Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Vinayagar Prathistai : வீட்டில் விநாயகர் சிலை இந்த மாதிரி பிரதிஷ்டை செய்து வழிப்பட்டால் தான் நன்மையா…!

Manoj Krishnamoorthi August 23, 2022 & 15:20 [IST]
Vinayagar Prathistai : வீட்டில் விநாயகர் சிலை இந்த மாதிரி பிரதிஷ்டை செய்து வழிப்பட்டால் தான் நன்மையா…!Representative Image.

நம் இந்திய திருநாட்டில் முழுவதும் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும் விழா விநாயகர் சதுர்த்தி ஆகும். இந்த விழாவின் முக்கியமான சடங்கு என்றால் சதுர்த்தி தின பூஜையின் மூன்றாவது நாள் விநாயகர் சிலையை நீரில் விடுவதாகும். இந்த மூன்று நாட்களுமே கணபதியின் விழா தான் தினமும் விநாயகருக்கு நைவேத்தியம் செய்து சிறப்பான வழிபாடு நடக்கும்.  விநாயகர் சதுர்த்தி சிலையை எப்படி பிரதிஷ்டை செய்வது என்பதற்கான பதில்  இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யும் முறை (Veetil Vinayagar Prathistai Murai In Tamil)

பெரும்பாலும் விநாயகர் சதுர்த்தி அன்று மட்டுமே நாம் சிலையை வீட்டில் வைத்து பூஜை செய்வோம் மற்ற நேரங்களில் திருவுருவத்தைப் படமாக வைத்து தான் வழிபாடு செய்வோம். பொதுவாக சிலை வடிவ வழிபாடு என்றால் அதை முறையான பிரதிஷ்டை முறையில் பின்பற்ற வேண்டும். இவ்வாசகத்தில் நாம் விநாயகர் சதுர்த்தி சிலை எவ்வாறு பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும் என்பதைக் காணலாம்.

நம் வீட்டில் வாஸ்துக்காக விநாயகர் சிலை இருந்தாலோ அல்லது பூஜை அறையில் போட்டோவுக்கு பதில் சிலை ஆராதனை செய்வதாக இருந்தால் கீழ்வரும் வழியில் வழிபாடு செய்தால் நிச்சியம் பலன் பெறலாம். சிலை வடிவ வழிபாட்டில் இறைவனுக்கு அபிஷேகம் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும், தினமும் அபிஷேகம் செய்து ஆராதனை செய்ய முடியாத நிலையில் புதன்கிழமையில் அல்லது வெள்ளிக்கிழமைகளில் அபிஷேகம் செய்து ஆராதனை செய்தல் வேண்டும்.  

  • சிலை நீரினால் சுத்தம் செய்ய வேண்டும், பின்னர் பஞ்ச பூதங்களுக்கு இணையான பால், தயிர், தேன், நெய், வாழைப்பழம் நிச்சியம் இடம் பெற்று இருக்க வேண்டும். 
  • முதலில் பால் ஊற்றி அபிஷேகம் செய்வது பஞ்ச பூதங்களில் நீருக்கு இணையாகும். அடுத்ததாக தயிர் நிலத்தைக் குறிக்கும். நெய் நெருப்புக்கு இணையாகக் கூறப்படும். தேன் ஆகாயத்தையும் வாழைப்பழத்தால் செய்த பஞ்சாமிர்தம் காற்றையும் குறிக்கும். 
  • மேற்குறிப்பிட்ட 5 பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்த பின்னர், தீபாராதனை செய்தல் வேண்டும்.

விநாயகர் சதுர்த்தி அன்று நாம் வாங்கி வந்த விநாயகர் சிலை நீரினால் சுத்தம் செய்து கொள்ள வேண்டும், பெரும்பாலும் நாம் மண் சிலையே பயன்படுத்துவதால் நீரில் தொட்டு லேசாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும். 

பின்னர் ஒரு வாழை இலையை வைத்து அவல், பொரிகடலை, பழங்கள், தேங்காய் மற்றும் கொழுக்கட்டை போன்றவற்றைப் படைத்து பூஜைக்குரிய நேரத்தில் பூஜை செய்வது நன்மை அளிக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்