Fri ,Apr 26, 2024

சென்செக்ஸ் 73,811.76
-527.68sensex(-0.71%)
நிஃப்டி22,438.30
-132.05sensex(-0.59%)
USD
81.57
Exclusive

திருப்பதி ஏழுமலையானுக்கு மற்றொரு புதிய கோவில்.. | Jammu Tirupati Balaji Temple

Nandhinipriya Ganeshan Updated:
திருப்பதி ஏழுமலையானுக்கு மற்றொரு புதிய கோவில்.. | Jammu Tirupati Balaji TempleRepresentative Image.

உலகப் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக திகழ்வது திருப்பதி வெங்கடாஜலபதி கோவில். ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் திருமலையில் அமைந்துள்ள இந்த கோவிலில் அருள்பாலிக்கும் திருப்பதி வெங்கடாஜலபதிக்கு பாலாஜி, பெருமாள், வெங்கடேச பெருமாள், சீனிவாச பெருமாள், ஏழு மலையான் என பல பெயர்கள் உண்டு. சர்வதேச அளவில் பணக்கார கோவில்களில் ஒன்றாகவும் திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு உலகளவில் இருந்தும் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். அதுவும் விடுமுறை நாட்களில் பெருமாளின் தரிசனம் கிடைக்க கிட்டத்தட்ட 10 நாட்களாவது காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல், அனைத்து மக்களாலும் திருப்பதிக்கு செல்ல முடியாமலும் போய்விடுகிறது. இதைக் கருத்தில் கொண்டு திருப்பதி தேவஸ்தானம் திருப்பதி ஏழுமலையான் கோவில் போலவே நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கோவில்களை கட்டி வருகிறது. 

திருப்பதி ஏழுமலையானுக்கு மற்றொரு புதிய கோவில்.. | Jammu Tirupati Balaji TempleRepresentative Image

அந்தவகையில், இதுவரை டெல்லி, சென்னை, ஹைதராபாத், கன்னியாகுமரி மற்றும் புவனேஷ்வர் ஆகிய ஐந்து இடங்களில்  திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானத்தால் கட்டப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து தற்போது திருப்பதி ஏழுமலையானுக்கு ஆறாவது கோவிலாக ஜம்மு காஷ்மீரில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. ஜம்முவில் அமைந்துள்ள மஜீனில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் ஷிவாலிக் காடுகளுக்கு மத்தியில் 62 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ.33 கோடி செலவில் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால், ஜம்முவில் இதுவரை கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய கோவில்களில் ஒன்றாகவும் இந்த கோவில் உள்ளது. 

திருப்பதி ஏழுமலையானுக்கு மற்றொரு புதிய கோவில்.. | Jammu Tirupati Balaji TempleRepresentative Image

புகழ்பெற்ற வைஷ்ணோ தேவி கோவில் அமைந்திருக்கும் ஜம்மு-கத்ரா பகுதிகளுக்கு இடையே இந்த ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது. வட இந்தியாவில் உள்ள ஒரே வெங்கடேஸ்வரா கோவில் இது தான். ஒன்றரை வருட காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவில் அப்பகுதியில் ஆன்மீக சுற்றுலாவை மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திராவில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரதிபலிப்பாக விளங்கும் இந்த கோவிலிலும் லட்டு பிரசாதமாக வழங்கப்படும். ஆக இனி ஆந்திராவிற்குச் செல்ல முடியவில்லையே என்ற கவலையே வேண்டாம். 

இடம்: ஜம்முவில் அமைந்திருக்கும் திருப்பதி பாலாஜி கோவிலானது, குஞ்ச்வானி - மாலிக் மார்க்கெட் - நர்வால் - சித்ரா சாலை வழியாக ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையுடன் ஜம்மு-பதான்கோட் நெடுஞ்சாலையை இணைக்கும் பைபாஸ் பகுதியில் அமைந்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்