Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சித்ரா பௌர்ணமி 2023 கிரிவலம் செல்லும் நேரம், தேதி மற்றும் முழு விவரங்கள்..! | Chitra Pournami 2023 Girivalam

Gowthami Subramani Updated:
சித்ரா பௌர்ணமி 2023 கிரிவலம் செல்லும் நேரம், தேதி மற்றும் முழு விவரங்கள்..! | Chitra Pournami 2023 GirivalamRepresentative Image.

தமிழகத்தின் மிகப் பழமையான கோவில்களில் ஒன்றாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலும் ஒன்றாகும். திருவண்ணாமலை என்றாலே கிரிவலம் செல்வது தான் அனைவருக்கும் நினைவில் வரும். அந்த வகையில், ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு கிரிவலம் செல்வர். இந்த 2023 ஆம் ஆண்டின் சித்ரா பௌர்ணமி தினத்தில் கிரிவலம் செல்வது குறித்து இதில் காணலாம்.

சித்ரா பௌர்ணமி 2023 கிரிவலம் செல்லும் நேரம், தேதி மற்றும் முழு விவரங்கள்..! | Chitra Pournami 2023 GirivalamRepresentative Image

திருவண்ணாமலை கிரிவலம்

திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இது சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில் ஆகும். இது பிரபஞ்சத்தை உருவாக்கிய பஞ்சபூதங்களை அடிப்படையாகக் கொண்டதாகும். அதன் படி, திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் சிவ பெருமான் பஞ்ச பூதங்களில் ஒன்றான நெருப்பைக் கொண்டவர். மற்ற நான்கு கூறுகள் நீர், மண், காற்று, வாயு ஆகும். இந்த அழகிய கோவில் ஆனது, திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் 80 கிலோவிற்கு உட்பட்ட அண்ணாமலை மலையின் அடிவாரத்தில் உள்ளது.

சித்ரா பௌர்ணமி 2023 கிரிவலம் செல்லும் நேரம், தேதி மற்றும் முழு விவரங்கள்..! | Chitra Pournami 2023 GirivalamRepresentative Image

அஷ்டலிங்க தரிசனம்

திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் போது, கிரிவலம் செல்லும் பாதையில் அஷ்டலிங்கம் எனப்படும் எட்டு லிங்கங்கள் உள்ளன. அவை இந்திரலிங்கம், அக்னிலிங்கம், யமலிங்க, நிருத்திலிங்கம், வருணலிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம் மற்றும் ஈசன்யலிங்கம் ஆகும். இந்த ஒவ்வொரு லிங்கமும் பக்தர்களுக்கு பல்வேறு விதமான பலன்களைத் தருகின்றன. கிரிவலம் செல்லும் போது முதல் லிங்கம் இந்திர லிங்கம் உள்ளது. இந்த லிங்கத்தை வழிபடுபவதால் பக்தர்களுக்கு பல விதமான நன்மைகள் கிடைக்கும்.

சித்ரா பௌர்ணமி 2023 கிரிவலம் செல்லும் நேரம், தேதி மற்றும் முழு விவரங்கள்..! | Chitra Pournami 2023 GirivalamRepresentative Image

கிரிவலம் செல்லும் போது பின்பற்ற வேண்டியவை

கிரிவலம் செல்லும் போது, பக்தர்கள் வெறுங்காலுடன் மட்டுமே செல்ல வேண்டும்.

கிரிவலம் வழியாக கிரிவலத்தின் உச்சியைப் பார்க்கவும்.

அதே சமயம், பௌர்ணமி இரவுகளில் மட்டும் கிரிவலம் மேற்கொள்ள வேண்டும். சாதாரண இரவுகளிலும் கிரிவலம் செல்வதும் நல்லது. ஆனால், பௌர்ணமியில் கிரிவலம் செல்வது சிறப்பைத் தரும்.

கிரிவலம் செல்பவர்கள் ஓம் அருணாச்சலா அல்லது ஓம் நமச்சிவாய என்ற சிவ நாமத்தை உச்சரிக்க வேண்டும்.

சித்ரா பௌர்ணமி 2023 கிரிவலம் செல்லும் நேரம், தேதி மற்றும் முழு விவரங்கள்..! | Chitra Pournami 2023 GirivalamRepresentative Image

சித்ரா பௌர்ணமி கிரிவல நேரம்

சித்ரா பௌர்ணமி தினத்தில் கிரிவலம் செல்லக் கூடிய நேரம் ஆனது மே 4, 2023 இரவு 11.59 மணி முதல் மே 5, 2023 இரவு 11.33 மணி வரை ஆகும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்