Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

108 Nanmaigal Kodukkum Vinayagar Kovil: 108 நன்மைகளைத் தரும் அதிசய கோயில் எங்கு உள்ளது என்று தெரியுமா..!

Manoj Krishnamoorthi June 13, 2022 & 17:00 [IST]
108 Nanmaigal Kodukkum Vinayagar Kovil: 108 நன்மைகளைத் தரும் அதிசய கோயில் எங்கு உள்ளது என்று தெரியுமா..!Representative Image.

மனித பிறவிகளான நாம் கனவுகள் பலவற்றை மனதில் சுமந்து இன்னல்கள் இல்லாத இன்பமான வாழ்வை வாழ நித்தமும் தன் மனமார நினைத்து கொண்டுதான் இருக்கிறான், ஆனால் விதி அவன் நினைக்கும் வண்ணம் வாழ்க்கை அனைத்து சமயத்திலும் தருவதில்லை. 

இப்படி தான் விரும்பியவை கிடைக்கவில்லை என்றாலும் சரி…! தான் விரும்புவது கிடைக்க வேண்டுமென்றாலும் அவன் சரணடையும் ஒரு திருவடி இறைவனாகும். இவ்வாசகத்தில் 108 நன்மைகளைத் தரும் 108 விநாயகர் அமைந்த ஒரு சிறப்பு வாய்ந்த திருத்தலத்தைக் காண்போம்.

108 விநாயகர் கொண்ட திருத்தலம்

சங்கடங்களைத் தீர்க்கும் குணம் கொண்ட கணேசன் கடவுள் முதற்முழு கடவுளாகும், அறிவு திறனிலும் சாதுரியத்திலும் வல்லவரான விநாயகர்  பக்தர்களின் குறையைத் தீர்த்து நல்வாழ்வு அளிக்கும் முதற்முழு கடவுளாகும்.

பக்தர்களின் குறையைத் தீர்த்து நிம்மதி வாழ்வினை அளிக்கும் விநாயகர் பெருமானுக்கு 108 சிலை கொண்ட கோவில் தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் கோபாலசமுத்திரக்கரை பகுதியில் உள்ளது. கடன் பிரச்சனையிலிருந்து விடுபடவும் குழந்தை பாக்கியம் கிடைக்கவும் இத்திருத்தலத்தில் நேர்த்திக்கடனாக பால்குடம் எடுக்கும் மக்கள் ஏராளமாகும்.

இத்திருத்தலத்தில் 2 அடி உயரத்தில் 108 விநாயகர் சிலை உள்ளது, அதை வணங்கி வந்தால் தீராத குறைகள் யாவும் தீரும் என்பது நம்பிக்கையாகும். இந்த திருக்கோயிலின் சிறப்புகளில் முக்கியமானது ஒன்று யாதனின் இங்குள்ள 16 அடி உயர கஜமுக விநாயகர் சிலை ஆகும். இத்திருக்கோவிலில் இருக்கும் 32 அடி உயர விநாயகர் சிலைக்கு,  கோவிலுக்கு விநாயகர் தரிசனம் பார்க்க வரும் பக்தர்களே  அபிஷேகம் செய்யலாம். 

சித்திரை முதல் தினத்தில் இத்திருக்கோவிலில் இருக்கும் சிவபெருமான் மீது சூரிய ஒளி விழுவது ஒரு அதிசயமாகும். மேலும், இத்திருத்தலத்தில் ஐயப்பன், அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மன், பெருமாள், பைரவர், தட்சணாமூர்த்தி சன்னதியும் உள்ளது.

மிகவும் விமர்சையாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் இந்த கோவிலில் பிரதோஷம், ஆகர்ஷண பைவருக்கு சிறப்பு வழிபாடு, தேய்பிறை அஷ்டமி, மகாசங்கடஹர சதுர்த்தி போன்ற வழிபாடுகளும் செய்யப்படுகிறது.

எப்படி செல்வது?

இத்திருத்திலத்திற்கு வர முதலில் திண்டுக்கல் வந்து சேரவும், அங்கு இருந்து சுமார் 2 கீ,மீ தொலைவில் இருக்கும் கோபாலசமுத்திரக்கரை என்னும் இடத்தை அடைய நிரைய பஸ் வசதியும், ஆட்டோ வசதியும் உள்ளது.

இதுபோன்ற ஆன்மீக செய்திகளை உடனுக்குடன்  தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்