Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மார்கழி பெளர்ணமி; பெருமாளுக்கு அன்ன பாவாடை அலங்காரம், சிறப்பு ஆராதனை!

KANIMOZHI Updated:
மார்கழி பெளர்ணமி; பெருமாளுக்கு அன்ன பாவாடை அலங்காரம், சிறப்பு ஆராதனை!Representative Image.

போடி சீனிவாச பெருமாள் கோவிலில் மார்கழி மாத பௌர்ணமி முன்னிட்டு பெருமாளுக்கு அன்ன பாவாடை அலங்கார அபிஷேக ஆராதனை நடைபெற்றது புளி சாதத்தால் நடைபாதை அமைக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

 

போடி  சீனிவாச பெருமாள் கோவிலில் மார்கழி மாத பௌர்ணமியை முன்னிட்டு பெருமாளுக்கு அன்ன பாவாடை அலங்கார நிகழ்ச்சி நடைபெற்றது 36 கிலோ படி அரிசி புளி சாதம் செய்யப்பட்டு பெருமாளுக்கு நடைபாதை அமைத்து சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றன.

 

சிவபெருமான் அபிஷேக அலங்கார பிரியர் பெருமாள் நெய்வேத்திய பிரியர் பெருமாளுக்கு தினம்தோறும் ஆகம முறைப்படி ஐதீகப்படி வைணவ கோவில்களில் தினமும் 36 கிலோ அரிசியால் நெய்வேத்தியம் செய்யப்பட வேண்டும் என்பது வழக்கம்.

 

ஆனால் வைணவ பெருமாள் கோவில்களில் யாரும் 36 கிலோ படி அரிசியில் நெய்வேத்தியம் செய்வதில்லை இதனால் மார்கழி மாத பௌர்ணமி அன்று பெருமாளுக்கு 36 கிலோ படி அரிசியில் புளி சாதம் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இவ்வாறு மார்கழி மாதத்தில்பெருமாளுக்கு அரிசியால் நெய்வேத்தியம் செய்தால் மலை வளம் பெருகி விவசாய பெருகும் என்பது ஐதீகம் . 

இதனால் ஒவ்வொரு பெருமாள் கோவில்களிலும் இன்று அன்னப்பாவாடை நிகழ்ச்சி நடைபெறுகிறது. அபிஷேக ஆராதனை முடிந்த பின் பக்தர்களுக்கு புளிச் சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்