Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Coimbatore to Shirdi Train Booking Online: இனி கோயம்புத்தூர் டூ சீரடி ஸ்பெஷல் ரயில்..! ரயில்வே நேரம், கட்டணம், ரயில் வசதிகள் அனைத்து விவரங்களும் இங்கே..!

Gowthami Subramani June 15, 2022 & 20:10 [IST]
Coimbatore to Shirdi Train Booking Online: இனி கோயம்புத்தூர் டூ சீரடி ஸ்பெஷல் ரயில்..! ரயில்வே நேரம், கட்டணம், ரயில் வசதிகள் அனைத்து விவரங்களும் இங்கே..!Representative Image.

Coimbatore to Shirdi Train Booking Online: ரயில்கள் தனியார்மயமாக்குதலுக்கு உட்படக்கூடாது எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது கோயம்புத்தூரிலிருந்து நேரடியாக ஷீரடிக்கு தனியார் ரயில் ஒன்று செல்லும்படியாக அறிவிக்கப்பட்டுள்ளது (Coimbatore to Shirdi Train).

ஷீரடி கோவில்

பல்வேறு நாடுகளில் உள்ள வெவ்வேறு பகுதிகளில் இருந்து மகாராஷ்டிராவில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு பக்தர்கள் வருகை தருகின்றனர் (Coimbatore to Shirdi Train Distance).

அதன் படி, தமிழகத்தில் உள்ள கோவை மாவட்டத்தில் இருந்து ஷீரடிக்கு கோவிலுக்கு நேரடியாக ரயில் விட வேண்டும் என பல ஆண்டுகளாகவே பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அந்த வகையிலேயே, தற்போது கோவையிலிருந்து சீரடிக்கு தனியார் சிறப்பு ரயில் ஒன்று இயக்கப்பட்டுள்ளது (Coimbatore to Shirdi Train Booking Online).

தனியார் ரயில் அனுமதி

பிரதமர் மோடி அவர்களின் “பாரத் கபூர்” என்ற திட்டத்தின் மூலம், 5 நகரங்களில் இருந்து ஷீரடிக்கு தனியார் ரயில் ஒன்று இயக்கப்படுவதற்கு ரயில்வே துறை அனுமதி அளித்துள்ளது. அதன் படி, நமது தமிழகத்தில் உள்ள கோயம்புத்தூரில் இருந்தும் ஷீரடிக்கும் ரயில் விடப்பட்டுள்ளது (Coimbatore to Shirdi Train NO). மேலும், கோவையிலிருந்து சீரடிக்கும், சீரடியிலிருந்து கோவைக்கும், வாரம் ஒரு முறை இந்த ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் வசதி

மேலும், இந்த சிறப்பு ரயில் ஆந்திர மாநிலத்தில் உள்ள மந்த்ராலயா வழியாக செல்வதால், அந்த பகுதியில் இருந்து செல்லும் பக்தர்களுக்கும் இந்த ரயில் வசதி மிகச் சிறப்பாக இருக்கும். அது மட்டுமில்லாமல், இந்த தனியார் ரயில் தூய்மையாகவும், சர்வதேச தரத்தில் விருந்தோம்பலும் இருக்கும் என தகவல்கள் வெளிவந்துள்ளன. அதனைத் தொடர்ந்து முதல் ரயிலில் 1,100 பேர் பயணம் செய்தனர் எனவும் கூறப்படுகிறது (Coimbatore to Shirdi Train Route Map).

ரயில் பயண நேரம்

கோவையிலிருந்து சீரடி செல்லும் ரயில் சேவை வடக்கு பகுதியில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்ட மறுநாள் காலை 07.25 மணிக்கு ஷீரடி நகரத்தைச் சென்றடையும் (Coimbatore to Shirdi Private Train Timings). மேலும், ஒரு நாள் இடைவெளிக்குப் பின்னர், மீண்டும் ஷீரடியில் இருந்து கோவை வந்தடையும். மேலும், இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, பெங்களூர், தர்மபுரம், மந்திராலயா ஆகிய ரயில் நிலையங்களில் நிற்கும் (Tiruppur to Shirdi Train Ticket Price).

ரயில் நிலையக் கட்டணம்

தனியார் ஸ்பெஷல் ரயிலுக்கான வசதிகளைப் பொறுத்து மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது (Coimbatore to Shirdi Train Ticket Price). அந்த வகையில், ரயிலுக்கான கட்டணம் படுக்கை வசதி கொண்ட டிக்கெட் ரூ.5,000,  இரண்டு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிக்கு ரூ.7,000 முதல், குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிக்கு ரூ. 10,000-உம் ரயில் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது (Coimbatore to Shirdi Train Bharat Gaurav).

இந்த தனியார் ரயில் சேவை, அனுபவமுள்ள ஹவுஸ் கீப்பிங் ஊழியர்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது (Tiruppur to Shirdi Train Ticket Price). மேலும், பயணிகள் பயன்படுத்தக்கூடிய பகுதிகள் அனைத்தும் அடிக்கடி சுத்தம் செய்யப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், பாரம்பரிய சைவ உணவுகள் பயணிகளுக்கு அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது (Bharat Gaurav Train Booking).

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்