Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Chidambaram Natarajar Kovil: அண்டத்தின் பரம்பொருள் ஈசன் ஜெகத்தில் மையத்தில் கொண்ட தில்லை சிற்றம்பலத்தின் அறியா சிறப்புகள்!

Manoj Krishnamoorthi May 19, 2022 & 12:50 [IST]
Chidambaram Natarajar Kovil: அண்டத்தின் பரம்பொருள் ஈசன் ஜெகத்தில் மையத்தில் கொண்ட தில்லை சிற்றம்பலத்தின் அறியா சிறப்புகள்!Representative Image.

உலகமே கண்டு வியந்த தில்லை பெருமான் கோவில் பூமியின் மத்தியில் இருப்பதும், சிவபெருமானின் கால் பெருவிரல் நோக்கும் இடமே பூமியின் மையம் என்பது நாம் அறிந்த  செய்தியாகும், ஆனால் நம்மில் பலபேர் அறியாத பல அற்புதங்களை அடக்கியது தில்லை  சிற்றம்பலம் நடராஜப் பெருமான் கோவில் ஆகும். அதைப் பற்றிய அறிய வேண்டும் என்ற எண்ணம் துடிக்கிறதா அப்போது இந்த ஆன்மீக வாசகத்தைப் பின்தொடருங்கள். 

தில்லை சிற்றம்பலம் நடராஜ பெருமான் தலம் ( Chidambaram Natarajar Kovil)

உலகின் மூலப்பொருளான  சிவபெருமானின் ஆலயம் எண்ணற்றதாகும், ஆனால் சிவபெருமான் உருவமாகக் காட்சியளிக்கும் திருத்தலம் சிதம்பரத்தில் அமைந்துள்ள இந்த தளமாகும். மிகவும் பிரசத்தி பெற்ற சிதம்பர கோயில்  சிற்பம் கலையிலும் புகழ் பெற்றதாகும், கிபி 10 ஆம் நூற்றாண்டில்  சோழர்களால் உருவாக்கப்பட்டதாகும் சிதம்பரநாதனின் திருக்கோவிலாகும். 

தென் இந்தியாவின் பழமையான கோவில்களுள் ஒன்றான தில்லை நாதனின் திருக்கோயில் தனித்துவமான ஒரு சிறப்பு என்றால் அது ஈசனின் சிலையாகும். 5000 வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட திருக்கோயில் பல சிறப்புகளையும் கொண்டதாகும்,  அதை விரிவாகக் காண்போம்.

சிறப்பு 1:

 தஞ்சை பெரிய கோயிலுக்கு இணையான சிறப்பைக் கொண்டது இந்த கோயிலின் கோபுர விமானமாகும், தஞ்சை கோயிலின் கனமான விமானம் அதிசயம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை அதேபோன்ற சிறப்பை கொண்டது தில்லை சிதம்பர நாதனின் தங்கத்தால் ஆன மேற்தளம், நிலை கொண்டியிருக்கும் 21,600 தங்கத் தாள்கள் ஒரு மனிதன் ஒவ்வொரு நாளும் எடுக்கும் 21600 சுவாசங்களைக் குறிக்கும்(15 x 60 x 24 = 21600) என்பது எவ்வளவு பெரிய தொழில்நுட்பம் ஆகும்.    

மேலும், இந்த 21600 தங்கத் தாள்கள் "விமானம்" (கூரை) மீது 72000 தங்க ஆணிகளைப் பயன்படுத்தியிருப்பது மனித உடலில் உள்ள நாடிகளின் (நரம்புகள்) எண்ணிக்கையைக் குறிக்கிறது.   

சிறப்பு 2:

மனிதன் சிவலிங்கத்தின் வடிவத்தைக் குறிக்கிறான் என்றும் அந்த மனித உடல் சிதம்பரத்தைக் குறிக்கிறது என்றும் அதுவே  சதாசிவம் எனத்   திருமூலர் கூறுகிறார், அத்துடன்  சதாசிவம்  சிவபெருமானின் நடனத்தைக் குறிக்கும். சிவபெருமானின்  நடனம் காஸ்மிக் நடனம் என மேல்நாட்டு விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளது சிறப்பாகும்.

சிறப்பு 3:

சபைகள் என்பது அரசு சம்பந்தப்பட்ட அரண்மனையிலும் அரசாங்க இடத்திலுமே தான் இருக்கும், ஆனால் ஐந்து சபைகள் கொண்ட பெருமைமிக்க திருக்கோயில்  சிதம்பரமாகும், சைவ திருக்கோவிலாக இருந்தாலும் வைணவத்தின் முக்கியத்துவத்தையும் குறிக்கிறது. சித்சபை, கனக சபை, தேவசபை, நிருத்த சபை, ராஜ சபை என ஐந்து சபைகளைக் கொண்டதாகும்.  

இதுபோன்ற  ஆன்மீக சுவாரஸ்ய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்