Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சந்திர கிரகணம் 2023 எப்போது? தேதி, நேரம் குறித்து முழுத்தகவல்.. | Chandra Grahanam 2023 Timings

Nandhinipriya Ganeshan Updated:
சந்திர கிரகணம் 2023 எப்போது? தேதி, நேரம் குறித்து முழுத்தகவல்.. | Chandra Grahanam 2023 TimingsRepresentative Image.

சூரியன், பூமி மற்றும் சந்திரன் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் போது 'சந்திரம் கிரகணம்' ஏற்படுகிறது. அதாவது, சூரியன் மற்றும் சந்திரம் இடையே ஒரே நேரக்கோட்டில் பூமி வருவதால் பூமியின் நிழல் சந்திரன் மீது விழுந்து மறைக்கப்படும் நிகழ்வே 'சந்திர கிரகணம்' என்று அழைக்கப்படுகிறது. அந்தவகையில், இந்த ஆண்டிற்கான முதல் சந்திர கிரகணம் எப்போது என்பதை தெரிந்துக்கொள்வோம்.

சந்திர கிரகணம் 2023 எப்போது?

2023 ஆம் ஆண்டிற்கான முதல் சந்திர கிரகணம் வருகின்ற மே 5ஆம் தேதி வெள்ளிக்கிழமை சித்திரை பௌர்ணமி அன்று ஏற்படுகிறது. இந்த கிரகணம் பகுதி சந்திர கிரகணமாக ஏற்பட உள்ளது.

பகுதி சந்திர கிரகணம் என்றால் என்ன? 

சூரியன், பூமி, நிலவு மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, நிலவின் மீது விழக்கூடிய சூரியனின் ஒளியை பூமி முழுமையாக மறைத்தால் முழு சந்திர கிரகணம் எனவும், பகுதி அளவு மறைத்தால் பகுதி சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது. முழு சந்திர கிரகணத்தின் போது, ​​சந்திரன் பூமியின் குடை அல்லது கூம்பு வடிவ நிழலால் முற்றிலும் மறைக்கப்படும். 

எங்கெல்லாம் பார்க்கலாம்?

இந்த ஆண்டு நிகழக்கூடிய பகுதி சந்திர கிரணம் உலகின் பெரும்பாலான இடங்களில் தெரியும் என்று சொல்லப்படுகிறது. அந்தவகையில், ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, அண்டார்டிகா ஆகிய 5 கண்டங்களில் வசிப்பவர்கள் இந்த பகுதி சந்திர கிரகணத்தை பார்க்க முடியும். மேலும் பசுபிக் அட்லாண்டிக், இந்திய பெருங்கடல் ஆகிய இடங்களில் தெளிவாக இந்த சந்திர கிரகணம் பார்க்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்திர கிரகணம் 2023 நேரம்:

இந்த பகுதி சந்திர கிரகணம் இந்திய நேரப்படி, மே 5 ஆம் தேதி இரவு 8 மணி 44 நிமிடம் 11 நொடியில் [08.44.11 PM] தொடங்குகிறது. மேலும், இந்த கிரகணத்தின் உச்ச கிரகணம் இரவு 10 மணி 52 நிமிடம் 59 நொடியில் [10.52.59 PM] ஏற்படும். பிறகு, மே 6 ஆம் தேதி அதிகாலை 01.01.45 மணிக்கு நிறைவடைய உள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்