத்தல் வேண்டும்.

வீட்டில் வைக்க கூடாத இடங்கள் (Veetil Vinayagar Silai Vaika Kudatha Thisai)

  • பொதுவாக விநாயகரின் பின்புறம் வறுமையை குறிக்கும், எனவே நம் வீட்டின் முற்றத்திலோ அல்லது நடுப்பகுதியிலோ இருக்கும்போது விநாயகர் வாசலை நோக்கியபடி வைக்கக் கூடாது. முடிந்த வரை விநாயகர் பின்புறம் வீட்டின் வெளிப்புறத்தை நோக்கியபடி இருக்க வேண்டும்.
  • வீட்டின் தென்புறம் என்பது தெய்வீக திசையாகப் பார்ப்பது இல்லை, எனவே வீட்டில் தென்பகுதியில் விநாயகரை வைக்க வேண்டாம்.
  • வீட்டின் மாடிப்படி போன்ற இடத்திற்கு அடியில் விநாயகர் மட்டுமில்லை எந்த தெய்வ புகைப்படமோ அல்லது சிலையோ வைக்கக் கூடாது,  அது துரதிஷ்டத்தை உருவாக்கும்.
  • வீட்டின் கழிவறை நாம் வைக்கும் விநாயகரை நோக்கி இருக்க கூடாது.
  • வீட்டில் படுக்கை அறையில் வைப்பதை தவிர்க்க வேண்டும், ஒருவேளை இருந்தால் இரவு நேரத்தில் தூங்கும் முன் ஒரு வெள்ளை துணி கொண்டு விநாயகர் சிலை மூடி வைக்க வேண்டும். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்